Advertisment

'இந்த சூழல் முத்தினால் பீகார் முடிவுதான்'-புட்டு புட்டு வைத்த புதுமடம் ஹலீம்

358

dmk Photograph: (politics)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (congress)
திமுக -காங்கிரஸ் கூட்டணி விவகாரம் பீகார் தேர்தல் போன்ற தாக்கத்தை தமிழகத்தில் கொடுத்துவிடுமா?
மாணிக்கம் தாகூர் போன்றோர்களின் பேச்சுக்களுக்கு திமுக தலைமை பதில் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்து திமுக டெம்ட் ஆகுறீங்க. அதை பாஜக கூட்டணி விரும்புகிறது. ஆனால் திமுக தலைமையோ அதைச் சார்ந்தவர்களோ அதைப்பற்றி  பேசுவது இல்லை. திமுக அமைப்புச் செயலாளர் பாரதி மட்டும் பேசினார். ஆர்.எஸ்.பாரதி என்ன சொன்னார் 'எங்களுக்கு மூணு பேர்தான் முக்கியம்  ராகுல் காந்தி, கார்கே, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை. இந்த மூணு பேர் சொன்னால் நாங்கள் பதில் கொடுக்கறோம். அந்த ஸ்டேட்மெண்ட் கிளியர் உங்களுக்கு ஆயிடுச்சா? அப்போது இந்த மாணிக்கம் தாகூர் போன்ற இந்த அம்புகள் யாரால் எய்யப்பட்டவர்கள்?  ராகுல் காந்தி எய்யவில்லை என்று சொல்றாங்க. அப்போது யாரால் எய்யப்பட்டவர்கள்?
உங்கள் ஈகோவை எங்கே கொண்டு வந்து நிப்பாட்டுகிறீர்கள். கடைசியில் மாநில அளவு சுருங்கி இன்னைக்கு மாவட்டத்திற்கு கொண்டு வந்து விட்டீர்கள். இதை நான் சொல்லவில்லை கோபண்ணா, செல்வப்பெருந்தகை, சசிகாந்த் போன்றவர்கள் எல்லாம் சொல்கிறார்கள். இது தேவையில்லாத வேலை. இன்றைக்கு இந்திய அளவில் ஒரு சித்தாந்த யுத்தமே நடக்கிறது. எந்த மாதிரியான காலத்தில் நாம் இருக்கிறோம். பீகார்ல மாதிரியே இன்னைக்கு தமிழ்நாட்டில் கொண்டு வந்துட்டு இருக்காங்க. நீங்க நல்லா பாருங்க பீகாரில் எஸ்ஐஆர் கொண்டு வந்தார்கள், காங்கிரஸ் கூட்டணி வலுவில்லாமல் போனது,  முதல்வர் வேட்பாளரை நாங்கள் அறிவிக்க மாட்டோம் என சொன்னார்கள். தேஜஸ்விக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கூட்டணி ஜெல் ஆகவில்லை கடைசிவரை.
இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் கூட்டணியை விட்டே வெளியே போனார்கள். அந்த மாதிரி நிலைமையை தான் இங்கும் காங்கிரஸ் கொண்டு வந்துட்டு இருக்காங்க நல்லா பாருங்க. அதெல்லாம் யாரால் நடந்துச்சு? பீகாரில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களால் தான் நடந்துச்சு. அப்போது கூட ராகுல் வாய் மூடி தான் இருந்தார். ஏன் பேசவில்லை? கார்கே வாய் மூடி தான் இருந்தார். அப்போது தோல்விக்கான காரணம் யார்? அங்கு தேஜஸ்வி மட்டுமல்ல காங்கிரஸுமே படுதோல்வி அடைந்தது. அந்த மாதிரி நிலைமைக்கு இங்கும் போயிட்டு இருக்கு. எல்லோரும் சொல்லலாம் காங்கிரஸை திமுக கழட்டி விட்டு போயிடலாமே என்று, ஆனால் இந்த சூழல் முத்தினால் பீகார் தேர்தல் போன்ற ஒரு சூழல் இங்கும் வந்துவிடும்.
congress dmk alliance parties ragul ganthi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe