தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
'நான் வீட்டுக்குள்ளயே இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் நான் இருப்பதாக விஜய்யே சொல்கிறார்? என்ன நினைக்கிறீர்கள்?'
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/104-2026-02-06-16-31-00.jpg)
கட்சி ஆரம்பித்த முதலில் பாஜகவை கொள்கை எதிரி, அந்த எதிரி, இந்த எதிரி என்று விஜய் சொல்லிட்டு இருந்தார். இப்போது பாஜகவை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்றது இல்லையே ஏன்? அண்மையில் மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் பற்றி விஜய் என்ன சொல்லியிருக்கிறார். எதுவும் சொல்லவில்லை. ஒரு அரசியல் கட்சி தலைவர் பட்ஜெட் பற்றி பேச வேண்டாமா? மத்திய அரசு கொண்டு வந்திருக்கிற பல சட்டங்கள் குறித்து கருத்து சொல்ல வேண்டாமா?, தமிழ்நாடு அரசு சட்டம் வகுப்பதில் எந்த தவறுமே பண்ணவில்லையா? அதையெல்லாம் விமர்சிக்க வேண்டாமா?
திருப்பி திருப்பி என்னைக் கண்டு அவர்கள் பயப்படுகிறார்கள். என்னை கண்டு உதயநிதி ஓடிவிட்டார். என்னை கண்டு ஸ்டாலின் நடுங்கி விட்டார். என்னை கண்டு துரைமுருகன் உடம்பு சரியில்லாமல் படுத்துக் கொண்டார் என இதை தவிர விஜய் என்ன பாலிடிக்ஸ் பேசினார். அவ்வளவு பெரிய பூச்சாண்டியா விஜய்.
ஒவ்வொரு வீட்டிலும் விஜய் இருக்கிறார் என்றால் அப்போது நீ எதற்கு? என் வீட்டிலேயே ஒரு விஜய் இருக்குபோது நான் உன்னை சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியம் என்ன?. விஜய்க்கு இன்று விளம்பரம் கிடைக்கும் என்று பேசிகிட்டு இருக்காரு. திமுக 1949ல் தொடங்கிய கட்சி. விஜய்யின் அப்பாவே அப்போது பிறந்திருப்பாரா என்று தெரியாது. விஜய் இப்போதுதான் ஐஸ் ப்ரூட் வச்சுக்கிட்டு விரல் சூப்பிட்டு உக்காந்துட்டு இருக்க ஒரு சின்ன பையன். ஏதோ குழந்தை கத்திக்கொண்டு இருக்கிறது என்று நாங்க பாட்டுக்கு போயிட்டு இருக்கோம். ஓவரா பேசி உதை வாங்காதே அவ்வளவுதான். கேள்வி கேக்குறதுக்கு முதல்ல விஜய்க்கு அறிவு இருக்கா?
விஜய் இப்போது பாஜக கூட்டணியில் உள்ளார். பாஜக யார் யாரை கையில் வச்சிருக்காங்க என்று தெரியும். எலக்சன் கமிஷனை பாஜக கையில் வைத்துள்ளது. தேர்தலில் ஞானேஷ்குமார் கொடுக்கிறது தான் ரிசல்ட். 'நீ எவ்வளவு கொடுத்தாலும் நாங்கதான் முதல்லயே ரிசல்ட் ரெடி பண்ணி வச்சுட்டோம்' என புஸ்ஸி ஆனந்த் வெளிப்படையாக சொல்கிறார். இது புஸ்ஸி ஆனந்தின் தன்னிலை விளக்கம். 'நாங்க ரிசல்ட்டை முதலிலேயே டேம்பர் பண்ணி ரெடி பண்ணிட்டோம். சும்மா கணக்கு காட்டிட்டு இருக்கிறோம். நீங்கள் ஓட்டு போட்டு நாங்க ஒன்னு ஜெயிக்க போறது இல்லை. நாங்க ஜெயிச்சாச்சு' என எலெக்ஷன் கமிஷன் உள்ள நம்பிக்கையில் தவெக உள்ளது. இன்னைக்கு இருக்கிற நிலைமை இதுதான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/272-2026-02-06-16-33-26.jpg)