tvk Photograph: (vijay)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
தவெக மற்றும் சீமானை வளர்த்து விடுவது யார் என்று கேட்டால் இந்த சோசியல் மீடியா மட்டுமல்ல. சோசியல் மீடியா உண்மையை பேசுகிறது. இந்த பெரிய பெரிய டிவிகாரங்க இருக்கிறார்கள். விஜய் இதோ குளித்துவிட்டார். இதோ குளித்து விட்ட பிறகு கதவை திறந்து விட்டார். வண்டியில் ஏறி விட்டார். இப்படி எல்லாம் போடுகிறார்கள். இதெல்லாம் எவ்வளவு ஒரு மோசமான ஒரு செயலாக இருக்கிறது. ஒரு தலைவன் என்றால் மக்கள் பிரச்சனைக்கு கருத்து சொல்ல வேண்டும். ஆனால் தொலைக்காட்சிகள் மக்களை திசை திருப்புறாங்க. மக்களை குழப்புகிறார்கள். அதை தொலைக்காட்சிகள் செய்ய விடக்கூடாது.
நான் சொல்கிறேன் எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தவெகவில் ஒருவர் கூட ஜெயிக்க முடியாது. அந்த கட்சியில் ஒரு பையனுக்கும் ஜெயிக்கிற வாய்ப்பு இல்லை. ஒரே ஒரு ஆள் ஜெயிப்பார். விஜய் மட்டும் ஜெயிப்பார். அது எப்படி என்றால் தற்குறி கும்பல் ஏரியாவில் திரிகிறார்கள். அதுக்குதான் தவெக எந்த இடத்தில் விஜய் போட்டியிடுவார் என்று செலக்ட் பண்றாங்களாம். எந்த இடத்தில் சாராயம் நிறைய இருக்கிறது. எந்த நேரத்தில் கள்ள டிக்கெட் ரொம்ப விற்கிறார்கள். எங்கெல்லாம் பைத்தியங்கள் அதிகமா இருக்கோ அங்க போய் நிற்போம் என்ற முடிவில் இருக்கிறார்கள்.
வடசென்னையில் இருக்கிற மக்கள் எவ்வளவு அறிவாளியாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். வடசென்னையில் இருந்து பெரிய பெரிய அறிவாளிகள் இப்போது உருவாகி கொண்டிருக்கிறார்கள். ஒரு காலத்தில் இருந்து என்னமோ உண்மைதான் அதை நாம் மறுக்கவில்லை. ஆனால் இப்போது நிகழ் காலத்தில் எல்லாம் அறிவு சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை போய் கேவலமா பேசுவது. பொதுபுத்தி எப்படி இருக்கு பாருங்கள் அந்த ஊர்னா அப்படித்தான் இருக்கும். அவர்களெல்லாம் இப்படித்தான் இருப்பாங்க. இப்படி எல்லாம் பேசுவதே சாதி புத்திதானே. விஜய் ஏன் வடசென்னையை சிங்கப்பூராக மாற்ற வேண்டும் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சிங்கப்பூராக மாற்றட்டுமே.
நான் விஜய் பேச்சை கேட்டேன். என்னதான் பேசுறாங்க என்று பார்த்தால் ஒரு காமெடி என்டர்டைன்மென்ட். ஜனநாயகன் என்ற படத்துக்கு நான் டிக்கெட் எடுக்க ரெடியாக இருந்தேன். அதை எடுக்கவில்லை. படமும் வெளியில் வரவில்லை. ஆனால் படம் போலவே விஜய் மேடையில் சூப்பரா அழுகை சீன் இருந்தது. கோபம் வரக்கூடிய சீன் இருந்தது. அதே மாதிரி குணசித்திர நடிப்பும் கொடுத்தார் விஜய். இப்படி பல வகையை கலந்து கொடுத்திருக்கிறார். அதனால அவருக்கு நடிப்பில் பாஸ் மார்க் போடுகிறேன்.
நான் ஒன்னு கேட்கிறேன். நீங்கள் நேர்மையாக எனக்கு பதில் சொல்லுங்கள். விஜய் ஒரு ஹியூமன் ரிசோர்ஸ் மாதிரிதானே. படத்தில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின் சம்பளம் டிஃபரண்ட் எவ்வளவு தெரியுமா உங்களுக்கு? அங்கு இருக்கிற மற்ற குணசித்திர நடிகர்களுக்கும் எவ்வளவு சம்பளம் தெரியுமா? உனக்கு 150 கோடியா அவர்களுக்கு இரண்டு கோடியா? இதுவும் கூட ஒரு வகையான கூட்டு சுரண்டல் இல்லையா? நீயே ஒரு சுரண்டல் வாதி தானே.
Follow Us