தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
088
haleem Photograph: (politics)

ராமதாஸுக்குக்காக விசிகவை திமுக பகைச்சுக்க மாட்டாங்க. 2017 ல் இருந்து ஒரு ஸ்ட்ராங்கா இந்தியா கூட்டணியில் இருக்கின்ற விசிக கட்சியை விலக்கி இன்னைக்கு சின்னம் இல்லாமல் ஏற்கனவே பலவீனப்பட்டு இருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி சேர்த்துக்க திமுக விரும்ப மாட்டார்கள். இன்னைக்கு நிலைமைக்கு என்ன தெரியுமா? ராமதாசுக்கு இருக்க ஒரே சாய்ஸ் விஜய் உடன் சேர்வதுதான். வேற சான்ஸ் இல்லை. காரணம் ராமதாஸ் தனியா நிற்க முடியாது. விஜய் உடன் சேரக்கூடிய வாய்ப்புதான் இன்னைக்கு வந்திருக்கு.

ராமதாஸ் விஜய்யோட சேர வேண்டாம் என்றுதான் திமுக விரும்புறாங்க. அன்புமணிக்கே என்ன மாதிரியான ஒரு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் மாம்பழம் சின்னம் எப்படினாலும் முடக்கப்பட போகுது. மாம்பழம் முடக்கப்பட்டு தாமரை சின்னத்தில் தான் அன்புமணி போட்டியிடப் போகிறார் என்ற பேச்சுதான் வருகிறது.  அதனால் ராமதாஸை சேர்த்துக்கிட்டா உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தலாம் அப்படிங்கிற ஒரு பேச்சு இருந்தது. ஆனால் அதைக்கூட வந்து விசிக விரும்பவில்லை அப்படிங்கிற மாதிரிதான் வருகிறது. காரணம், வன்னியர் சங்கம் ஏற்கனவே சமீப காலமாக  வன்னியர்களுக்கும், தலித் மக்களுக்குமான அந்த பிரச்சனையை 2017க்கு பிறகு பெரிய அளவில் கொண்டு போயிட்டாங்க.  திருப்பி மீண்டும் வந்து அவங்களோட களப்பணியாற்ற வேண்டியதில் பல்வேறு சிக்கல் இருக்கிறது. எனவே பாமக வேண்டாம் என்று திருமாவளவன் நினைக்கிறார்.

Advertisment

திருமாவின் எண்ணத்திற்கு திமுகவும் இன்னைக்கு உடன்பட்டதாக தான் பார்க்கிறேன். எனக்கு தெரிஞ்சு ராமதாஸுக்கு திமுகவில் இன்றைக்கு இல்லை. அதனால்தான் சமீப காலமாக மீண்டும் திமுகவை ராமதாஸ் விமர்சிப்பதை பார்க்கிறோம். இடையில் நல்ல ஆட்சி என்று ராமதாஸ் சொன்னார். மீண்டும் மறுபடியும் பழையபடி ராமதாஸ் பேசுகிறார். எனக்குத் தெரிந்து ராமதாஸ் விஜய் கட்சியோடு கூட்டணி வைக்க வேண்டும் இல்லையென்றால் தேர்தலில் போட்டியிடாமல் தவிர்க்க வேண்டும். அதற்குகே வாய்ப்பு இருக்கிறது. அதாவது நாங்கள் இந்த தடவை தேர்தலில் போட்டியிடவில்லை. எங்களுக்கு மாம்பழம் சின்னம் கிடைச்சா தான் நாங்க தேர்தல்ல நிற்போம் என்கிற முடிவை ராமதாஸ் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

காரணம் விஜய் உடன் சேர்வது என்பது அவருக்கு நிச்சயமாக ஒரு சரியான முடிவு இல்லை. தேவையில்லாத முடிவுதான். ஆனால் அதற்கு வாய்ப்பு என்பது இருக்கிறது. ஆனால் அதைவிட பெருவாரியான வாய்ப்பு அவர் இந்த தடவை தேர்தலில் போட்டியிடாமல் சின்னத்தை முடக்கி வைத்து விட்டு தேர்தலை சந்திக்காமல் இருக்க கூட வாய்ப்பு இருக்கிறது. இன்னைக்கு விசிகவும் அதற்கான வழியை விடவில்லை என்பதால் திமுக நிச்சயம் ராமதாஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ளாது. ஆனால் திமுக கூட்டணிக்கு ராமதாஸ் ஆதரவு கொடுக்கலாம். திமுக கூட்டணிக்கு எங்கள் ஆதரவு. ஆனால் நாங்கள் போட்டியிடவில்லை என்ற  முடிவு வந்தால் யாரும் ஒன்னும் தடுக்க முடியாது.