சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான தோழர் நல்லகண்ணு (வயது 101) வயது மூப்பு காரணமாக சென்னை ரஜீவகாந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று (25.02.2026) மதியம் 01.55 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Advertisment
அவரது உடல் சென்னை தியாகராயர் நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு வைக்கப்பட்டுள்ள தோழர் நல்லகண்ணுவின் உடலுக்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அரசு மரியாதைக்கு பிறகு நல்லக்கண்ணுவின் உடல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்பட உள்ளது. தற்போது உடல் ஊர்வலமாக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டுசெல்லப்படுகிறது.
Advertisment
nallakannu at the age of 8 - Vaiko's treasure Photograph: (politics)
இன்று பல்வேறு தலைவர்களும் நல்லக்கண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நல்லகண்ணுவின் எட்டு வயது புகைப்படம் பற்றி பேசியிருந்தார். ''நல்லக்கண்ணு எட்டு வயதில் தாமிரபரணி ஆற்றங்கரையில் கட்டப்பட்ட பால திறப்பு விழாவில் கலெக்டரும், ஜில்லா போர்டு தலைவரும் இருக்கும் கூட்டத்தில் ஒரு ஓரமாக நிற்கும் போட்டோவை புதுக்குடியில் இருக்கக்கூடிய தேநீர்க்கடை உரிமையாளர் ஒருவர் வைத்திருந்தார். இந்த 8 வயது சிறுவன் யார் தெரியுமா? தலைவர் நல்லகண்ணு என்று சொன்னார்.
அந்த புகைப்படத்தை எடுத்துச் சென்று என் கிராமத்து வீட்டில் வைத்திருக்கிறேன். 8 வயது நல்லகண்ணு அரைக்கால் சட்டை போட்டுக் கொண்டிருக்கும் மாணவனாக நின்று கொண்டிருக்கிறார். அவருக்கு மரணம் இல்லை'' என்றார்.
அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் அவரது இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழா கொண்டாட்டம் குறித்த ஆவணத் தொகுப்பு 'தை திருநாள்.. வைகோ உடன் ஒருநாள்' என்ற தலைப்பில் நக்கீரன் டிவியில் வெளியாகி இருந்தது. இதில் மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் கலந்து கொண்டார்.
vaiko Photograph: (nallakannu)
அப்போது பல்வேறு அரசியல் ஆளுமைகள் உடனான நினைவலைகளை வெளிக்கொணரும் வகையில் இல்லத்தில் இருந்த புகைக்கப்படங்ளை காட்டி வைகோ மெய்சிலிர்த்து நம்முடன் உரையாடினார். ''இது எங்க தாத்தா. மடத்துப்பட்டி கோபால் நாயக்கர். ஜில்லா போர்டு பிரசிடெண்ட் ஆக இருக்கும்போது எடுத்த புகைப்படம். இந்த புகைப்படத்தில் சின்ன பையனாக நல்லகண்ணு இருக்கிறார். அவருக்கு அப்போது எட்டு வயசு ஒன்பது வயசு இருக்கும். ஸ்ரீவைகுண்டம் பாலத்தை தாத்தா ஜில்லா போர்டு பிரசிடெண்டா இருக்கும்போது திறந்து வைக்கிறார். பிரிட்டிஷ்காரன் ஆட்சி. அப்போது நல்லகண்ணு அந்த நிகழ்ச்சிக்கு போயிருக்காரு'' என்றார்.
இன்று பாலன் இல்லத்தில் நல்லகண்ணு இறுதி அஞ்சலி நிகழ்வில் வைகோ மேற்கோள் காட்டி பேசிய அந்த அரிய பொக்கிஷ புகைப்படம் இது தான்.