தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment
இந்நிலையில் திராவிட வெற்றிக் கழகத்தின் முதன்மை செயலாளர் வல்லம் பசீர் தன்னுடைய அரசியல் பார்வைகளை நக்கீரனின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
30
VALLAM BASHEER Photograph: (POLITICS)
நேற்று தஞ்சாவூரில் பேசிய விஜய் 'ஸ்டாலினுக்கு  விஜய்க்கும் தான் போட்டி' என்று பேசியதோடு இரண்டு ஏக்கருக்கு குறைவாக இருக்கும் விவசாயிகள்  குடும்பத்தில் உள்ள குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்போம். ஐந்து ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்திருப்போருக்கு பயிர்க்கடன் ரத்து உள்ளிட்ட வாக்குறுதிகளை கொடுத்துள்ளார். விஜய்யின் நேற்றைய உரையை எப்படி பார்க்கிறீர்கள்?
ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழக அரசு 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த போது செயல்படுத்திய திட்டங்களை எல்லாம் இனிமேல் நான் செயல்படுத்த போகிறேன் என்று சொல்கிறார். இந்த பயிர்கடன் ரத்து என்பதில் விஜய் ஒரு டார்கெட்டை பிக்ஸ் பண்ணுகிறார். இத்தனை ஏக்கர் நிலம் இருக்கிறவங்க பயிர்க்கடன் வாங்கி இருந்தாங்கன்னா 50 சதவீதம் நாங்கள் தள்ளுபடி பண்ணுவோம் என்று சொல்கிறார். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக்கழக அரசு கலைஞர் தலைமையில் அமைந்த போது பயிர்க்கடனை முழுவதும் தள்ளுபடி செய்தது என்பதுதான் இங்கே இருக்கக்கூடிய விவசாயிகளுக்கு அறிமுகமான செய்தி. நீங்கள் புதுசாக வந்தால் இத்தனை ஏக்கர் வைத்திருந்தால் நாங்கள் தள்ளுபடி செய்வோம் என்ற ஒன்று இருக்கிறது. ஏற்கனவே தான் 100% தள்ளுபடி செய்திருக்கிற திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டிருக்க இனியேனும் தேவைப்பட்டால் பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வார்கள்.
Advertisment
இப்போது பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்வதற்கு ஏதாவது தேவை இருக்கா? விவசாயம் ஏதாவது நலிவடைந்த நிலையில் இருக்கா?  ஏதாவது மழை வெள்ளம் பாய்ந்து நெற்பயிர்கள் ஏதாவது நீரில் முழுகி இருக்கா? இங்க ஏதாவது இடர்பாடுகள் இருக்கா? டெல்டா பகுதியில்  பார்த்தால் இந்த முறை வழக்கத்துக்கு மாறாக விளைச்சல் என்பது இருந்தது. அந்த விளைச்சலில் வந்த நெற்பயிர்களை கொண்டு போய் சொசைட்டியில் போட்டார்கள். சொசைட்டியில் போட்ட நெற்பயிர்களை பாதுகாப்பதற்கான குடோன்கள் நிரம்பி வெளிவந்த காட்சியை நாம் பார்த்தோம். அந்த அளவுக்கு விளைச்சல் இருக்கு என்று சொன்னால் ஏன் பயிர்க் கடன்களை தள்ளுபடி பண்ணனும். தள்ளுபடி பண்ண வேண்டிய அவசியம் எங்கிருந்து எழுகிறது. விவசாயிகள் கேட்டாங்களா? தள்ளுபடி பண்ண வேண்டும் என்று சொல்லி. எங்காவது ஒரு பகுதியில் காவிரி தீரத்தில் அந்த கோரிக்கை எழுந்திருக்கிறதா? ஏதோ ஒரு கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஜய் என்று நான் பார்க்கிறேன்.
இரண்டாவது விவசாய நிலங்களுக்கு ஒரு உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டு, அந்த உச்சவரம்பு அடிப்படையில் இந்த பிள்ளைகளுக்கு நாங்கள் கல்விக்கு உதவி செய்வோம் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே தமிழ்நாட்டில் கல்வி இலவசமாக்கபட்டிருகிறது. இன்றைக்கு நேற்றல்ல ஏறக்குறைய 35 ஆண்டு காலத்துக்கு முன்பாகவே இதற்கான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு கல்வி முழுவதும் இலவசம் என்ற நிலை உள்ளது. பிரைவேட் இன்ஸ்டிடியூஷன் போனா மட்டும் தான் காசு. கவர்மெண்ட் இன்ஸ்டிடியூஷனில் எங்கயாவது காசு வாங்குகிறார்களா? முதல்தலைமுறை பட்டதாரிகளுக்கு உண்டான சலுகை தொகையை 10,000 ரூபாய் கூட்டி இருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர். நான் வந்து முதல்தலைமுறை பட்டதாரி. அமைச்சர் சிவசங்கர் அவர்கள் பிற்படுத்தப்பட்ட ஒரு நலத்துறைக்கு அமைச்சராக இருந்தார். அப்போது ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். 
முதலமைச்சர் என்ன செய்தார் என்றால் ஒரு குடும்பத்தில் முதல்தலைமுறை பட்டதாரி என்றால் அண்ணன் மட்டும்தானா? தம்பி தங்கைகள் இல்லையா? அவர்களும் முதல்தலைமுறை பட்டதாரி தானே. எனக்கு மட்டுமல்ல எனக்கு அண்ணன் இருந்தால் அவருக்கும் சலுகை உண்டு. எனக்கு தம்பி இருந்தால் அவருக்கும் சலுகை உண்டு என்று சொல்லி ஒரு திட்டத்தை கொண்டு வந்தார். அந்த திட்டம் செயலாகி நான்கரை வருடங்கள் ஆயிடுச்சு. இப்போது செயல்பாட்டில் இருக்கிறது. அப்போது நீங்கள் யாருக்கு கல்வியை இலவசமாக்க போறீங்க, கல்விக்கு யாருக்கு உதவி தர போறீங்க. முதலமைச்சர் பொறுப்பேற்றதற்கு பிறகு கல்விக்கான ஊக்க தொகையை அதிகப்படுத்தி இருக்கிறாரா இல்லையா? கல்லூரி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படுதா இல்லையா? இது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் திட்டங்கள் தானே. நீங்க புதிதாக என்ன திட்டத்தை கொண்டு வரப்போறீங்க.