Advertisment

ஸ்டாலின் தொகுதியில் விஜய் நிற்க தயாரா?-சவால் விடும் புதுமடம் ஹலீம்

390

Is Vijay ready to stand in Stalin's constituency? - Pudumadam Haleem challenges Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)
தவெக தலைவர் விஜய் சென்னை பெரம்பூரில் போட்டியிடுவதாக கூறப்படுகிறதே?
விஜய்க்கு எதிராக  அதிமுக என்டிஏ கூட்டணி இருக்கிறது. உங்களுக்கு சமமாக உங்களை விட பவர்புல்லான எதிர்க்கட்சி அதிமுக. அவர்களைப் பற்றி பேச மாட்டீங்களா? பிரதமர் மோடியை பற்றி பேச மாட்டீங்களா? முதல்வரை மட்டும் தான் பேசுறீங்க. அவர் உங்களை கண்டுகொள்ளவே இல்லை. ஏன் கண்டுகொள்ளவில்லை. நீங்க நினைக்கிறீங்க மு.க.ஸ்டாலின் பயத்தால் கண்டு கொள்ளவில்லை என்று. நீங்கள் ஒரு எதிரியே இல்லை. விஜய் என்கிற இந்த நபர் இந்த தேர்தலோடு காணாமல் போகக்கூடிய ஒருத்தர்தான். அவரை போய் எதுக்கு பேசணும்? எதுக்கு பெரிய ஆளாக ஆக்கி விட வேண்டும் என நினைக்கிறார் முதல்வர்.
பெரம்பூரில் விஜய் நிற்கப்போவதாக ஒரு தீர்மானம் போட்டு இருக்காங்க. பெரம்பூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் இதை முன்மொழிந்தவர் ஆதவ அர்ஜுனா. முன்னிலை வகித்தவர் ஆனந்த். கூட இருந்தவர்கள் எல்லாம் முக்கியமானவர்கள்.  ஏன் பெரம்பூரை தேர்ந்தெடுத்தார்கள். நேற்று கூட எஸ்ஐஆர் உடைய முடிவில் கிட்டத்தட்ட சுமார் 12 லட்சம் வாக்குகள் சென்னையில் நீக்கப்பட்டிருக்கிறது. பைனல் எஸ்ஐஆர் வந்ததுக்கு பிறகு அதில் பார்த்தால் அதிகமாக வாக்காளர்கள் இருக்கும் தொகுதி  பெரம்பூர் தான். வி-ல் ஆரம்பிப்பதால் விருக்கம்பாக்கத்தை சொன்னார்கள் ஆரம்பத்தில் அதன்பிறகு சோழிங்கநல்லூர் என்று சொன்னார்கள். அது நல்ல சாய்ஸ்தான். ஏனென்றால் சோழிங்கநல்லூரில் தான் பனையூர் இருக்கிறது. நீங்கள் தொகுதி பக்கம் போகவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டே வராது. காரணம் தொகுதிக்கு உள்ளே தான் விஜய்யின் வீடு இருக்கிறது.
ஆனாலும் விஜய் ஏன் அந்த தொகுதிகளை தேர்தெடுக்கவில்லை என்றால் அங்கு அதிமுகவும் திமுகவும் பலமாக இருக்கும் என்ற ஒரு அச்சம் விஜய்க்கு இருக்கிறது. பெரம்பூரில் சிறுபான்மை வாக்குகள் இருக்கிறது. கிறிஸ்துவ மக்கள் வாக்கே 12லிருந்து 15 விழுக்காடு இருக்கிறது என்கிறார்கள். இஸ்லாமியர்கள் வாக்கு 10 விழுக்காடு இருக்கிறது. அதாவது சாதாரண சாமானிய மக்கள், உழைக்கும் வர்க்கத்தினர் பெரம்பூரில் அதிகம் இருக்கிறார்கள்.பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட்டால் ஸ்டார் தொகுதியாக மாறும். அதைவிட இன்னொன்னு இருக்கு தெரியுமா? பெரம்பூர் கொளத்தூரை ஒட்டிய தொகுதி. எதற்கு பெரம்பூரில் போட்டி போடுறீங்க கொளத்தூரிலேயே போட்டியிட வேண்டியதுதானே. இன்னும் வேல்யூ நல்லா இருக்குமே. எனக்கும் ஸ்டாலினுக்கும் தான் போட்டி என்று சொல்கிற விஜய் ஒரு பெரிய ஹீரோயிசம் காமிக்கிற ஆளாக இருந்தால் நியாயமாக கொளத்தூரில் போட்டிடணும். அப்போது தான் அது நியாயமான போட்டி.
politics dmk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe