Advertisment

தொகுதிப் பங்கீடு கூட இபிஎஸ் தலைமையில் இல்லையா?-சந்தேகம் எழுப்பும் புதுமடம் ஹலீம்

388

admk Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

021
haleem Photograph: (politics)

சிறுபான்மை மக்கள் காவலர் என்று சொல்லக்கூடிய விஜய் மைக்கேல்பட்டியில் நடந்த விஷயத்துக்கு என்ன பதில் கொடுத்தீங்க? 'பள்ளி மாணவி தற்கொலைக்கு காரணம் மதமாற்றம் தான். அந்த பள்ளி தலைமை ஆசிரியர் தான் காரணம். அது ஒரு கிறிஸ்தவ பள்ளி' என்றெல்லாம் பேசினார்கள். வட இந்தியாவில் இருந்து பாஜகவுடைய பெண் தலைவர்கள் எல்லாம் வந்து இறங்கினார்கள். சிபிஐ வசம் வழக்கு நடந்தது. இறுதியில் நீதிமன்றத்தில் சிபிஐ என்ன பதில் கொடுத்துள்ளார்கள்? மைக்கேல்பட்டியில் மதமாற்றத்தால் அந்த பெண் தற்கொலை செய்யவில்லை என ஒன்றிய அரசுடைய சிபிஐ தகவல் கொடுத்துள்ளது. ஆனால் இன்னைக்கு அந்த சம்பவத்திற்கு ஒரு கண்டனத்தை விஜய் தெரிவித்தாரா? விஜய் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்தவர் என்று சொல்கிறார்கள். ஆனால் இன்னைக்கு அந்த சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக ஒரு கருத்து இல்லையே? பாஜகவுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கை இல்லையே ஏன்? ஆனால் நீங்க ஏன் திருப்பி திருப்பி முதல்வர் ஸ்டாலினை உங்களுக்கு எதிரியாக இழுக்குறீங்க? ஏன் மற்ற யருமே இல்லையா?

உங்களுக்கு எதிராக  அதிமுக என்டிஏ கூட்டணி இருக்கிறது. உங்களுக்கு சமமாக உங்களை விட பவர்புல்லான எதிர்க்கட்சி அதிமுக. அவர்களைப் பற்றி பேச மாட்டீங்களா? பிரதமர் மோடியை பற்றி பேச மாட்டீங்களா?  முதல்வரை மட்டும் தான் பேசுறீங்க. அவர் உங்களை கண்டுகொள்ளவே இல்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை. நீங்க நினைக்கிறீங்க மு.க.ஸ்டாலின் பயத்தால் கண்டு கொள்ளவில்லை என்று.  நீங்கள் ஒரு எதிரியே இல்லை. விஜய் என்கிற இந்த நபர் இந்த தேர்தலோடு காணாமல் போகக்கூடிய ஒருத்தர்தான். அவரை போய் எதுக்கு பேசணும்? எதுக்கு பெரிய ஆளாக ஆக்கி விட வேண்டும் என நினைக்கிறார் முதல்வர்.

உண்மையான எதிரி என்டிஏ கூட்டணி. அதுவும் குறிப்பாக பாஜக. இன்னைக்கு டெல்லிக்கும் தமிழ்நாடுக்கும் தான் போட்டியே. அதுதான் உண்மை. இன்னைக்கு என்டிஏ கூட்டணியை வழி நடத்துவது எடப்பாடியா அமித்ஷாவா? தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்க போகிறது என்று சொல்கிறார்கள். ஏன் அதிமுக ஆட்சி நடக்க போகிறது என்று சொல்லவில்லை. எடப்பாடி ஆட்சி வரப்போகிறது என்றும் சொல்லவில்லை. அதனுடைய தலைவர் யார்? எடப்பாடியை டம்மி தலைவராக வச்சிருக்காங்க. அதற்கு ஆகப்பெரும் உதாரணம் தினகரன் தொகுதிப் பங்கீடு குறித்து பாஜக தான் முடிவு செய்யும் என்கிறார். அப்போது தொகுதிப் பங்கீடு கூட எடப்பாடி தலைமையில் இல்லையா? 

tvk vijay vijay dmk admk nda alliance
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe