அரசியல் அனுபவங்கள் மற்றும் அரசியல் பார்வைகளை பிரபலங்கள் பகிர்ந்து வரும் நக்கீரன் டிவியின் 'அரசியல் சடுகுடு' நிகழ்ச்சியில் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான கந்தராஜ் கலந்து கொண்டு அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
பல தருணங்களில் தேர்தல் ஆணையம் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்லிருக்கீங்க. எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் பீகார் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டிலும் எஸ்ஐஆர் பணிகள் நடந்த பிறகு இங்கும் எங்கள் கூட்டணி வெல்லும் என அதிமுகவின் திண்டுக்கல் சீனிவாசன் என்று சொல்கிறார். அது பற்றி என்ன நினைக்கிறீங்க?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/104-2025-11-25-16-05-24.jpg)
அதில் என்ன சந்தேகம் இருக்கு. இந்த எஸ்.ஐ.ஆர் சிஸ்டத்தை யூஸ் பண்ணினால் 80% முதல் 90% தேர்தல் ஆணையம் யாரை முடிவு பண்ணுதோ அவங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்பதை ப்ரூவ் பண்ணிட்டாங்க. ராகுல் காந்தி செய்ய வேண்டிய கடமையை செய்ய சரியாக செய்யவில்லை என்பதுதான் அவர் மேல் நான் வைத்த குற்றச்சாட்டு. ஓட்டை திருடினார்கள் என்பதை நானே சொல்லிவிட்டேன். நான் ஒன்றும் அரசியல்வாதி இல்லை. எங்களை போன்ற பொதுமக்களே பலர் சொல்லி விட்டார்கள். கோவையில் வானதி சீனிவாசன் கமல்ஹாசனை எதிர்த்துப் போட்டியிட்டாங்க 4:30 மணி வரையிலும் கமல் பத்தாயிரம் வாக்குகள் லீடிங்கில் இருந்தார். 5 மணிக்கு வானதி சீனிவாசன் வெற்றி. அது எப்படி? அதற்குள் எப்படி 10000 ஓட்டு கூடுதலாக வந்தது என்ற கேள்வி வந்தது. கமல் போராடாமலேயே வெளியே போய்விட்டார். அவருக்கு தெரிஞ்சு போச்சு எங்கிருந்தோ ஒரு உத்தரவு வந்தது உடனே தேர்தல் ஆணையம் முடிவுகளை மாற்றி கொடுத்துருச்சு. அதைத்தான் நான் சொன்னேன். நாம யாருக்கு வேணாலும் ஓட்டு போடலாம் தேர்தல் ஆணையம் முடிவு யாருக்கு சொல்லுதோ அவங்கதான் வெற்றி பெறுவார்கள். அது இன்னைக்கு ப்ரூவ் ஆகி போச்சு. ராகுல் காந்தி மேல நான் வச்ச குற்றச்சாட்டு என்னவென்றால் ஓட்டை திருடுகிறார்கள் என்பது மக்களுக்கே தெரியும். கட்சி வைத்திருக்கும் ராகுல் காந்தி அதை தடுப்பதற்கு என்ன பண்ணினார் என்பது தான் கேள்வி.
எதையாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் இந்தியாவில் ஜனநாயகம் என்பது கேலிக்கூத்து ஆகிவிடும். ஞானேஷ்குமார் யாரை முடிவெடுக்கிறாரோ அவர்கள்தான் ஜெயிக்க முடியும். ஞானேஷ்குமார் பாஜகவின் காலையும் வாரி விடலாம். ஞானேஷ்குமார் வந்தால் மோடி எழுந்து நிற்கணும், அமித்ஷாவும் எழுந்து தான் நிற்கணும். ஏனென்றால் அவர் கையில் தான் இவங்க எதிர்காலமே இருக்கு. அதை வைத்துக் கொண்டுதான் எஸ்ஐஆரை உடனே கொண்டு வருகிறார்கள். ஒரு மாதத்திற்குள் எப்படி எஸ்.ஐ.ஆர் பணிகளை முடிக்க முடியும். ஆறரை கோடி வாக்காளர்களை ஒரு மாதத்தில் முடிக்க முடியுமா? தமிழ்நாடு அரசாங்கம் ஒரு ரேஷன் கார்டு கொடுக்கிறது. பெண்களுக்கு உதவித்தொகை, பஸ் பாஸ், வீடு தேடி வரும் மருத்துவம், அரிசி, பருப்பு என அத்தனையும் அந்த ஒரே கார்டில் கிடைக்கிறது. இவ்வளவு பெரிய சக்திவாய்ந்த ஒன்றிய அரசு உன்னால் ஒரு ஆதார் கார்டில் இதையெல்லாம் இணைத்து கொடுக்க முடியாதா? அந்த ஆதார் கார்டு இருந்தால் தான் டாய்லெட், ரெஸ்ட் ரூமில் யூரின் பாஸ் பண்ண முடியும் என்ற ரூல். ஆனால் ஓட்டு போடுவதற்கு ஆதார் தேவையில்லை என்பது ஞானேஷ்குமாரின் முடிவு. ஏனென்றால் ஆதார் கார்டில் பிராடு பண்ண முடியாது.
ஆதார் கார்டில் பிறப்பு, வளர்ப்பு என எல்லாமே இருக்கிறது. பின்னர் எதற்கு பெர்த் சர்டிபிகேட் கேக்குறீங்க? அப்போது ஆதார் கார்டு எதற்கு கொடுத்தீர்கள். ஊடுருவல்காரன் டெல்லிலேயே வந்து வெடிகுண்டு வச்சுட்டு போயிட்டான். இதுதான் உன் லட்சணம். டெல்லியில் தெரு முழுக்க போலீஸ், ஆர்மி என உலகத்தில் உள்ள அத்தனை பாதுகாப்பையும் மீறி குண்டு வெடிச்சிருக்கு. பஹல்காமில் 100 கிலோமீட்டர் கடந்து ஜாலியா உள்ளே வந்து மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு ஆனந்தமாக பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஜாலியா திரும்பி போயிட்டான். இன்னைக்குவரை ஒருவரையும் பிடிக்கவில்லை. அதையெல்லாம் விட்டுட்டு வாக்கு சீட்டில் ஊடுருவல்காரர்கள் வராமல் தடுக்க போறாங்களாம். எஸ்ஐஆர் பார்மை திருப்பூரிலும், கோயம்புத்தூரிலும் தான் கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அதேபோல் சென்னை மற்றும் செங்கல்பட்டில் கொடுத்திருக்காங்க. ஏனென்றால் இங்குதான் வட இந்தியர்கள் ரொம்ப இருக்கும் இடம். அவர்களையெல்லாம் உள்ளே கொண்டு வருவது தானே உங்க பிளான். மற்ற ஊர்களில் ஏன் இன்னும் எஸ்ஐஆர் பார்ம் கொடுக்கவில்லை.
தமிழ்நாட்டினுடைய 2026 தேர்தலை தீர்மானிக்கிறது பீகாரிகள் தானா?
/fit-in/580x348/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/11/25/105-2025-11-25-16-09-59.jpg)
பீகாரிகள் இல்லை ஞானேஷ்குமார் தான் தீர்மானிப்பார். ஏற்கனவே தீர்மானிச்சிட்டாங்க அதனால்தான் மோடி போன வாரம் 'நாங்கதான் ஜெயிப்போம்' என்று சொல்லிட்டு போனார். தீர்ப்பு சொல்லியாச்சு. முடிவை மோடி சொல்லிட்டார். ஞானேஷ்குமார் அதற்கு வேலை செய்யணும் அவ்வளவுதான். மூன்று மாதத்திற்கு முன்பு அமித்ஷா வந்து என்டிஏ கூட்டணிதான் வெற்றிபெறும் என்றார். அப்படியென்றால் என்ன அர்த்தம் ஞானேஷ்குமாருக்கு இன்ஸ்ட்ரக்ஷன் கொடுத்தாச்சு என்பது தான். தில்லு முள்ளு செய்தாவது இரண்டு மூன்று சீட்டு கிடைக்குமா எனப் பார்க்கலாம் என ஜெயக்குமார் போன்றோர் எஸ்ஐஆரை ஆதரிச்சிட்டு நிற்கிறாங்க.
காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய விஜய் எஸ்ஐஆர் பற்றியும், கோவை, மதுரை மெட்ரோ பற்றியும் பேசவில்லையே?
அவருக்கு என்னங்க தெரியும் எழுதிக் கொடுத்ததைத்தான் படிச்சிட்டு போவாரு. எழுதி கொடுத்து ட்ரைனிங் கொடுக்கறாங்க. ரிகர்சல் கொடுக்கறாங்க. மானிட்டர் பார்க்கிறார்கள். மானிட்டர் பார்த்து அதை அப்படியே பேசிட்டு போகிறார். அந்த பரந்தூர் விமான நிலையம் என்ன ஆச்சுன்னு தெரியவில்லை. பாட்டாளி மக்கள் கட்சி 10.5% இட ஒதுக்கீடு என்பதை வாழ்நாள் முழுக்க வைத்துக் கொண்டு இருப்பார்கள். அந்த மாதிரி பரந்தூர் விமான நிலையம் வருவதை தடுப்பேன் என்பது விஜய்யோட வாழ்நாள் லட்சியமாக இருக்கும் என நினைக்கிறேன். தானே நடந்து போய் கோட்டையை முற்றுகை இடுவேன் என விஜய் சொன்னார். சொல்லி ஆறு மாதம் ஆகிவிட்டது.
'மெர்ச்சல்' என்ற ஒரு படத்தில் விஜய் நடித்தார். டாக்டரை உதைக்கிறது, அடிக்கிறது எல்லாம் அந்த படத்தில் காட்டினாங்க. அதைப்பார்ததுதான் ஒரு டாக்டரை கிண்டியில் கொன்னாங்க. பிரசவத்தில் ஏமாற்றுவாங்க, குழந்தையை டாக்டர் கொல்லுவாங்க என்றெல்லாம் படத்தில் விஜய் காட்டினார். விஜய்யும், விஜயகாந்த்தும் தான் மருத்துவர்களுக்கு எதிராக படங்களை எடுத்து நடித்தார்கள். படிப்பறிவு இல்லாதவர்கள் தற்குறி அல்ல. அறிவே இல்லாதவன் தான் தற்குறி. படிச்சு பிஎச்டி கூட வாங்கி இருக்கலாம் அந்த படிச்ச அறிவைப் பயன்படுத்தாதவனுக்குதான் தற்குறி என்று பெயர். விஜய் இவ்வளவு பெரிய இடத்திற்கு வந்ததே முதலில் ஆச்சரியம்தான். என்ன பெரிய பேச்சுத் திறமை விஜய்க்கு இருக்கிறது. என்ன பெரிய நடிப்பு திறமை விஜய்க்கு இருக்கிறது. நடிப்பு திறமையே கிடையாது. நீ ஒரு ஜீரோ. நீ சூப்பர் ஸ்டாரா வந்தாதே உனக்கு அதிர்ஷ்டம்தான். அதுவே ஒரு ஆச்சரியம்தான். விஜய்க்கு அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது.
நம்ம ஊரில் சிவாஜி கணேசன் இருக்கும் போது எம்ஜிஆர் படத்துக்கு தான் அதிகம் வசூல் இருந்தது. பி.யூ.சின்னப்பா இருக்கும்போது பாகவதர் படம்தான் சூப்பர் ஹிட்டா ஓடுச்சு. கமல்ஹாசன் இருக்கும்போது ரஜினிக்கு தான் சூப்பர் ஸ்டார் பட்டம் கிடைத்தது. கமல் கிட்ட நடிப்பில் ரஜினி நிற்க முடியுமா? சிவாஜி கிட்ட எம்ஜிஆர் நடிப்பில் நிற்க முடியுமா? குதிரை ஏறியவர்கள் எல்லாம் தேசிங்கு ராஜா ஆகிவிட முடியாது. எல்லாரும் எம்ஜிஆர் ஆகிவிட்டால் பின்னர் எம்ஜிஆருக்கு என்ன மரியாதை இருக்கு. ஒரே ஒரு எம்ஜிஆர் தான் இருக்க முடியும். ஆகாயத்தில் ஒரே நிலா தான் இருக்க முடியும். நட்சத்திரங்கள் இருக்கலாம்.
அமித்ஷா வந்து விஜய்யை சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினாலே முடிஞ்சு போச்சு. சொன்ன பேச்சைக் கேட்டு நின்றுவிடுவார். என்ன முடியும் விஜய்யால். அமிஷாவை விஜய் எதிர்த்துவிடுவாரா? மக்களுக்கு கெடுதல் பண்ணுவதற்காக அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கோம் என்று எந்த கட்சி சொல்லுச்சு. முதலில் உன் கொள்கை என்ன அதை சொல்லு. கொள்கை எதிரி என்று எழுதி கொடுத்ததை படித்து விட்டாய். உன் கொள்கை என்னவென்று கேட்டால் பேசாமல் கேரவனுக்குள் போய் புகுந்து கொள்கிறாய். பனையூருக்கு போய் கதவை சாத்திக்கொண்டு ஏசி போட்டு படுத்துக் கொள்கிறாய். உன்னை ஒரு கேள்வி கேட்க முடியவில்லையே. நீ இன்னைக்கு வரை பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசி இருக்கியா? பத்திரிகைக்காரர்கள் சந்தித்து ஒருநாள் விஜய் பேச வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/11/25/106-2025-11-25-16-17-16.jpg)