தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இளபுகழேந்தி தன் அரசியல் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/17-2026-03-04-15-19-49.jpg)
மதுரை வந்த மோடி 'எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிருச்சு. திமுக அமைச்சர்களுக்கு ஊழல் செய்தில் தான் பெரிய போட்டியே' என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீங்க?
திமுகவை எப்படியாவது ஒழிக்க வேண்டும், அழிக்க வேண்டும் என பலபேர் பல நேரங்களில் ஊழல் பிரச்சனைகள் எடுத்துக்கிட்டெல்லாம் வழக்கு போட்டுள்ளார்கள். கமிஷன் எல்லாம் வைத்தார்கள். ஒரே ஒரு வழக்கு கூட இந்த இந்திய துணைக்கண்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மீது ஊழல் வழக்கு சொல்லி எதுவுமே நிரூபிக்க முடியாமல் எல்லா வழக்கும் தள்ளுபடியாகி போய்விட்டது. ஒழுங்காக இருக்கிற, முறையாக இருக்கிற நிர்வாகம் நடத்தக்கூடிய இந்த ஆட்சி மீது களங்கம் சொல்லக்கூடிய நரேந்திர மோடி ரபேல் போர் விமானம் ஒன்று வாங்கினார். அந்த ரபேல் போர் விமானம் வாங்குவதில் காங்கிரஸ் கூட்டணி கவர்மெண்ட் இருந்து போட்ட விலைப்பட்டியலை விட ஆறே மாதத்தில் மூணு நான்கு மடங்கு அதிகமாக ரெக்கார்ட் பண்ணி பணம் வாங்கி அதனுடைய விளைவு என்னஆச்சு தெரியுங்களா? அந்த நாட்டினுடைய பத்திரிக்கைகளில் எல்லாம் இந்திய துணைக்கண்டத்தின் அரசாங்கம் எவ்வளவு வாங்கி இருக்கிறது என்று சொல்லி அசிங்கமாக எழுதினார்கள். எல்லாத்தையும் வாங்கி கட்டிக்கிட்டு இந்தியாவுக்கு தலைகுனிவை உருவாக்கியவர் மிஸ்டர் நரேந்திர மோடி.
பாஜக கடவுள் கடவுள் என்று சொல்றார்களே ராமன் கோயில். அந்த ராமர் கோயில் விவகாரத்தை நாம் தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராமன் கோயில் கட்டுமான பணி தொடக்கம். கட்டுமான பணி தொடங்கிமோடிதான் அடிக்கல் போடுகிறார். அடிக்கல் போட்டுட்டு உலகத்தின் பல பகுதியிலிருந்தும் ஆயிரக்கணக்கான கோடிகள் வசூலிக்கப்பட்டது. சாமியை வைத்து ஓட்டு வாங்குவது மட்டுமல்ல எப்படி பணத்தை கொள்ளை அடிக்கிற கூட்டத்தை பாருங்கள். கோடிக்கணக்கான ரூபாய் வசூல் பண்ணிட்டு. கோவிலில் நான்கு அடுக்குகளை வைக்க போகிறோம் என்று சொல்லி இரண்டு அடுக்குகள் மட்டுமே முடிச்சு அரகுறையாக இருக்கக்கூடிய கோயிலை திறந்தார்கள். நம்பிக்கை இருக்கக்கூடிய, சனாதனவாதிகளாக இருக்கக்கூடிய அங்கு இருக்கும் சங்கராச்சாரியர்கள் போன்ற ஆச்சாரிய பீடங்கள் எல்லாம் இதனை தடுத்தது. காரணம் முறையாக முடிக்காமல் ராமர் கோவிலை திறக்கக் கூடாது என்றது. கட்டுமானம் முடியாத ராமர் கோவிலில் கடவுளின் தலை, கண்கள் இல்லாமல் பிரதிஷ்டை செய்வது சரியல்ல என்று அந்த கோயில் திறப்புக்கு எதிர்ப்பு காட்டி, நாலு திசையிலும் ஆதிசங்கரால் நிறுவப்பட்ட சங்கர மடங்கள் எதிர்ப்பு தெரிவித்தன.
வசூல், கலெக்ஷன் குறித்தெல்லாம் விவரங்கள் கேட்கும்போது 'நோ' இதற்கான ஆதாரங்களையும் இதனுடைய விவரங்களையும் இப்போது சொல்லமுடியாது என மோடி கோவிலை திறந்தார். கோவிலை திறப்பதில் பலாயிரம் கோடிய சுருட்டிவிட்டு, நாட்டினுடைய பாதுகாப்புக்கு விமானம் வாங்குவதிலும் பலாயிரம் கோடி சுருட்டிவிட்டு, இன்னைக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளது பாஜக. குஜராத்தில் 2 கோடி ரூபாய்க்கு புதுபிக்கப்பட்ட பாலம் அறுத்துக்கொண்டு விழுந்தது. மோடி போய் பார்த்தார். பார்த்துவிட்டு வருவதற்கு 3 லட்சம் செலவு என்றுகணக்கு எழுதினார். இப்படி தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் எல்லா நிலைகளிலும் உலகமே பார்க்கக்கூடிய அளவிற்கு அசிங்கமாக திருடும், பணத்தை கொள்ளை அடிக்கும் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழ்நாட்டுக்கு வந்ததும் திமுக மீது குற்றச்சாட்டு வைப்பார். இவர்களுக்கு வேறு வேலையே இல்லை. விளையாட்டுத்தனமாக பொழுது போக்கு மாதிரி வர வேண்டியது. எதையாவது ஒன்றை பேசிட்டு போயிட்டே இருக்க வேண்டியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/18-2026-03-04-15-19-18.jpg)