தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

Advertisment
269
If he had come, would Vijay's story have been cleared up? - Doctor Kantharaj exploded Photograph: (tvk)
Advertisment

தேர்தல் நெருங்கி வருகிறது. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

கட்சி ஆரம்பித்து மூணு வருஷம் ஆயிடுச்சு. இரண்டு வருடம் ஓவர். மொத்தமாக 15 கூட்டம். அதில் இரண்டு தடவை தலைமறைவு ஆகியாச்சு. மொத்தம் 24 மாசத்தில் 20 மாசம் தான் அவர் வெளியில் இருந்திருக்கிறார். மீதம் நான்கு மாதம் பயந்துபோய் உள்ள தலைமறைவாக போனதுதான் மிச்சம். கடைசியாக இரண்டு மூணு மாதமாக விஜய் என்ன ஆனாருன்னே தெரியவில்லை. கேட்டா சிபிஐ விசாரணையில் இருக்கிறார் என்று என்னென்னமோ கதை சொல்லிட்டு இருக்காங்க. சிபிஐ விசாரணை என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. ஒன்னும் தகவலே இல்லை.

Advertisment

ஒரு போராட்டம் உண்டா? ஒரு ஊர்வலம் உண்டா? ஒரு மாநாடு உண்டா? ஒரு பொதுக்கூட்டம் உண்டா? என்ன இருக்கு? பனையூர் பெட்ரூம்ல படுத்துருக்கறாரு.. அவர் சொன்னதாக சொல்லி பல செய்திகளை மீடியாக்கள் சொல்லிட்டு இருகாங்க. அவர் யார்கிட்ட இந்த செய்தியை சொன்னாரு? அவரா சொன்னாரா? இல்ல நீங்களா எடுத்துருக்கீங்களா? ஒண்ணுமே தெரியாது.

விஜய் ஒரு தடவை வெளியே வந்தாவே ஒரு மாசம் இரண்டு மாசம் அவரைப் பற்றியே பேசுறீங்க. ஒரு காலத்துல சீமானை தூக்கி அடிச்சுக்கிட்டு இருந்தீங்க. சீமான் இப்படி சொல்லி இருக்கிறார் அப்படி சொல்லி இருக்கிறார் என்று சொல்லி சீமானை ஒரு மகானாக காட்டினீங்க. அடுத்த சினிமாக்காரர் விஜய் வந்தாரு. சீமானை தூக்கி அம்போன்னு தூக்கி போட்டுட்டு உடனே விஜய்யை புடிச்சிட்டீங்க. இதைவிட ஒருவேளை ரஜினி வந்திருந்தால் விஜய்யோட கதை காலி  ஆகிடும். விஜய்க்கு என்று சுயபுக்தி  இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை.  சினிமாவிலும் சரி அரசியலிலும்  சரி யாரோ எழுதி கொடுத்த வசனத்திற்கு நீ உதட்டை அசைகின்ற. அந்த வாய்ஸ் கூட உன்னுடையாதா இல்லையா என்று தெரியவில்லை.

விஜய் ஒரு சீரியஸ் அரசியாவதியே இல்லை. இதுவரையில அவர் என்ன செஞ்சாரு. ஒரு கட்சி எலக்ஷன் நடத்தவில்லை. ஒரு தேர்தலிலும் நிற்கவில்லை. கட்சியில் கூட எல்லாப் பொறுப்புமே நியமனப் பொறுப்புதான். எல்லாமே வீட்டுக்குள் உட்கார்ந்துகொண்டு, பெட்ரூல்மில் படுத்துகிட்டு, மக்களை சந்திப்பதற்கு பயந்துகிட்டு தனி பிளைட்டில் போற சாமி அவர். அவர் எப்படி பொதுமக்கள் கிட்ட வருவார். பொதுமக்களுக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கு. மீடியாக்கள் கொடுக்கற செய்தி இல்லை என்றால் விஜய் யார்?