தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
haleem Photograph: (politics)

'ஒரு 16 விழுக்காடு சிறுபான்மை வாக்குகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதில் பெரும்பான்மை எல்லாம் திமுகவுக்கு தான் போயிட்டு இருந்துச்சு. அந்த 16 விழுக்காடு வாக்கில் இன்னைக்கு 10 விழுக்காட்டுக்கு மேல் தவெகவிற்கு பிரிந்து போயிடும். அது எங்களுக்கு சாதகம் என்று டி.டி.வி.தினகரன் நினைக்கிறார். ஒரு விஷயம் என்னவென்றால் சிறுபான்மை வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு வராது என்பதை அவர்களே நம்புகிறார்கள். ஆனால் விஷயம் என்னவென்றால் திமுகவோ, திமுக தலைமையோ, திமுக கூட்டணி தலைவர்களோ விஜய்யை பற்றி பெரிதாக பேசவில்லை. ஒரே வார்த்தைதான் பேசுனாங்க 'விஜய்க்கு ஊழலைபற்றி பேச தகுதி இல்லை' என்று பேசினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சியுடைய தலைவர் கூட 'விஜய்க்கு என்ன தகுதி இருக்கு ஊழலைப் பற்றி பேசுவதற்கு?' என்றார். விஜய்க்கு அந்த தகுதி இல்லை என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்கிறார். ஆனால் தன்னைத்தான் ஊழல்வாதி என்று சொன்னதால் அதிமுகவிற்கு ஏற்பட்ட கோபம் இருக்கு பாருங்க அது இரண்டாம் இடத்திற்கான போட்டியாக மாறிவிட்டது. எங்கே நம்மைவிட அதிக வாக்குகள் வாங்கி விடுவாரோ என்ற பயம் உண்மையில் அதிமுகவுக்கு இருக்கிறது. 

Advertisment

உண்மையை சொல்லப்போனால் அதிமுகவின் வாக்குகள் சிதைந்து சிதைந்து பல வழிகளில் விஜய் பக்கம் போகிறது. அதிமுக வாக்கு மட்டுமல்ல நாம் தமிழர்கள் இன்னைக்கு ஏன் கொதிக்கிறார்கள்? இன்னைக்கு நாம் தமிழருடைய பல்வேறு தலைவர்கள் ஏன் விஜய்யை டார்கெட் பண்ணி பேசுறாங்க. எல்லாருக்கும் பட்டவர்த்தனமாக தெரிகிறது. நாம் தமிழர் வாக்கு 8%. அது உடைஞ்சு அதில் நாலு விழுக்காட்டுக்கு மேல் விஜய்க்கு போகப்போகிறது. ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் பாராளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக மூன்றாவது இடம் போனது உண்மைதான். பலாப்பழம் சின்னத்தில் ஓபிஎஸ் இரண்டாம் இடத்துக்கு வந்தார். அவர் கிட்டத்தட்ட அதிகமான வாக்குகளை பெற்றார்.

அதை இன்னைக்கு ஒரு உதாரணமாக எடுத்து பேசுறாங்க. இன்னைக்கு நாமெல்லாம் (அதிமுக+அமமுக) சேர்ந்துட்டோம். அதனால் அந்த வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு அப்படியே வந்துவிடும் என்று நினைக்கிறார்கள். இன்னமும் ஓபிஎஸ் வெளியில் தான் இருக்கிறார். அமமுக கட்சி தொண்டர்களும் அதிமுக தொண்டர்களும் களத்தில் ஜெல் ஆகவில்லை. கடந்த ஒரு நான்கு ஆண்டுகளாக நீங்கள்  உங்கள் (அமமுக) தொண்டர்களை எப்படி பழக்கப்படுத்தி வெச்சு இருக்கீங்க? திமுகவைக்கூட நீங்க விமர்சிக்கவில்லை. ஆனால் எடப்பாடியை   காய்ச்சி காய்ச்சி ஊத்தி இருக்கீங்க.