Advertisment

'தவெகவிலும் குரூப்பிசம்...' அடித்து சொல்லும் திருச்சி சூர்யா

288

'Groupism in tvk...' says Trichy Surya Photograph: (trichy surya)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 234 தொகுதிகளிலும் விருப்ப மனுக்களை பெற தவெக திட்டமிட்டு இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் அண்மையில் வெளியிட்டிருந்தார். அதன்படி நேற்று 06/02/2026)  முதல் பிப்ரவரி 14ம் தேதி வரை விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்பட இருக்கிறது.

Advertisment

அதிமுகவினரும் விஜய்யை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விஜய்யை விமர்சித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கும் சிலர் என அதிமுகவை சைலன்ட் கில்லிங்  செய்ததால் அதிமுக நேரடியாக விஜய்யை விமர்சிக்கும் நிலைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நக்கீரன் டிவியில் வெளியாகி வரும் 'சூடா ஸ்ட்ராங்கா' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட  திருச்சி சூர்யா பல்வேறு அரசியல் பார்வைகளை பகிர்ந்துகொண்டார். 

286
'Groupism in tvk...' says Trichy Surya Photograph: (trichy surya)

''நல்லா ஞாபகப்படுத்தி பாருங்க, சட்ட சபையில ஜெயலலிதாவை பார்த்து நாக்கை துருத்திக்கொண்டு விஜயகாந்த் பேசும் போது பண்ருட்டியார் உக்காந்துகிட்டு விஜயகாந்த் கையை பிடிச்ச உடனே விஜயகாந்த் உக்கார்ந்துவிட்டார். அந்த சீனியருக்கு என்று கொடுக்க வேண்டிய மரியாதையை விஜயகாந்த் கொடுத்தார். அந்த ஒரு மரியாதை கண்டிப்பாக செங்கோட்டையனுக்கு விஜய் கொடுப்பாரா என்றால் கிடையாது. தவெகவில் இருக்கும் நான்கு பேரும் இப்போது நான்கு கோஷ்டியாக இருக்கிறார்கள். 

ஏற்கனவே ஆதவ் அர்ஜுனாவிற்கும் புஸ்ஸி ஆனந்திற்கும் ஆகாது. புஸ்ஸி ஆனந்திற்கும் ஜான் ஆரோக்கியசாமிக்கும் ஆகாது. வெங்கட்ராமனுக்கும் ஜான் ஆரோக்கியசாமிக்கும் ஆகாது என்று சொல்கிறார்கள். இது இயல்பாக இருக்கும் ஒரு டாக். அதுவும் வெங்கட்ராமனை எல்லாம் கட்சியில் அடிச்சு குளோஸ் பண்ணிட்டாங்க. அருண்ராஜ் ஐஆர்எஸ் யார் வம்புக்கும் போறதில்லை. முன்னாள் அரசு அதிகாரி என்பதால் எல்லாப்பக்கமும் கும்பிடு போட்டு தப்பித்து கொள்கிறார். ஆனாலும் தவெகவில் குரூப்பிசம் பிரச்சனை இருக்கிறது. புஸ்ஸி ஆனந்த் செய்யும் சில விஷயங்களில் கூட சில விஷயங்கள் நியாயம் என்று படும். ஏனென்றால் தெரிந்தோ தெரியாமலோ விஜய் கூட இத்தனை வருஷமாக புஸ்ஸி ஆனந்த் இருந்துவிட்டார். ரசிகர் மன்றம் நடத்தியதில் இருந்து தியேட்டர் பார்த்துக்கொண்டதாக இருக்கட்டும் எல்லாமே புஸ்ஸி ஆனந்த் தான்.

இன்னைக்கு  திடீரென ஆதவ் கிட்ட பணம் இருக்கு என்பதற்காக ஆதவ் சொல்வதையெல்லாம் கேளு என புஸ்ஸியிடம் சொல்கிறார்கள். திடீரென செங்கோட்டையனை கூட்டிட்டு வந்து நீங்க இரண்டு பேரும் (புஸ்ஸி மற்றும் ஆதவ்) செங்கோட்டையன் சொல்வதை கேளுங்க என்கிறார்கள். தேசிய கட்சிகள் ஒரு பேட்டனை ஃபாலோ பண்ணுவார்கள். மாநிலக் கட்சிகள் ஒரு பேட்டனை ஃபாலோ பண்ணுவார்கள். தேசிய கட்சிகள் மண்டலப் பிரிவு தலைவர்கள் தான் போடுவார்கள். திமுக, அதிமுக போன்ற மாநில கட்சிகள் மாவட்டச் செயலாளர்களை போடுவார்கள். ஆனால் தவெகவில் பதவியே எதுவுமே தெளிவாக இல்லை. 'நீங்க என்ன பதவியில் சார் இருக்கீங்க என்று கேட்டால் இருங்க சார் ஒரு நிமிஷம் கேட்டு சொல்றேன் என்று யோசிக்கிறார்கள் தவெகவினர்.

dmk admk K. A. Sengottaiyan trichy surya tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe