2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் புதிய நிகழ்ச்சி 'சூடா ஸ்ட்ராங்கா'. இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சருமான செம்மலை கலந்துகொண்டு பல்வேறு அரசியல் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
ஆரம்பத்தில் நீங்கள் கூட ஓபிஎஸ் பக்கம் ஆதரவு தந்தீர்கள். இப்போது ஏன் இந்த மாற்றம்?
Advertisment

 

145
semalai Photograph: (admk)
ஓபிஎஸ் நடத்திய தர்மயுத்ததின் குறிக்கோள், நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரை ஆரம்பத்தில் ஆதரித்தேன். இந்த இயக்கம் நல்லபடியாக இருக்க வேண்டும் என்று சொல்லிதான் ஓபிஎஸ் அதை ஆரம்பிச்சார். இந்த இயக்கம் ஒரு சிலரின் பிடியில் சிக்கி விடக்கூடாது, ஒரு குடும்பத்தினுடைய பிடியில் சிக்கி விடக்கூடாது, ஒரு குடும்ப ஆதிக்கம் இந்த கட்சியிலே நிலைநாட்டப்படக்கூடாது என்று நினைத்து தர்மயுத்தம் ஆரம்பித்தார். அதற்கு பிறகு யூடர்ன் அடிச்சிட்டாரு. நானும் என் வழி தனி வழி என சென்றுவிட்டேன். அதனால் தான் நான் கூவத்தூரில் இருந்து தப்பித்து ஓடிவந்தேன். ஆனால் அன்னைக்கு ஓபிஎஸ் எடுத்த அந்த நிலைப்பாட்டை இன்றைக்கும் எங்களுடைய பொதுச்செயலாளர் கடைபிடிக்கிறார்.  
எந்த நோக்கத்திற்காக, எந்த லட்சியத்துக்காக தர்ம யுத்தத்தை ஓபிஎஸ் ஆரம்பிச்சாரோ அதை இன்றுவரை எங்களுடைய எடப்பாடியார் நிலைநாட்டி வருகிறார். அதனால் எடப்பாடி பழனிசாமிக்கு  நான் பேக்கிங். அவரை நான் பின்பற்றுறேன். அவருக்கு நான் உறுதுணையாக இருக்கிறேன். அவருடைய கொள்கை, அவருடைய நிலைபாடு எனக்கு பிடித்திருக்கிறது. பாஜக, பிரிந்த அதிமுக ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்துகிறார்கள் என்று நான் சொல்லவில்லை. விரும்புகிறார்கள் வேண்டுமானால் எடுத்துக்கொள்ளலாம். பாஜக ஏன் அதிமுக இணைய விரும்புகிறார்கள் என்றால் இந்த இயக்கம் பிளவுபட்டு கிடக்கிறது. அதனால் வாக்கு சிதறிவிடும். பாஜகவின் நோக்கம் திமுகவை ஆட்சியில் இருந்து இறக்க வேண்டும். அதற்கு அதிமுக சேர்ந்தால் சரியாக இருக்கும் என பாஜக நினைப்பதாக எடுத்துக்கொள்ளலாம்.
Advertisment
தனி மனிதன் பிரிந்தால் கூட ஒரு இயக்கத்துக்கு இழப்பு இருக்கும். அதை நான் மறுக்கமாட்டேன். ஆனால் அப்படி ஏற்பட்ட இழப்பைக்கூட வேறு வகையில் தான் நாங்கள் சரிகட்டி ஆக வேண்டும். ஒருவர் வெளியேறுவதால் இழப்பு ஏற்படுகிறது என்று சொன்னால் அதற்காக அவரையே சேர்த்துதான் அந்த இழப்பை ஈடுகட்ட வேண்டும் என்பது அல்ல. அவசியமும் இல்லை. அவர்களால் ஏற்பட்ட இழப்பை வேறு வகையில் நம்ம சரி கட்டிக்கொள்ளலாம்.
அதிமுக ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என பாஜக நினைக்கலாம். எங்களைப் பொறுத்தவரையிலும் அந்த இழப்பை வேறு வகையில கூட ஈடுகட்டிக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எடப்பாடியிடம் இருக்கிறது. அதிமுக ஒன்று சேர்வது அதிமுக, பாஜக  இரண்டு பேருக்குமே நல்லது. ஏனென்றால் பாஜகவின் நோக்கமும், குறிக்கோளும் எங்களுடைய நோக்கம் குறிக்கோளும்  திமுக வீழ்த்தப்பட வேண்டும். அதில் பாஜக உறுதியாக இருக்காங்க. நாங்களும் உறுதியாக இருக்கிறோம்.