தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக தலைமை முதற்கட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
Advertisment
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும். ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் கவனத்தை பெற்றுள்ளது.
Advertisment
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள புகழேந்தி அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் அறிக்கை குறித்து தன் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் முதல் கட்டமாக ஐந்து வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அனைத்து குடும்ப அட்டைதாரர் மகளிர்களுக்கும் 2000 ரூபாய் தரப்படும் எனச் சொல்லி இருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

210
DMK Photograph: (CUDDALORE)

 

தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கும், தேர்தல் அறிக்கையில் சொல்லுவதற்கும், சிந்தனை செய்து மக்களுக்கு நன்மை செய்வதற்கான எல்லா விஷயங்களையும் புரிந்து, தொகுத்து சொல்வதுதான் தேர்தல் அறிக்கை. இதற்காக ஒரு இயக்கம் ஒரு குழு போட்டு செய்வாங்க. இதற்கெல்லாம் பல வடிவங்கள் இருக்கு. 
Advertisment
எடப்பாடி பழனிசாமி தேர்தல் அறிக்கை குறித்து போடப்பட்ட குழு ஒரு சரியான பாதையில், சரியான சிந்தனையில் இல்லை என்பதற்கு ஒரு ஆதாரம் இருக்கு. என்னவென்றால் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் திட்டத்தை முதன்மை அறிவிப்பாக அதிமுக அறிவித்துள்ளது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால். எதிர்கட்சியாக திமுக இருக்கும் பொழுது எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டார். மகளிர் உரிமை தொகை 1000 ரூபாய் வழங்கப்படும் என்றார். திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன உடனே இது ஒரு ஏமாற்று வித்தை என்று சொன்னது இதே மிஸ்டர் எடப்பாடி பழனிசாமி. 

ஓட்டு வாங்குவதற்காக பிளான் பண்ணி செய்றாங்க என இந்த திட்டத்தை கேலி கிண்டல் செய்தது எடப்பாடி. ஆனால் இன்னைக்கு அந்த எடப்பாடி ஒரு ஆயிரத்தை கூடுதலாக சேர்த்து 2000 கொடுப்பாரா? அரசாங்கத்திற்கு நிர்வாகத்  திறமை இல்லாத காரணத்தினால் நிதி நெருக்கடி எல்லாம் ஏற்பட்டுருச்சு. இந்த நிதி நெருக்கடி எல்லாம் ஏற்பட்டிருக்கும் போது இதெல்லாம் எப்படி அவங்க செய்ய முடியும் என்றெல்லாம் கேட்ட எடப்பாடி, இன்னைக்கு எந்த அடிப்படையில 2000 கொடுப்பார். தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னும் தெரியாது, எதையாவது சொல்லி ஓட்டு கேட்கலாம் என நினைக்கிறார்.

தமிழ்நாடு அரசாங்கத்திற்கு நிதி நெருக்கடியை கொடுக்க அமித்ஷா கிட்ட இந்த கூட்டமே போகுது. தமிழிசை உள்ளிட்ட பாஜக கும்பல் போய் தமிழகத்தில் உள்ள திட்டங்களை நிறுத்த வேண்டும் என நெருக்கடியை கொடுத்து தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய கல்வி நிதி 2500 கோடி இன்னும் கொடுக்கப்படவில்லை. இதற்கெல்லாம் காரணம் எடப்பாடி, தமிழிசை போன்றவர்கள். கவர்னருக்கும் அதே வேலை. கல்விக்கு வரும் நிதியை நிறுத்திவிட்டு ஜிஎஸ்டி வந்து தமிழ்நாட்டில் இருந்து கலெக்ஷன் பண்ணிட்டு போறாங்க. ஆனால் தமிழ்நாட்டு மக்கள் இதில் ஏமாற மாட்டார்கள்.