'No one's dream will come true'; Who will try to break it? - Haleem, the new dreamer Photograph: (dmk alliance)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
ராமதாஸை திமுக கூட்டணியில் சேர்க்கக்கூடாது என்ற திருமாவின் எண்ணத்திற்கு திமுகவும் இன்னைக்கு உடன்பட்டதாக தான் பார்க்கிறேன். விஜய் உடன் ராமதாஸ் சேர்வது என்பது அவருக்கு நிச்சயமாக ஒரு சரியான முடிவு இல்லை. தேவையில்லாத முடிவுதான். ஆனால் அதற்கு வாய்ப்பு என்பது இருக்கிறது. ஆனால் அதைவிட பெருவாரியான வாய்ப்பு அவர் இந்த தடவை தேர்தலில் போட்டியிடாமல் சின்னத்தை முடக்கி வைத்து விட்டு தேர்தலை சந்திக்காமல் இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இன்னைக்கு விசிகவும் அதற்கான வழியை விட வில்லை என்பதால் திமுக நிச்சயம் ராமதாஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது. ஆனால் திமுக கூட்டணிக்கு ராமதாஸ் ஆதரவு கொடுக்கலாம். திமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவு. ஆனால் நாங்கள் போட்டியிடவில்லை. எங்க முடிவு வந்தால் யாரும் ஒன்னும் தடுக்க முடியாது.
என்டிஏவிற்கு எங்கள் ஆதரவு இல்லை. திமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவு என ராமதாஸ் முடிவு எடுத்தால் அது ஒரு டீசன்டான முடிவாக இருக்கும். தேர்தலில் விஜய் கட்சியோடு சேர்ந்து போட்டியிடுவதை விட நாங்கள் இந்த தேர்தலை சந்திக்க வில்லை. எங்கள் சின்னத்தை நாங்கள் மீட்பதுதான் எங்கள் முதல் வேலை, கட்சியை மீட்பதுதான் முதல் வேலை என ராமதாஸ் முடிவெடுத்து நாங்கள் இந்த தடவை போட்டியிடவில்லை. எங்கள் ஆதரவு என்டிஏ கூட்டணி கிடையாது, விஜய்க்கும் கிடையாது. திமுகவுக்கு எங்கள் ஆதரவு உண்டு எனச் சொல்லிவிட்டு போகலாம். அல்லது நாங்கள் யாருக்கும் ஆதரவு இல்லை. எங்களுடைய கட்சியை மீட்பதுதான் எங்கள் நோக்கம். எங்களுடைய சின்னத்தை மீட்பதுதான் நோக்கம் அதனால் மக்கள் தெளிவாக முடிவெடுத்துக் கொள்ளுங்கள். உங்க விருப்பப்படி முடிவு எடுத்துக்கோங்க என்று ராமதாஸ் சொல்லவும் வாய்ப்பு இருக்கிறது.
'எவன் கனவும் பலிக்காது' என செல்வப்பெருந்தகை தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் யாரை சொல்கிறார். கட்சிக்கு உள்ளே இருப்பவர்களையும் சொல்கிறார் வெளியே இருப்பவர்களையும் சொல்கிறார். அது முக்கியமான ஸ்டேட்மெண்ட்டாக பார்க்க வேண்டும். இரண்டாவது செல்வப்பெருந்தகை ஒன்னும் மூன்றாம் தர ஆள் இல்லை. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியுடைய தலைவர், இன்னைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் அவர் சொல்வது தான் சட்டம். அவர் மேலிடம் சொல்லாமல் எந்த வார்த்தையும் அவர் பயன்படுத்த முடியாது. அதனால் அவர் சொல்வதை நீங்க ஸ்ட்ராங்காக எடுத்துகொள்ளலாம். ஆனால் 'எவன் கனவும் பலிக்காது' என்றால் அதை உடைக்க முயற்சி செய்கிறார்கள் என்பது முக்கியமானது.
Follow Us