Advertisment

'என்ன நடக்கப் போகிறது?'-இந்த நேரத்தில் வைரலாகும் பாபா வாங்காவின் கணிப்புகள்!

12

'Great war; AI that will exceed human control' - Vanga's prediction that is going viral at this time Photograph: (vanga)

அமெரிக்கா - ஈரான் இடையே நடைபெற்ற அணுசக்தி ஒப்பந்தம் தோல்வியடைந்ததை அடுத்து இஸ்ரேல்- அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரான் மீது வான்வழித் தாக்குதலை நடத்தி வரும் நிலையில், ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பாபா வாங்காவின் பழைய கணிப்புகள் மீண்டும் வெளிவந்து வைரலாகி வருகிறது. பல்கேரியாவைச் சேர்ந்த ஒரு பார்வையற்ற ஆன்மீகவாதி பாபா வாங்கா. 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எதிர்கால நிகழ்வுகளை முன்னரே அவர் விவரிப்பதாக ஆதரவாளர்கள் இன்றும் நம்புகின்றனர். இதுபோன்று முன்னரே நடக்கும் நிகழ்வுகளை குறிப்பாக அழிவுகளை கணிப்பதாக கிழக்கு ஐரோப்பாவில் பாபா வாங்கா பரவலாக அறியப்பட்டவர். பல ஆண்டுகளாக, அரசியல் மாற்றம், இயற்கை பேரழிவுகள் மற்றும் உலகளாவிய மோதல்கள் பற்றிய அவரது கணிப்புகள் உள்ளன. அமெரிக்காவின் இரட்டை கோபுரத் தாக்குதல், 2004 சுனாமி பேரழிவு, பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியது, பராக் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆவது இதெல்லாம் வாங்காவின் முன்னத்திய கணிப்புகள் என்று நம்பப்படுகிறது.

Advertisment

'2025-ல் ஐரோப்பாவில் ஒரு பெரும் போர் ஏற்படும் என்றும், அது மக்கள் தொகையை வெகுவாகக் குறைக்கும். தற்போதைய புவிசார் அரசியல் பதற்றங்களின் அடிப்படையில், 2026-ல் மூன்றாம் உலகப் போர் தொடங்க வாய்ப்புள்ளது. மனிதகுலம் முதன்முதலில் வேற்றுகிரகவாசிகளுடன் தொடர்பு கொள்ளும் நிகழ்வு 2025 அல்லது 2026-ல் நடக்கலாம். 2026-ல் AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்து, மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் அபாயம் ஏற்படும்' என்பவையெல்லாம் வாங்காவின் 2025-26 ஆண்டிற்கான கணிப்புகள் என்று கூறப்படுகிறது.

தற்போது ஈரான் இஸ்ரேல் போரில் மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் பதற்றங்கள் உருவாகி மோசமடைந்ததால் ஒரு பெரிய உலகப் போர் தொடங்கக் கூடாது என்று பாபா வாங்கா எச்சரித்ததாகக் கூறப்படுகிறது. அவரது கணிப்பின் படி சக்திவாய்ந்த நாடுகளுக்கு இடையே பதட்டங்கள் இருக்கும். சில இடங்களில் மோதல் நீண்ட காலம் நீடிக்கும். போர்கள் நடக்கும். இதனையொட்டி நிறைய அழிவுகள் ஏற்படும் என்று கூறுகின்றன. 

உலகம் முழுவதும் நடந்து வரும் போர்கள் காரணமாக பாபா வாங்காவின் தீர்க்கதரிசனம் மீண்டும் பிரபலமடைந்துள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போருக்கு இன்னும் தெளிவான முடிவு தெரியவில்லை. பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் சமீபத்திய நிகழ்வுகள் இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான நிலைமையை மோசமாக்கியுள்ளன. எல்லைப் பிரச்சனைகள் மற்றும் பாதுகாப்பு கவலைகள் காரணமாக பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பிரச்சனைகளை ஒரே நேரத்தில் அதிக கவனத்தை ஈர்க்கச் செய்துள்ளது. ஒரே நேரத்தில் நிறைய சண்டைகள் நடக்கும் போது. மக்கள் அதிகமாக கவலைப்படுகிறார்கள். இது வாங்காவின் பழைய கணிப்புகள் மற்றும் தீர்க்கதரிசனங்கள் மீண்டும் வருவதை சாத்தியமாக்குகிறது என அவரது ஆதரவாளர்கள் நம்புகின்றனர்.

war world baba vanga
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe