Advertisment

'கடைசி நேர சொதப்பல்... பீகார் சூழல் தமிழ்நாட்டிலா?'-உடைக்கும் புதுமடம் ஹாலீம்

348

'Last minute surprise... Is the Bihar situation in Tamil Nadu?' - Breaking news Haleem Photograph: (dmk congress)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)
திமுக- காங்கிரஸ் கூட்டணியில் என்னதான் நடக்கிறது? 
வெறும் தொகுதிப் பங்கீட்டிற்காக மட்டும் இப்படி நடக்கிறது என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஏனென்றால் எல்லா கட்சிகளுமே, எங்களுக்கு எண்ணிக்கை வேண்டும் என சொல்றாங்க. எல்லா கட்சிகளுமே எங்களுக்கு கடந்த முறையை விட இந்த தடவை கூடுதலான சீட் வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அது இயல்புதான். அவங்களுடைய உரிமை. அது தப்பு கிடையாது. அதனால்  எல்லா கட்சிகளும் பொதுவெளியில் இது மாதிரியான ஒரு நடவடிக்கை எடுக்கிறார்களா? பேசுகிறார்களா? இல்லை. ஏன் காங்கிரசுக்கு உள்ளே மட்டும் ஏன் இப்படி நடக்கிறது.
காங்கிரஸ் என எடுத்துக்கொண்டால் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடைய மாநில தலைவர் செல்வபெருந்தகை அல்லது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உடைய மேற்பார்வையாளர் சோடங்கர், அதைத்தாண்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே அல்லது அவர்களுடைய தலைவர் ராகுல் காந்தி இந்த நான்கு பேரை தவிர வேறு யார் பேசினாலும் அது எப்படி அதிகாரப்பூர்வமான விஷயங்களாவோ செய்திகளாவோ திமுக எடுத்துக்கொள்ளும். எல்லா கட்சியிலும் எல்லா தலைவர்களும் இருக்காங்க. ஒவ்வொரு கட்சியிலும் யார் சொல்கிறார்கள் என்பது முக்கியம்.
கூடுதலாக சீட்டு எண்ணிக்கை வேண்டும் என நீங்கள் யாரிடம் சொல்ல வேண்டும் பொதுவெளியிலயா? மக்களிடாமா? அல்லது உங்கள் தலைவர்களிடமா? டெல்லியில் ராகுல் காந்தி கூடிய கூட்டத்தில் நீங்கள் சொல்லி இருக்க வேண்டும். காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் சொல்ல வேண்டும். அவரிடம்  பேச பிடிக்கவில்லை, அவர் ஒன்னும் சரியாக செயல்படவில்லை என்று நினைத்தால் உங்களுடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியனுடைய மேற்பார்வையாளர், மேலிடப் பொறுப்பாளர் சோடாங்கரிடம் சொல்ல வேண்டும். நீங்க ஏன் பேசுறீங்க என திமுக கேட்பது நியாயம்தானே.

பீகாரில் 2025-ல் சட்டப்பேரவை தேர்தலில் என்ன மாதிரியான செய்திகள் வந்தது தேஜஸ்வி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என கருத்துக் கணிப்பு வந்துச்சு. ஏனென்றால் கடந்த 20 வருடமாக நிதீஷ்குமாருடைய ஆட்சி மோசமாக இருக்கு எனச்சொல்லி மக்களே  காரிதுப்பிய நேரம். ராகுல் காந்தியுடைய யாத்திரையை தேஜஸ்வி தான் முன்னிருந்து நடத்தினார். 20 வருஷங்களில் பீகாரே கெட்டுப்போச்சு எதுலயுமே முன்னேறவில்லை என மக்கள் உணர்ந்தார்கள். ஏற்கனவே இந்த எஸ்ஐஆர் மூலமாக பிரச்சனை இருந்தும் மக்களுடைய எழுச்சி ஏற்பட்டது. ஆனால் ஏன் கடைசி நேரத்தில் அங்கே சொதப்பல் நடக்க காரணம் சீட் எண்ணிக்கை கடைசி வரைக்கும் உங்க கூட தேஜஸ்வி இருந்தாரே. ஆனால் நீங்க தேஜஸ்வியை முதல்வர் வேட்பாளர் என்று  அறிவிச்சீங்களா?
 
 
 
 
congress dmk alliance parties dmk. mk.stalin ragul ganthi Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe