Advertisment

'எப்போது என்னைத் தாக்குவீர்கள்?'-மீம் மெட்டீரியலான கிம் ஜாங் உன்

25

'When will you attack me?' - Kim Jong-un, meme material Photograph: (KIM)

கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இஸ்ரேல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா முழுவதும் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைத்து பரவலான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுடன் தெஹ்ரான் பதிலளித்துள்ளது. தெஹ்ரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை "நிரந்தரமாகத் தடுப்பதும்" அதன் தாக்குதல் ஏவுகணைத் திறன்களை அகற்றுவதே நோக்கம் என்று டிரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஈரானில் குறைந்தது 555 பேர் இறந்ததாக ஈரானிய ரெட் கிரசண்ட் செய்தி வெளியிட்டுள்ள நிலையில், மோதலில் நான்கு படை வீரர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

Advertisment

23
'When will you attack me?' - Kim Jong-un, meme material Photograph: (KIM)

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போர் பதற்ற சூழலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சமூக வலைதளங்களில் ஒரு முக்கிய 'மீம்' (Meme) பொருளாக மாறியுள்ளார். ஏவுகணை சோதனைகள் மற்றும் மிரட்டல்களுக்குப் பெயர் போன கிம் ஜாங் உன், தற்போது மத்திய கிழக்கில் நடக்கும் பெரிய அளவிலான நேரடிப் போரில் பங்குபெற முடியாமல் ஒரு 'பார்வையாளராக' மட்டும் இருப்பதாக நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, தனது நெருங்கிய நட்பு நாட்டின் தலைவரை இழந்த சோகத்தில் கிம் இருப்பதாகக் கூறி பல நகைச்சுவைப் பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

'அனைத்து பொம்மைகளும் (ஆயுதங்கள்) இருந்தும் விளையாட அழைக்கப்படாத குழந்தை கிம்' என்று அவரைச் சித்தரிக்கும் மீம்கள் அதிக அளவில் பகிரப்படுகின்றன. கிம் பைனாகுலர் மூலம் தூரத்தில் நடக்கும் போரை வேடிக்கை பார்ப்பது போன்றும், "எப்போது என்னைத் தாக்குவீர்கள்?" என்று அவர் காத்துக் கொண்டிருப்பது போன்றும் எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள் வைரலாகின்றன.  உலகமே போர்ப் பதற்றத்தில் இருக்கும் நிலையில் , கிம் ஜாங் ஒரு வேடிக்கையான "பக்கத்து வீட்டுக்காரர்" என்பது  போலச் சித்தரித்து இணையதளவாசிகள் பரப்பி வருகின்றனர்.

Kim Jong un America israel iran North korea
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe