Advertisment

இந்த தாக்குதல்களை எல்லாம் விஜய் தட்டிக் கேட்பாரா?-பட்டியலிட்ட சங்கத்தமிழன்

407

tvk Photograph: (vijay)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment

405
vck Photograph: (sangatamilan)

ஒவ்வொரு வீட்டிலும்  ஒரு விஜய் இருக்கிறார் என்று தவெகவினர் சொல்கிறார்களே?

விஜய்யின் ஒருபக்கம் ஒயிட் அண்ட் ஒயிட்டில் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். அவரை யார் என்று நினைக்கிறீங்க? கள்ள டிக்கெட் விற்ற பார்ட்டிங்க அவர். அங்கங்கு இருக்க தியேட்டர்களுக்கு முன்னாடியே போய் இருக்கிற டிக்கெட்டை எல்லாம் வாங்கிட்டு எல்லாத்தையும் போய் விற்று ரொம்ப பரபரப்பா இருக்கிற மாதிரி காட்டுவது தான் ஆனந்தின் வேலை. விஜய் இதைப் பார்த்து யாரு இது நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறது. தமிழ் உருப்படியாக பேசத் தெரியவில்லை. இது நல்ல அடிமை என அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரைக்கும் பக்கத்தில் வைத்திருக்கிறார்.

இவரை மட்டும் பக்கத்திலேயே விஜய் வைத்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? புஸ்ஸி ஆனந்த் ஒன்லி கல்லாப்பெட்டியை பார்க்கக்கூடிய ஆளு. கள்ள டிக்கெட் விற்கக்கூடிய ஆளு. இன்னொருத்தர் இருக்கிறார் அவர் யார்? அவர் தான் லாட்டரி சீட்டு பார்ட்டி. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எப்போதும் கல்லாப்பெட்டி மேல்தான் அவர்களுக்கு எண்ணங்கள் இருக்கும். ஏனென்றால் விஜய் பேசும்போது சொல்கிறார். நான் வெற்றி பெற்று வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் வந்து நான் பார்ப்பேன். நான் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு குடும்பமாக வந்து பார்ப்பேன். எப்படி ஏழு கோடி, எட்டு கோடி மக்கள் இருக்காங்க எல்லா வீட்டையும் பார்ப்பாரா?

எவ்வளவுக்கு மக்களை சீட்டிங் பண்ண முடியுமோ ஏமாற்ற முடியுமோ அந்த வேலையை விஜய் செய்கிறார். விஜய்யின் பேச்சில் இப்போது இம்ப்ரூவ்மென்ட் வந்திருக்கிறது. ஃப்ளோ நன்றாக கிடைக்கிறது. முன்பெல்லாம் அந்த பேப்பரை வைத்ததுதான் முழுக்க படிப்பார். அந்த ஃப்ளோ கிடைச்சிருகிறது. அதற்கு பாராட்டுக்கள். இன்னொன்று  நடிப்பில் திரைப்படத்தை விட கொஞ்சம் மிஞ்சி இருக்கிறார். ஒரு இடத்தில் அழுகிறார். சினிமா செட்டிங் மாதிரியான நிகழ்வுதான் வேலூரில் நடந்தது. அதில் அரசியலுக்கான ஏதாவது ஒன்று இருந்ததா? களத்தில் என்ன பிரச்சனை இருக்கோ அங்கு போய் பேச வேண்டும்.

Advertisment
தமிழ்நாட்டில் பல பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. தலித்துகளை எல்லாம் பாதுகாப்போம். புரட்சியாளர் அம்பேத்கரை கொள்கை தலைவராக வைத்துள்ளோம் என்று சொல்கிறார்களே நீதிமன்றமே கவினுடைய படுகொலையில் ஏன் அந்த அம்மாவை கைது செய்யவில்லை என்று கேட்டுள்ளது. ஆனால் சிபிசிஐடி இதுவரைக்கும் கைது பண்ணவில்லை. கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் அதுகுறித்து பதிவு போட்டிருக்கார். இன்னொன்று அதே தூத்துக்குடி ஏரியாவில் ஜீவானந்தம் என்ற பையனை அடிச்சிருக்காங்க. பயங்கரமான கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதையும் தலைவர் பதிவில் தட்டிக் கேட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் கிரி என்ற ஒரு தம்பி எதார்த்தமாக போய் ஒரு கட்சியின் விளம்பர அட்டைக்கு பக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.அதற்கு அவனை அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி வன்கொடுமை செய்துள்ளார்கள். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அந்த பையனை முட்டி போட வச்சு டார்ச்சர் பண்ணி இருக்காங்க. எங்க தலைவர் பதிவு போட்டுள்ளார். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் அவன் ஒன்றும் எங்கள் கட்சிக்காரன் இல்லை. எங்கேயோ ஒரு நிகழ்வு நடந்திருக்கு. தமிழ்நாட்டில் நடந்திருக்கு என்று ஒரு பதிவு போடுகிறோம். நான் தான்டா அடுத்த முதல்வராக போறேன் என்று சொல்லும் விஜய்  இது மாதிரியான நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், களத்திற்கு போக வேண்டும். அவன்தான் களமாட கூடிய அரசியல்வாதி. அப்போது நீ யாரு? நீ வெறும் சினிமாக்காரன் என்று நாங்கள் சொல்வது என்ன மாற்று கருத்து இருக்கிறது.
 
 
politics sangatamizhan vck tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe