தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சக்தி அபியானின் கர்நாடக ஒருங்கிணைப்பாளர் கிருத்திகா தரண் திமுக-காங்கிரஸ் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
370
congress Photograph: (politics)
மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை பொதுவெளியில் கூட்டணி குறித்து யாரும் பேச வேண்டாம் என சொல்கிறார். ஆனால் கேட்க மறுக்கிறார்கள். டெல்லியில இருந்து ஒரு பொதுச்செயலாளர் வந்து தீர்மானம் போட்டாதான் கேட்பார்களா?
Advertisment
மாநில கட்சிகள், தேசிய கட்சிகள், உள்ளூர் கட்சிகள் இப்படி பல உள்ளன. உள்ளூர் கட்சி என்றால் உங்களை சுற்றி ஒரு 10 பேர் தான் இருப்பார்கள். மாநில கட்சிகள் என்றால் உங்களை சுற்றி பெரிய வட்டம் இருக்கும். தேசிய கட்சிகள் என்றால் எல்லா மாநிலத்தில் இருந்தும் தினமும் சிக்கல்கள் வரும். இப்போது ராகுல் காந்தி அசாம் தேர்தல் பற்றி ஏதாவது யோசிச்சிட்டு இருப்பார். அப்போது போய் கேரளா தேர்தல் பிரச்சனையை சொல்லுவார்கள். அதை யோசிச்சிட்டு இருக்கும்போது திடீரென மேற்குவங்க தேர்தல் பற்றி சொல்லுவார்கள். பின்னர் அதை யோசிச்சிட்டு இருப்பார்கள்.
அங்குள்ள ஒரு நான்கு பேரிடம் ராகுல் கருத்து கேட்டுக்கொண்டு இருப்பார். அந்த நேரத்தில் போய் தமிழ்நாடு தேர்தல் பற்றி சொல்லுவார்கள். யாரோ கருத்து சொல்கிறார்கள் என்றால் சரி சரி அதெல்லாம் ஒன்னும் பெரிய பிரச்சனை இல்லை நாளைக்கு . அப்படித்தான் இந்த தேசிய கட்சிகள் இயங்கும். ஒரு மாநில கட்சிகள் இருக்குங்க. ஒரு பஞ்சாயத்தில் ஒரு சின்ன சிக்கல் இருக்கு என்றால் அவர்களுக்கு அது பெருசாக தெரியாது. அவர்களை பாதிக்கின்ற பார்லிமெண்ட் விவகாரமோ, அவர்களை பாதிக்கிற தேசிய விவகாரம்தான் அவர்களுக்கு பெருசு.
Advertisment
கார்கே அவர்கள் பெங்களூரில் தான் இருந்தாரு. நானும் போய் பார்க்கணும் என்று தான் நினைச்சேன். கீழ்மட்ட தொண்டர்கள் இடையே  கசப்புணர்வு வந்துவிட்டால் அதை திருப்பி எடுப்பது ரொம்ப கஷ்டம். அப்போது காங்கிரஸ்க்கு தான் பாதிப்பு அதிகம். ஏனென்றால் என்ன பொறுத்தவரைக்கும் கூட்டணி ரொம்ப முக்கியம். காங்கிரஸ் பாதிப்பு அடைந்திட கூடாது. கீழ்மட்டத்தில் ஒரு கசப்பு என்று ஒன்று  வந்துவிட்டால் அதை நீக்கவே முடியாது. இந்த பிரச்சனையோட ஆணி வேரை நாம யாருமே பேசவில்லை. மாணிக்கம் தாகூர் எம்பி மட்டும் இந்த பிரச்சனையை பற்றி பேசி இருந்தால் யாரும் பெரிதாக நினைக்க போறதில்லை.
ஆனால் அவர் பின்னாடி ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் 'நாம் தவெக கூட்டணிக்கு போய்விடலாம்' எனப் பேசி வருகிறார்கள். ஏன் அந்த வாய்ஸ் வந்தது? அப்படி என்றால் தவெக மேல் இவர்களுக்கு அன்போ விருப்பமோ எல்லாம் கிடையாது. சிலருக்கு நிஜமாவே பதவி ஆசை இருந்திருக்கலாம். ஆனால் மாணிக்கம் தாகூர் என்னைக்குமே தவெகவிற்கு போக வேண்டும் என்றோ கூட்டணியை உடைக்க வேண்டும் என்றோ சொல்லவில்லை. மாணிக்கம் தாகூர் ரொம்ப ஜனநாயகமாக பேசி இருக்கிறார். நான் அவரை பாராட்ட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. ஆட்சியில் அதிகாரம் வேண்டும் என்று ஜனநாயகமாக  பேசியிருக்கார். இதை நீங்கள் மறுக்க முடியாது. தேசிய தலைமையே நாங்க என்னங்க கேட்கிறோம் உரிமையை தானே கேட்கிறோம். காங்கிரஸ் திமுகவிற்கு எத்தனை மினிஸ்ட்ரில எத்தனை தடவை இடம் கொடுத்திருக்கோம். இப்போது அதை திருப்பிக் கொடுங்கள். கொடுத்தால் லாபம் தானே என்றுதான் தேசிய தலைமை நினைக்கும்.