தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

Advertisment

இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இளபுகழேந்தி தன் அரசியல் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment
17
dmk Photograph: (cuddalore)

அண்மையில் மதுரை வந்த பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் சாமி தரிசனம் முடித்துவிட்டு திமுக மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை  வைத்துள்ளார். 'எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிருச்சு. திமுக அமைச்சர்களுக்கு  ஊழல் செய்தில் தான் பெரிய போட்டியே' என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை எப்படிப் பார்க்கிறீங்க?

'நான் முதல்ல குற்றச்சாட்டுகளை பற்றி பேசுறதை விட மிஸ்டர் நரேந்திர மோடியை பற்றி பேசவேண்டும். ஏனென்றால் யார் குற்றம் சொல்லுகிறார்களோ அவர்களுடைய யோக்கியதை, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை பார்க்க வேண்டும். நரேந்திர மோடி இந்தியா முழுக்கவும் இப்படித்தான். அவர்பாட்டுக்கு சுற்றி வருவார். அங்கங்கு அந்த வேஷம் போட்டுகொள்வார். அங்கங்கு ஒரு டிராமா, ஆக்ட், டயலாக் எல்லாம் பேசிக்கொண்டு திரிகிறார். எதற்காக இதை சொல்கிறோம் என்றால் நரேந்திர மோடி மதுரைக்கு வந்தார். மோடி செய்வது எல்லாமே நாடகம். அவருடைய கடவுள் பக்தியில் இருந்து, அவருடைய செயல்பாடுகள் எல்லாமே நடிப்பு, நாடகம். அவர்கள் எல்லாம் வருணாசிரம, சனாதன விரும்பிகள் அவ்வளவுதான்.

Advertisment

எதற்காக இதை சொல்கிறோம் என்றால் உண்மையிலேயே அவர் ஒரு ஆன்மீகவாதியாக, பக்தராக இருந்தால் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போய்விட்டு திருப்பரங்குன்றம் போயிருந்தால் கூட சரி, மோடி சரியாக  இருக்கிறார் என்று எல்லோரும் நினைப்பார்கள். மோடி திருப்பரங்குன்றத்திற்கு மட்டும் போறீங்க. அதிலும் கூட இவ்வளவு நாள் எத்தனையோ முறை மதுரைக்கு மோடி போகும்போது திருப்பரங்குன்றம் போகவில்லை. இப்போது மட்டும் எதற்கு போறீங்க. திருப்பரங்குன்றத்த்தில் மோடி ரெட் கார்பெட்ல நடந்து சென்று கீழே விழுந்து அப்படியே கும்பிட்டு. இதையெல்லாம் வீடியோ எடுத்து மக்களிடம் போட வேண்டுமா? தமிழர்களை ஏமாற்றுவதற்காக தமிழ் கடவுளிடம் போய் கீழே விழுந்து, எழுந்து கும்பிடுவது மாதிரி ஒரு சீன் போடுறார். ஏற்கனவே திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் எல்லோரும் ஒன்றாக  இருக்கிறார்கள்.

சைவர்கள், வைணவர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் எல்லாம் ஒன்றாக இருக்கிறார்கள். இது மோடிக்கு அதெல்லாம் பிடிக்காது. அதனாலதான் திருப்பரங்குன்றதுக்கு இந்த பிஜேபிக்காரர்கள் பிளான் பண்ணி போய் ஏதாவது பிரச்சனை வருமா என்று பார்ப்பதற்கு போயிட்டு வந்தார்கள். நாளைக்கு தமிழர்களை ஏமாற்றலாம் என்று வந்த மோடி திராவிட முன்னேற்ற கழகத்தவர்கள் மேல் ஊழல் குற்றச்சாட்டு சொல்லியுள்ளார். திமுகவின் மீது அதனுடைய இயக்ககொள்கை பிடிக்காமல், சமரசம், சன்மார்க்கம், அதைப்போல அனைவருக்கும் அனைத்தும், சமூக நீதி என 75 ஆண்டுகள் திமுக சமுதாய சீர்திருத்த அரசியல் இயக்கம். இது ஒன்னும் லெட்டர் பே கட்சி இல்லை.

இந்த கட்சியை எப்படியாவது ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என பலபேர் பல நேரங்களில் ஊழல் பிரச்சனைகள் எடுத்துக்கிட்டெல்லாம் வழக்கு போட்டுள்ளார்கள். கமிஷன் எல்லாம் வைத்தார்கள். ஒரே ஒரு வழக்கு கூட இந்த இந்திய துணைக்கண்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது ஊழல் வழக்கு சொல்லி எதுவுமே நிரூபிக்க முடியாமல் எல்லா வழக்கும் தள்ளுபடியாகி போய்விட்டது. ஒழுங்காக இருக்கிற, முறையாக இருக்கிற, நிர்வாகம் நடத்தக்கூடிய இந்த ஆட்சி மீது களங்கம் சொல்லக்கூடிய நரேந்திர மோடி ரபேல் போர் விமானம் ஒன்று வாங்கினார். அந்த ரபேல் போர் விமானம் வாங்குவதில் காங்கிரஸ் கூட்டணி கவர்மெண்ட் இருந்து போட்ட விலைப்பட்டியலை விட ஆறே மாதத்தில்  மூணு நான்கு மடங்கு அதிகமாக ரெக்கார்ட் பண்ணி பணம் வாங்கி அதனுடைய விளைவு என்னஆச்சு தெரியுங்களா? அந்த நாட்டினுடைய பத்திரிக்கைகளில் எல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் அரசாங்கம் எவ்வளவு வாங்கி இருக்கிறது என்று சொல்லி அசிங்கமாக எழுதினார்கள்.எல்லாத்தையும் வாங்கி கட்டிக்கிட்டு இந்தியாவுக்கு தலைகுனிவை உருவாக்கியவர் மிஸ்டர் நரேந்திர மோடி.