கடந்த பிப்ரவரி 28 முதல் அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் ஈரான் இஸ்ரேல் போர் சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
51
'Is America such a big danger so close to Kumari?' - Shocking new monk Haleem Photograph: (INDIA)

ஈரானுடைய நீர்மூழ்கி கப்பல் இந்தியா அருகில் அமெரிக்காவால் தாக்கப்பட்டுள்ளது. எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

இப்படி ஒரு நீர்மூழ்கி கப்பல் அங்கு இருந்தது இந்திய அரசுக்கு தெரியுமா தெரியாதா? எத்தனை நீர்மூழ்கி கப்பல்கள் இந்திய பெருங்கடலில் இருக்கிறது. இந்தியாவுடைய பாதுகாப்புக்கு இவ்வளவு பெரிய அச்சுறுத்தல் இருக்கிறது. இதற்கு உள்துறை அமைச்சகம் பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா? 150 பேர் கொண்ட ஒரு ஈரானிய கப்பல். அது ஈரானிய போர்க்கப்பல் தான். ஆனால் போருக்காக போகவில்லை. அவர்களை இலங்கை காப்பாற்றி விட்டார்கள். ஆனால் இந்தியா பண்ணவில்லை. அந்த போர்க்கப்பல் எங்கிருந்து தாக்கப்பட்டது? அமெரிக்காவுடைய நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உடைய ஒப்புதலோடு செலுத்தப்பட்டு இருக்கிறது. இது இந்திய அரசாங்கத்துக்கு தெரியுமா தெரியாதா?

வட இந்தியாவில், காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று சொல்லி கொந்தளிச்சோம். தேசபக்தியை பற்றி பேசினோம். ஊடுருவல் நடந்ததற்கே நாம் கோபப்பட்டோம். ஆனால் ஒரு நீர்மூழ்கி கப்பல் நம்ம எல்லைக்குள் விருந்தாளியாக வந்துள்ளது. அவர்களை குறிவைத்து தாக்கி இருக்கிறார்கள். அந்த கப்பல் சின்னாபின்னம் ஆக்கப்பட்டு கிட்டத்தட்ட 87 பேர் கொல்லப்பட்டு இருக்காங்க 61 பேரின் உடல்களை காணும். சர்வதேச எல்லையை தொட்டு கொண்டிருக்கூடிய இடத்தில் இது நடந்துள்ளது.  

முன்னாடியெல்லாம் சொல்வார்கள் நாம் கட்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததற்கு காரணமே இலங்கை திருகோணமலையில் அமெரிக்கா தன்னுடைய ஏர்பேஸ்-ஐ கட்டமைக்க முயற்சி செய்தார்கள். அதை தடுப்பதற்கு தான் நம்ம கட்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தோம் என்று சொல்வார்கள். அப்படி அமெரிக்காவை அனுமதித்தால் பாகிஸ்தான் அங்கு ராணுவத்தை நிறுத்திவிடுவார்கள். எனவே இலங்கை நமக்கு தேவை. இலங்கையின் உறவு நமக்கு தேவை என்று கட்சதீவை கொடுத்தோம். ஆனால் இன்னைக்கு அமெரிக்காவின் நீர்மூழ்கி கப்பல் அங்கு இருக்கிறது. என்னுடைய கேள்வி இது ஒரு கப்பல் தான் இருக்கா? இன்னும் எத்தனை கப்பல்கள் நமது பக்கத்தில் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு பக்கத்தில் இருக்கிறது. இது ஒரு ஆபத்து இல்லையா? நேற்று ஈரானுடைய வெளியுறவு அதிகாரி கொடுத்த ஒரு பேட்டி  டைம்ஸ் நவ்வில் வந்தது. 'இனி அமெரிக்காவின் அடுத்த குறி இந்தியா' என்று அவர் சொல்கிறார். இதனோடு நேற்று நடந்த தாக்குதலை பொருத்திப் பாருங்க.

கன்னியாகுமரியில் இருந்து 22  தூரத்தில் இது நடந்துள்ளது. இது நம்ம பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தல் இல்லையா? உள்துறை அமைச்சகம் பதில் சொல்லியிருக்க வேண்டாமா? நீர்மூழ்கி கப்பல் எங்களுடைய அனுமதியுடன் தான் நிற்கிறது. அது சர்வதேச எல்லையில் இருப்பது எங்களுக்கு நன்றாக தெரியும் என்று எந்த அறிக்கையாவது இன்னைக்கு உள்துறை அமைச்சகம் கொடுத்திருக்கிறதா?  அமித்ஷா வாயை திறக்கவில்லை. எந்த அமைச்சர்களும் வாயை திறக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு அச்சுறுத்தல் தென்னிந்திய பகுதியில் இருப்பது நமக்கு அதிர்ச்சி. எப்போதுமே நமக்கு எல்லைப் பிரச்சனை  என்பது வட இந்தியாவில் இருக்கும், பாகிஸ்தான் பார்டரில் இருக்கும், சைனா பார்டரில் இருக்கும். பங்களாதேஷ் பார்டரில் இருக்கும். இலங்கையின் பார்டரில்  நமக்கு பிரச்சனை இருக்காது. தமிழக மீனவர்கள் தான் போய் மாட்டிக் கொள்வார்கள். இலங்கை நேவியோடுதான் நம்ம சண்டை போடுவோம். சில நேரம் சண்டையும் போட மாட்டோம். இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை பிடித்துக்கொண்டு போய் விட்டார்கள் என்போம். இது மட்டும் தான் நடக்கும்.

நாம் இதுவரை என்ன நினைத்துக்கொண்டிருக்கிறோம்? தென்னிந்திய பகுதி பாதுகாப்பானது. வங்காள விரிகுடாவும், தென்னிந்திய கடலும், அரபிக் கடலும் பாதுகாப்பானது. இங்கு எந்த பிரச்சனையும் இல்லை. பக்கத்தில் இலங்கை இருக்கிறது. நமக்கு அனுசரணையான நாடு. ராமேஸ்வரத்தில் எடுத்துகொண்டால் இந்திய கடற்படை கப்பல் குறைவு. வட இந்திய அளவுக்கு கற்படை கப்பல்கள் இல்லை. கல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சின் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அளவுக்கு இங்கு கடற்படை கப்பல்கள் இல்லை. காரணம் இங்க ஆபத்துகள் கிடையாது. ஆனால் அமெரிக்காவுடைய நீர்மூழ்கிக் கப்பல் எனும் இவ்வளவு பெரிய ஆபத்து உள்ளே இருந்துள்ளதே. இதைப்பற்றி நாம் ஏன் வாயை திறக்கவில்லை.