/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/27/405-2026-02-27-14-42-08.jpg)
ஒவ்வொரு வீட்டிலும் ஒரு விஜய் இருக்கிறார் என்று தவெகவினர் சொல்கிறார்களே?
விஜய்யின் ஒருபக்கம் ஒயிட் அண்ட் ஒயிட்டில் புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார். அவரை யார் என்று நினைக்கிறீங்க? கள்ள டிக்கெட் விற்ற பார்ட்டிங்க அவர். அங்கங்கு இருக்க தியேட்டர்களுக்கு முன்னாடியே போய் இருக்கிற டிக்கெட்டை எல்லாம் வாங்கிட்டு எல்லாத்தையும் போய் விற்று ரொம்ப பரபரப்பா இருக்கிற மாதிரி காட்டுவது தான் ஆனந்தின் வேலை. விஜய் இதைப் பார்த்து யாரு இது நமக்கு ஒரு அடிமை சிக்கி இருக்கிறது. தமிழ் உருப்படியாக பேசத் தெரியவில்லை. இது நல்ல அடிமை என அந்த காலகட்டத்தில் இருந்து இந்த காலகட்டம் வரைக்கும் பக்கத்தில் வைத்திருக்கிறார்.
இவரை மட்டும் பக்கத்திலேயே விஜய் வைத்திருக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? புஸ்ஸி ஆனந்த் ஒன்லி கல்லாப்பெட்டியை பார்க்கக்கூடிய ஆளு. கள்ள டிக்கெட் விற்கக்கூடிய ஆளு. இன்னொருத்தர் இருக்கிறார் அவர் யார்? அவர் தான் லாட்டரி சீட்டு பார்ட்டி. இப்படிப்பட்ட ஆட்களுக்கு எப்போதும் கல்லாப்பெட்டி மேல்தான் அவர்களுக்கு எண்ணங்கள் இருக்கும். ஏனென்றால் விஜய் பேசும்போது சொல்கிறார். நான் வெற்றி பெற்று வந்தால் ஒவ்வொரு வீட்டிலும் வந்து நான் பார்ப்பேன். நான் வெற்றி பெற்ற பிறகு ஒவ்வொரு குடும்பமாக வந்து பார்ப்பேன். எப்படி ஏழு கோடி, எட்டு கோடி மக்கள் இருக்காங்க எல்லா வீட்டையும் பார்ப்பாரா?
எவ்வளவுக்கு மக்களை சீட்டிங் பண்ண முடியுமோ ஏமாற்ற முடியுமோ அந்த வேலையை விஜய் செய்கிறார். விஜய்யின் பேச்சில் இப்போது இம்ப்ரூவ்மென்ட் வந்திருக்கிறது. ஃப்ளோ நன்றாக கிடைக்கிறது. முன்பெல்லாம் அந்த பேப்பரை வைத்ததுதான் முழுக்க படிப்பார். அந்த ஃப்ளோ கிடைச்சிருகிறது. அதற்கு பாராட்டுக்கள். இன்னொன்று நடிப்பில் திரைப்படத்தை விட கொஞ்சம் மிஞ்சி இருக்கிறார். ஒரு இடத்தில் அழுகிறார். சினிமா செட்டிங் மாதிரியான நிகழ்வுதான் வேலூரில் நடந்தது. அதில் அரசியலுக்கான ஏதாவது ஒன்று இருந்ததா? களத்தில் என்ன பிரச்சனை இருக்கோ அங்கு போய் பேச வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/27/407-2026-02-27-15-13-46.jpg)