தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் ஐ நா அதிகாரி கண்ணன் தமிழக அரசியல் களத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நக்கீரன் டிவியில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/03/5-2026-03-03-17-43-06.jpg)
ஒவ்வொரு தேர்தலிலும் பல வித்தியாசமான புதுமையான சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறது உண்டு. 1952 தேர்தலிலும் 1957 தேர்தலிலும் இரட்டை இலக்கத் தொகுதிகள் இருந்தது. இரட்டை முறை இரட்டை இலக்க தொகுதிகள் வந்து பல தொகுதிகளில் இங்கு இருந்தது. அதில் ஒரு சின்ன சிக்கல் 1957 தேர்தலில் வந்தது. கோயம்புத்தூரில் இரட்டை இலக்க தொகுதியில் தோற்ற பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் அதேதொகுதியில் பொதுப்பட்டியலில் வென்றவரை காட்டிலும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். இது ஒரு குழப்ப நிலையை உண்டாக்கிவிட்டது. இது ஒரு சிக்கலை கொண்டு வந்தது. அதன்பிறகு இரட்டை தொகுதிகள் முறையை 1962 தேர்தலில் இருந்து ஒழித்துவிட்டார்கள்.
அதற்கு பிறகு தனித்தொகுதிகள் கொண்டுவந்தார்கள். அங்கு ஒரே ஒரு வாக்குதான். பட்டியல் இனத்தவரை சேர்ந்தவர்கள் மட்டும் தான் நிற்க முடியும் அல்லது மலைவாழ் மலை ஜாதியினர் மட்டும் தான் நிற்க முடியும். அவர்களுக்கு பொதுவாக உள்ள எல்லோரும் வாக்களிப்பார்கள் என்ற முறை வந்தது. புனே ஒப்பந்தத்திற்கு முன்பாக அம்பேத்கர் நினைத்தது மலைவாழ் மக்கள் வேட்பாளரை மலைவாழ் மக்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டியலின மக்களின் வேட்பாளரை பட்டியலின மக்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு என இருக்க வேண்டும் என அம்பேத்கர் நினைத்தார். காந்தி அதை மாற்றி விட்டார். அதனால் இப்போது சட்டமன்றத்திலும் தனிப்பட்டியல் இருக்கிறது, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனிபட்டியல் இருக்கிறது.
1952 தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் போட்டியிடவில்லை. திமுக போட்டியிடவில்லை என்றாலும் கூட அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட சுயேட்சை வேட்பாளர்களை ஆதரித்தார்கள். அந்த சுயேட்சை வேட்பாளர்களில் இரண்டு முக்கியமான வன்னிய கட்சிகளுடைய வேட்பாளர்கள் அடக்கம். மாணிக்கவேல் நாயக்கருடைய உழைப்பாளர் கட்சியும், ராமசாமி படையாட்சியினுடைய பொதுநலக்கட்சி. இந்த இரண்டு கட்சியும் பெரிய வன்னிய தலைவர்களை கொண்டது. பின்னாடி ராஜாஜி அமைச்சரவையில் மாணிக்கவேல் நாயக்கர் அமைச்சர் ஆனார். ராமசாமி படையாட்சியும், மாணிக்கவேல் நாயக்கர் இரண்டு பேரும் காமராஜருடைய ஆட்சியில் அமைச்சர்கள் ஆனார்கள். அதில் மாணிக்கவேல் நாயக்கர் ஆறு சட்டமன்ற தொகுதிகளை வெல்கிறார். ராமசாமி படையாட்சி 19 தொகுதிகளை வெல்கிறார். அப்போது ஒன்றுபட்ட சென்னை ராஜதானி. மொத்தம் 375 இடம் இருந்தது. அந்த 375 இடங்களில் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து 25 இடங்கள் வாங்கி இருக்கிறார்கள். இவர்களுக்கு ஆதரவு தந்த திமுக இவர்களிடத்தில் ஒரு ஒப்பந்த பத்திரத்தை எழுதி வாங்கி கொண்டது. அந்த ஒப்பந்த பத்திரத்தில் என்ன இருந்தது என்றால் 'இவர்கள் வென்றார்கள் என்றால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய திராவிட நாடு கோரிக்கைக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் செயல்படுவார்கள்' என எழுதி வாங்கிக் விட்டார்கள்.
காங்கிரசுக்கு அப்போது அறுதி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பெரிய சக்தியாக கம்யூனிஸ்டுகள் வெல்கிறார்கள். இன்னைக்கு இருக்கிற ஆந்திராவில நிறைய இடங்கள் அவர்கள் வெல்கிறார்கள். ஆந்திரா-தெலுங்கானாவில் இருக்க நிஜாம்களுக்கு எதிராக நிலச்சுவாந்தர்களுக்கு எதிராக அவர்கள் போராடுகிறார்கள். அதனால் கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு பெரிய செல்வாக்கு இருந்தது. அவர்கள் பெரிய இடங்களில் வெல்கிறார்கள். இங்கே தமிழ் பகுதிகளில் காங்கிரஸ் நிறைய இடங்களில் வென்றது. ஆனால் அமைச்சரவையை அமைக்க முடியவில்லை. சுயேச்சைகள் 40 முதல் 50 பேர் வென்றிருக்கிறார்கள். இவர்களை காங்கிரஸ் இழுக்க முயல்கிறார்கள். ஒரு பாராட்டு விழா நடந்தது. சென்ட்ரல் பக்கத்தில் சென்மேரிஸ் ஹாலில் நடந்த அந்த பாராட்டு விழாவில் அண்ணா பேசுகிறார். 'தப்பித்தவறி அங்கு போய்விட்டால், கட்சி மாறிவிட்டால் இவர்களை தொழு நோயாளிகளாக மக்கள் பார்ப்பார்கள்' என்று அண்ணா சொல்கிறார்.
ஆனால் முதலிலேயே பெரியார் சொல்லிட்டார் 'இவர்கள் போய்விட்டால் நீங்க என்ன பண்ண முடியும்' என்று பெரியார் கேட்டார். இந்த ஒப்பந்தம், இந்த பத்திரம் இதெல்லாம் அபத்தம் என்றார். வன்னியர்கள் ஒரு பெரிய சக்தி வடதமிழ்நாட்டில். அவர்கள் ஒரு பெரிய சக்தி அதனால் அவர்களை பகைத்து கொள்வதற்கு அண்ணாவுக்கோ திமுகவிற்கோ மனசு இல்லை. அதனால் 'மாணிக்கவேல் நாயக்கரை சிங்கமாக உருவகப்படுத்தி அண்ணா சொன்னார் 'சிங்கத்தை ஒரு கூண்டில் அடைத்து விட்டார் இந்த நரித்தனமான ராஜாஜி' என்று அண்ணா விமர்சித்தார். அடுத்த முறை காமராஜர் ஆட்சியில் இரண்டு பேரும் கட்சியை கலைச்சிட்டு கொண்டு போய் சேர்ந்துட்டாங்க. அதன்பிறகு 80 களின் பிற்பகுதியில் தான் ராமதாஸ் மூதாதயர் வன்னிய கட்சிகள் என்ற அடிப்படையில் வன்னியர் சங்கம் தொடங்கி, பின்னாளில் அது பாட்டாளி மக்கள் கட்சியாக உருவெடுப்பதை நாம் பார்க்கிறோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/03/9-2026-03-03-17-42-50.jpg)