தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
021
'If you join, will the volunteers change their minds?' - puthumadam haleem Photograph: (politics)

'நாங்கள் ஒன்றாக போட்டியிடுகிறோம். எனவே திமுக வாக்குகளை தான் விஜய் பிரிப்பார்'  என்கிறார் டி.டி.வி.தினகரன். உங்கள் பார்வை என்ன?

Advertisment

ஏன் உங்களுக்கு சாதகமான விஷயத்தை மட்டும் தான் பேசுவீங்களா? நான் தினகரனை கேக்கிறேன். அவருக்கு பாதகமான விஷயங்கள் எதுவும் இல்லையா? முதல் பாதகம் அமமுக என்று ஒரு கட்சியை எதுக்கு ஆரம்பிச்சீங்க? இந்த கட்சி ஆரம்பித்த நோக்கம் என்ன? திமுகவை எதிர்த்தா? திமுகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றா? தீயசக்தி திமுகவை நீக்கிவிட்டு நாங்கள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றா? எடப்பாடியை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக என்ற கட்சியை நாங்கதான் கைப்பற்றி அதை ஆட்சி பண்ணுவோம். கட்சி எங்களுக்கு சொந்தம். எடப்பாடி தான் ஒரு தீயசக்தி என்று சொல்லிதான் நீங்கள் கட்சி ஆரம்பிச்சீங்க. உங்க நோக்கம் அதுதானே.

சில மாதங்களுக்கு முன்பு கூட நீங்க அப்படித்தான் பேசுனீங்க. அம்மாவுடைய (ஜெயலலிதா) பேச்சைக் கேட்கவில்லை. ஜெயலலிதா சொன்னாங்க பாஜகவோடு கூட்டணி இல்லை என்று, ஆனால் நீங்கள் சேர்ந்துட்டீங்க. நாங்கள் சேர்ந்ததால் ஓட்டு சேரும் என்று சொன்னீர்கள். எடப்பாடியை உடன் விரோதத்தை வளர்த்துதான் நீங்கள் ஒரு கட்சி ஆரம்பிச்சீங்க. தென்னகத்தில் ஏன் எடப்பாடி வந்தால்  எதிர்ப்பு குரல் வந்தது. எடப்பாடி முக்குலத்தோர் சமூகத்துக்கு எதிரானவர் அப்படின்னு நீங்கள் ஒரு பிம்பத்தை கட்டமைத்தீர்கள். தென்னகத்தில் அவருக்கு வாக்களிக்க கூடாது என சொன்னீங்களே.

ராமநாதபுரம், தேனி அந்த பகுதி முழுவதும் எடப்பாடிக்கு ஓட்டு வரவில்லை. காரணம் நீங்கள் போடக்கூடாது. இவர் நம்முடைய சமூகத்துக்கே விரோதம் செஞ்சிருக்காரு, 10.5 விழுக்காடு கொடுத்ததே நம் சமூகத்திற்கு எதிரான ஒரு செயல்தான். கட்சியை பிடிச்சுக்கிட்டார். நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாரு துரோகி. இப்படி எல்லாம் சொல்லிட்டு நீங்கள் மேலே சேர்ந்து விட்டீங்கள் என்றால் தொண்டர்களும் உடனே மனம் மாறிடுவாங்களா? தொண்டர்களுடைய மனநிலை என்ன? ஓபிஎஸ் நினைச்சது வேறு தினகரன் நினைச்சது வேறு.

ஓபிஎஸ் தன்னை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்க வேண்டும் என்கிறார். சசிகலா நான்தான் பொதுச்செயலாளர் என்று சொன்னார். எதற்கும் வாய்ப்பில்லை என்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. நீங்கள் தனிக்கட்சி ஆரம்பித்த நோக்கம் என்பது எடப்பாடிக்கு எதிரானது. உங்க கட்சியே எடப்பாடிக்கு எதிரான கட்சிதான். ஆனால் இன்னைக்கு நீங்க தொண்டர்கள் கிட்ட என்ன சொல்றீங்க 'அம்மா வளர்த்த பிள்ளைகள், பங்காளிகள் சேர்ந்துட்டோம். அதெல்லாம் பேச்சுக்கு சொல்றதுதான். ஒரு ஃப்ளோல சொல்றதுதான். ஏதோ ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். அதாவது எடப்பாடியோட சேர்வதும் ஒன்னுதான் தற்கொலை முடிவு என்பதும் ஒன்றுதான் என்று ஒரு ஃப்ளோல சொல்லிட்டேன். இதெல்லாம் மனசுல வச்சுக்கலாமா?' என்றபடி பேசுகிறார்கள். இப்போது இதை தொண்டர்கள் எப்படி பார்ப்பார்கள்? உங்க சமூக மக்கள் எப்படி பார்ப்பாங்க?