தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக தலைமை முதற்கட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும். ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் கவனத்தை பெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள புகழேந்தி அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் அறிக்கை குறித்து தன் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் முதல் கட்டமாக ஐந்து வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அனைத்து குடும்ப அட்டைதாரர் மகளிர்களுக்கும் 2000 ரூபாய் தரப்படும் சொல்லி இருக்கிறார். இதை எப்படி பார்க்கறீங்க?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/20/210-2026-01-20-15-36-48.jpg)
எடப்பாடி நினைப்பது போல் கவர்மெண்ட் வட்டிக்கடை கிடையாது. லாபத்தை பார்த்து நடப்பதற்கு பெயர் அரசு கிடையாது. அரசு என்பது மக்கள். முதலில் இந்த அடிப்படையை புரிஞ்சுக்கணும். மக்கள் அரசு என்கிற பொழுது மக்களுக்கான திட்டங்களை செய்வதற்கான செலவுகள் தான் அந்த வரி. இதை கலெக்ஷன் பண்ணி அதன் மூலம் மக்கள் திட்டங்களை செய்வதுதான் அரசாங்கம். இந்த அரசாங்கத்தினுடைய வரி பணத்தையும் எடுத்துக்கொண்டு இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடியை உருவாக்கிட்டு, நல்லது செய்யக் கூடாது என்ற அளவுக்கு மேல இருந்து உட்கார்ந்துகொண்டு ஒரு கூட்டம் ஆட்டிப் படைக்கிறது.
இந்த அரசாங்கம் எந்த நிலையிலும் ஊதாரித்தனமாக, மக்களுடைய பணம் எந்த விதத்திலும் வீணடித்து விரயமானதாக ஒரு வார்த்தை கூட எதிலும் சொல்ல முடியாது. ஆனால் மிஸ்டர் எடப்பாடி நிர்வாக திறமையை பேசலாமா? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியில் வந்து உட்கார்ந்ததே காற்றில் ஒரு பேப்பர் அடிச்சு மேல போய் ஒட்டிக்கிட்ட மாதிரி உட்கார்ந்துவிட்டு, நீட் பேப்பர்ல கையெழுத்து போட்டு சேர்ல சாஞ்சுகிட்டு உல்லாசமா பதவி சுகத்தை அனுபவித்த நபர் எடப்பாடி பழனிசாமி.
மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் நடக்கிறது. எடப்பாடி அப்போது முதலமைச்சர். ரிப்போர்ட்டர்ஸ் கேட்டதற்கு மறுநாள் நான் டிவியில் பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன் என்கிறார். இப்படி ஒரு கேவலமான, இழிவான ஒரு முதலமைச்சர். நிர்வாகம் என்பதே தெரியாத ஒரு ஆளை பார்த்திருப்பீங்களா? ஆக எடப்பாடிக்கு எதுவுமே கிடையாது. திடீர்னு வந்து உட்கார்ந்தோம். உட்கார்ந்த உடனே நாம் பாட்டுக்கு எதையாவது சொன்னோம். தனியார் கம்பெனிகளிடம் காசு, பணத்தை வாங்கினோம் என மக்களை ஏமாற்றிய அந்த எடப்பாடி பழனிசாமி, இன்னைக்கு நிர்வாக திறமையை பற்றி பேசுகிறார். எந்த விதத்திலும் நிர்வாகமோ, நியாயமோ, உண்மையோ இல்லாத கொடூரமான ஒரு செயலை செய்தது எடப்பாடி பழனிசாமி. என்பதை இதுபோல பல சான்றுகளுடன் நம்மால் நிரூபிக்க முடியும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/20/211-2026-01-20-15-36-31.jpg)