Advertisment

அன்புமணிக்கே தாமரை சின்னம்தான்? தமிழ்நாட்டில் 'பீகார் மாடல்'-பாஜக பலே திட்டம்

241

Lotus symbol for Anbumani? Bihar model-BJP Bale project in Tamil Nadu Photograph: (pmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள்குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
236
'Dharma Yuddha' is the reason for the OPS situation - explains Pudumadam Haleem Photograph: (ops)
என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு என்ன வாய்ப்புகள் இருக்கும்? 
பாஜக கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்துவிடுவார் என்பதுதான் நமக்கு வருகின்ற செய்தி. பாஜகவுடைய திட்டம் என்பது ஒருங்கிணைந்த அதிமுக. அதிமுக கட்சிக்குள் சேர்ந்தாலும் சரி அல்லது கூட்டணிக்குள் சேர்த்தாலும் சரி. ஆனால் கட்சிக்குள் சேர்ப்பதைவிட கூட்டணிக்குள் சேர்ப்பதை தான் பாஜக விரும்பியது என்று சொல்கிறார்கள். கூட்டணிக்குள் அன்புமணி, தினகரன், வாசன் போன்றவர்கள் பாஜகவோடு தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் வந்தாலும் பாஜாகவோடுதான் தான் இருப்பார். 

நீங்கள்(அதிமுக) எங்களுக்கு (பாஜகவிற்கு) 60 முதல் 70 இடத்தை கொடுத்துடுங்க. நீங்கள் நினைக்கிற இடத்தில் நில்லுங்கள். மற்றவர்கள் எல்லாம் பாஜக உடைய தாமரை சின்னத்தில் நிற்பார்கள் என்ற செய்தியும் வருகிறது. அதிமுக-பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தை அதிகப்படுத்தி அந்த எண்ணிக்கையில் எம்எல்ஏக்கள் இருக்க வேண்டும் என்று பாஜக கணக்கு போடுகிறது. அன்புமணிக்கு ஏற்கனவே உள்ள கட்சி பிரச்சனையில சின்னம் முடக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே அன்புமணியையே தாமரை சின்னத்தில் நிற்க வைக்ககூட பாஜக பணிக்கும் என்று சொல்கிறார்கள்.

தாமரை சின்னத்தை கொடுத்துவிட்டால் ஒரு 60 பேர் தாமரையில் நிற்கிறார்கள் என்றால் நினைச்சுப் பாருங்க. அப்போது எதிர்கட்சியாக தாமரை சின்னம் இருக்கும். இதுதான் பாஜகவுடைய கணக்கு. இதையெல்லாம் புரிஞ்சுக்கவே முடியாது. திட்டம் பலமாக இருக்கிறது. அந்த அளவுக்கு கணக்கு போட்டு வச்சுருக்காங்க. அதனடிப்படையில் தான் ஓபிஎஸ் உடைய பிரஸ் மீட்  உள்ளது. கிட்டத்தட்ட என்டிஏ கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்துவிட்டார். 

அன்புமணி ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். எங்களுக்கு குறைந்த பட்சம் 20 இடங்கள் கொடுக்கப்பட வேண்டும். அதேமாதிரி எங்களுக்கு  ஐந்து அமைச்சர்கள் கொடுக்கப்பட வேண்டும் என்கிற மாதிரி செய்திகள் வருகிறது. இது ஒரு மிகப்பெரிய கூட்டணி ஆட்சியாக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட பீகார் மாடலை தமிழ்நாட்டில் பாஜக அமுல்படுத்துறாங்க அப்படித்தான் நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதே ஸ்டைலை தான் பீகாரில் பாஜக கொண்டு வந்தார்கள். இன்னைக்கு அங்கு ஆட்சியையும் அப்படித்தான் இருக்கிறது.
 
admk anbumani ramadas edappaadi palanisamy nda alliance pmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe