தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஐ நா அதிகாரி கண்ணன் தமிழக அரசியல் களத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நக்கீரன் டிவியில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/5-2026-03-03-18-29-28.jpg)
1952 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை. திமுக போட்டியிடவில்லை என்றாலும் கூட அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்தார்கள். அந்த சுயேட்சை வேட்பாளர்களில் இரண்டு முக்கியமான வன்னிய கட்சிகளுடைய வேட்பாளர்கள் அடக்கம். மாணிக்கவேல் நாயக்கருடைய உழைப்பாளர் கட்சியும், ராமசாமி படையாட்சியினுடைய பொதுநலக் கட்சி. இந்த இரண்டு கட்சியும் பெரிய வன்னிய தலைவர்களை கொண்டது. காங்கிரசுக்கு அந்த தேர்தலில் அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரிய சக்தியாக கம்யூனிஸ்டுகள் வெல்கிறார்கள். இங்கே தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நிறைய இடங்களில் வென்றது. ஆனால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. சுயேச்சைகள் 40 முதல் 50 பேர் வென்றிருக்கிறார்கள். இவர்களை காங்கிரஸ் இழுக்க முயல்கிறார்கள். ஒரு பாராட்டு விழா நடந்தது. சென்ட்ரல் பக்கத்தில் சென்மேரிஸ் ஹாலில் நடந்த அந்த பாராட்டு விழாவில் அண்ணா பேசுகிறார். 'தப்பித்தவறி அங்கு போய்விட்டால், கட்சி மாறிவிட்டால் இவர்களை தொழு நோயாளிகளாக மக்கள் பார்ப்பார்கள்' என்று அண்ணா சொல்கிறார்.
ஆனால் முதலிலேயே பெரியார் சொல்லிட்டார் 'இவர்கள் போய்விட்டால் நீங்க என்ன பண்ண முடியும்' என்று பெரியார் கேட்டார். இந்த ஒப்பந்தம், இந்த பத்திரம் இதெல்லாம் அபத்தம் என்றார். வன்னியர்கள் ஒரு பெரிய சக்தி வடதமிழ்நாட்டில். அவர்கள் ஒரு பெரிய சக்தி அதனால் அவர்களை பகைத்து கொள்வதற்கு அண்ணாவுக்கோ திமுகவிற்கோ மனசு இல்லை. அதனால் 'மாணிக்கவேல் நாயக்கரை சிங்கமாக உருவகப்படுத்தி அண்ணா சொன்னார் 'சிங்கத்தை ஒரு கூண்டில் அடைத்து விட்டார் இந்த நரித்தனமான ராஜாஜி' என்று அண்ணா விமர்சித்தார். அடுத்த முறை காமராஜர் இரண்டு பேரும் கட்சியை கலைச்சிட்டு கொண்டு போய் சேர்ந்துட்டாங்க. அதன்பிறகு 80 களின் பிற்பகுதியில் தான் ராமதாஸ் மூதாதயர் வன்னிய கட்சிகள் என்ற அடிப்படையில் வன்னியர் சங்கம் தொடங்கி, பின்னாளில் அது பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுப்பதை நாம் பார்க்கிறோம்.
இது முதல் இரண்டு தேர்தல்கள். இந்த மாதிரி நடந்த உடனே 1957 தேர்தலில் தாங்களே நிற்கலாம் என திமுக முடிவு செய்தார்கள். அந்த தேர்தலில் தான் திமுக சார்பில் 15 பேர் வென்று வருகிறார்கள். அந்த 15 பேரில் ரொம்ப முக்கியமான சில பேர் யார் என்று பார்த்தால் கலைஞர் கருணாநிதி, சத்தியவாணி முத்து இப்படி 15 பேர் வென்றனர். அண்ணா வெல்கிறார். அண்ணா இந்த 15 பேரில் தலைவர். சட்டமன்ற கட்சியினுடைய தலைவர். துணை த்தலைவர் நாவலர் என்று நினைக்கிறேன். திமுக கொறடா கலைஞர் கருணாநிதி. திமுக எதிர்கட்சியில் இருக்கிறார்களே தவிர திமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்து, பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்து கிடைக்கவில்லை. காங்கிரஸில் இருந்து பிரிந்து ராஜாஜியால் ஆதரிக்கப்பட்டு காங்கிரஸ் உள்ளேயே காமராஜருக்கு எதிராக செயல்பட்ட 'காங்கிரஸ் சீரமைப்பு சீர்திருத்த கட்சி' என்று சொல்லிவிட்டு ஒரு கட்சி இருந்தது. அந்த கட்சியில் இருக்கிறவர்கள் 15 பேருக்கு மேல் வென்று வருகிறார்கள். இது1957ல் நடக்கிறது.
1962 தேர்தலில் இந்த 15 பேரை திரும்ப வென்று வராமல் செய்துவிட வேண்டும் என காமராஜர் மற்றும் அவரது அமைச்சர்கள் அந்த 15 தொகுதிகளில் தீவிரமாக வேலை செய்தனர். அதில் கலைஞர் மட்டும் தப்பினார். மற்ற எல்லோரும் தோற்றுப் போகிறார்கள். திமுக 50 இடங்களில் வெல்கிறார்கள். 'காமராஜர் 15 இடங்களில் கவனம் செலுத்தி திமுகவிற்கு 50 இடங்களை தந்திருக்கிறார். அடுத்த தேர்தலில் இந்த 50 இடங்களில் கவனம் செலுத்தி இன்னும் நிறைய இடங்களை நமக்கு தருவார்'' என்று அண்ணா பேசினார். 1957 தேர்தலில் திருவண்ணாமலை தர்மலிங்கம், ஈ.வெ.கி சம்பத் ஆகியோர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டு திமுக சார்பாக போனவர்கள். ''அண்ணா நீங்க ராஜ்யசபா போகணும்'' என்ற கருத்தை பலரும் சொல்லினர். ராஜாஜி, ராஜாராம் ஆகியோரும் சொன்னார்கள். பின்னர் அண்ணா எம்பி ஆனார். அதனால் அண்ணாவினுடைய பார்வையும் விசாலப்பட்டது. தமிழ்நாட்டிற்கு அப்பாலும் அண்ணாவை பற்றித் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அது அமைந்தது.
எம்பி ஆன பிறகு ரொம்ப அற்புதமான பேச்சுக்கள் எல்லாம் அண்ணா பேசினார். அதன்பிறகு 1967 தேர்தலில் ஒரு வானவில் கூட்டணி அமைக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக உடன் பெரிய கருத்தியல் ஒற்றுமை இல்லாத தமிழரசு கழகத்தினுடைய ம.பொ.சிவஞானம் திமுகவுடன் சேர்ந்து நிற்கிறார். சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் ஒரு இயக்கம் திமுகவில் சேர்கிறது. அவரும் வென்று வருகிறார். அவர் பின்பு அவைத்தலைவர் ஆகிறார். பின் நாளில் கலைஞர் அமைச்சரவையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஆனார் நாம் தமிழரின் சி.ப.ஆதித்தனார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/10-2026-03-03-18-29-06.jpg)