தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இளபுகழேந்தி தன் அரசியல் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/17-2026-03-04-15-53-07.jpg)
மதுரை வந்த மோடி 'எல்லா துறைகளிலும் ஊழல் பெருகிருச்சு. திமுக அமைச்சர்களுக்கு ஊழல் செய்தில் தான் பெரிய போட்டியே' என்பது போன்ற பல குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை எப்படி பார்க்கிறீங்க?
ராமர் கோவில் வசூல், கலெக்ஷன் குறித்தெல்லாம் விவரங்கள் கேட்கும்போது 'நோ' இதற்கான ஆதாரங்களையும் இதனுடைய விவரங்களையும் இப்போது சொல்லமுடியாது என மோடி கோவிலை திறந்தார். கோவிலை திறப்பதில் பலாயிரம் கோடிய சுருட்டிவிட்டு, நாட்டினுடைய பாதுகாப்புக்கு விமானம் வாங்குவதிலும் பலாயிரம் கோடி சுருட்டிவிட்டு, இன்னைக்கு ஒவ்வொரு துறையிலும் ஊழல் செய்துள்ளது பாஜக. குஜராத்தில் 2 கோடி ரூபாய்க்கு புதுபிக்கப்பட்ட பாலம் அறுத்துக்கொண்டு விழுந்தது. மோடி போய் பார்த்தார். பார்த்துவிட்டு வருவதற்கு 3 லட்சம் செலவு என்றுகணக்கு எழுதினார். இப்படி தெருவுக்கு தெரு, ஊருக்கு ஊர் எல்லா நிலைகளிலும் உலகமே பார்க்கக்கூடிய அளவிற்கு அசிங்கமாக திருடும், பணத்தை கொள்ளை அடிக்கும் மோடி தமிழ்நாட்டுக்கு வருவார். தமிழ்நாட்டுக்கு வந்ததும் திமுக மீது குற்றச்சாட்டு வைப்பார். இவர்களுக்கு வேறு வேலையே இல்லை. விளையாட்டுத்தனமாக பொழுது போக்கு மாதிரி வர வேண்டியது. எதையாவது ஒன்றை பேசிட்டு போயிட்டே இருக்க வேண்டியது.
இவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்பதற்கு உதாரணம் என்ன? கெஜ்ரிவால் வழக்கு. மதுபான கொள்கையில் பலயிரம் கோடிகள் கொள்ளை என்று கெஜ்ரிவால் மீது விசாரணை போட்டார்கள். கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போகிறார் என்ற ஒரு நிலை வந்த உடனே அமலாக்கத்ததுறை, சிபிஐ போய் விசாரிச்சிட்டு உடனே வழக்கு போட்டு முதலமைச்சராக இருக்கும் போதே கெஜ்ரிவாலை கைது செய்தார்கள். இறுதியான தீர்ப்பு என்பதைவிட இப்போது இந்த கெஜ்ரிவால் வழக்கில் சொல்லப்பட்டிருக்கிற தீர்ப்புக்கு இவர்கள் என்ன பதில்? மதுபான கொள்கை வழக்கில் கிட்டத்தட்ட மூன்று மாசம் சிலையில் இருந்தார் கேஜ்ரிவால். துணை முதலமைச்சர் கிட்டத்தட்ட ஒரு வருஷம் சிறையில் இருந்தார். ஜாமீனில் கூட வெளியே விடவில்லை. கெஜ்ரிவாலினுடைய ஜாமீன் மனுவில் சுப்ரீம் கோர்ட் சொன்னது என்ன தெரியுமா? 'எப்படி இந்த வழக்கில் நீங்கள் இவரை கைது செய்தீர்கள். எந்த ஆதாரமும் இல்லை, ஆவணங்களும் இல்லை. எதுவும் முறையாக இல்லை. ஆகவே இந்த வழக்கு போட்டதே தவறு' என்று சுப்ரீம் கோர்ட் சொல்லி கெஜ்ரிவாலுக்கு பெயில் கொடுத்துச்சு .
இன்னைக்கு பாஜக செய்து கொண்டிருக்கிற வேலைகள் என்பது சிபிஐயும் அமலாக்கதுறையும் இவங்களுக்கு யார் யாரை பழி வாங்க வேண்டும். யார் யார் மேல் நடவடிக்க எடுக்க வேண்டும் என நினைக்கிறார்களோ அவர்களை நோக்கி போவார்கள். உடனே அந்த அமைச்சர் மேல் ஊழல், இந்த அமைச்சர் மேல ஊழல் என்று பிடித்து கைது செய்வார்கள். திமுக சார்பாக எங்களுடைய அமைச்சர் பெருமக்களும், எங்களுடைய தலைவர் ஸ்டாலினும் 'எதுவாக இருந்தாலும் நீ செய் நீதிமன்றத்திலே நாங்கள் சட்டப்படி சந்திக்கிறோம். எங்க மேல் தப்பு கிடையாது. நாங்கள் தவறு செய்யவில்லை' என எல்லோருமே சொல்லிருக்காங்க.
பாஜகவில் ஊழல் அதிகமாக இருகிறது என்று குற்றச்சாட்டை மிகத் தெளிவாக எடுத்துச் சொல்கிறோம். ஆனால் பாஜக யார் யார் மீது பழிவாங்க வேண்டும் என நினைக்கிறார்களோ, எந்த அரசாங்கத்துக்கு கெட்டபேர் வர வேண்டும் என நினைக்கிறாங்களோ, அந்த அரசாங்கத்தில் நன்றாக பணியாற்றக்கூடிய அமைச்சர்கள் மேல் இப்படிப்பட்ட அமலாக்கத்துறை, சிபிஐயை பயன்படுத்துவார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு சிபிஐ, அமலாக்கத்துறையும் எத்தனை வழக்குகளை நிரூபித்துள்ளது என சொல்லச் சொல்லுங்கள். பாஜக வந்த பிறகு 2% மட்டும்தான் ப்ரூவ் ஆகிருக்கு. 98% இல்லை. ஏன் இல்லை என்றால் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்கு. அப்படித்தான் திமுகவின் மீதும், கே.என்.நேரு மீதும் போடப்பட்டுள்ள வழக்கு என்பதுதான் நான் சொல்ல வருவது. பாஜக அதிகார துஷ்பிரயோகம் செய்கிறது. சிபிஐ, அமலாக்கதுறை என்பது மரியாதைக்குரிய துறையாக இந்தியாவில் இருந்தது. ஆனால் அது இரண்டுமே நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு மிக மோசமான, ஒரு மலிவாக போய் விட்டதுதான் என்பதுதான் வருத்தத்திற்கு உரியது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/19-2026-03-04-15-52-44.jpg)