திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் மதவெறி அரசியலைத் தூண்டி கலவரத்தை உருவாக்க முயல்வதாக பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மதுரையில்  கடந்த 22-12-25 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான விசிகவினர் கலந்து கொண்டனர்.

Advertisment

மேடையில் பேசிய திருமாவளவன், ''தம்பி விஜய்யும், தம்பி சீமானும் இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது, பா.ஜ.கவின் பிள்ளைகள் என்பது அம்பலமாகிவிட்டது. பிராமண கடப்பாரையை கொண்டு திராவிட கோட்டையை இடிப்பேன் என்று சீமான் சொல்கிறார். அந்த தம்பிக்கு நான் சொல்கிறேன். நீங்கள் வெளிப்படையாக வந்துவிட்டீர்கள், பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. நீங்கள் தமிழ் தேசியம் தான் பேசுகிறீர்கள் என்று இவ்வளவு காலம் நாங்கள் நம்பி கொண்டிருந்தோம். இப்போது தான் தெரிகிறது, நீங்கள் இந்து தேசியம் பேசுகிறீர்கள் என்று. நீங்கள் இந்து தேசியம் கூட பேசவில்லை, பிராமண தேசியம் பேசுகிறீர்கள். எவ்வளவு பெரிய ஏமாற்று நடவடிக்கை. பெரியாரை இழிவுப்படுத்துவதும், பெரியாரின் அரசியலை தகர்ப்பதுமா தமிழ் தேசியம்? இரண்டு பேர் தங்களை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்'' எனப் பேசியிருந்தார்.

Advertisment

இந்நிலையில் நக்கீரனின் சிறப்பு நேர்காணலில் கலந்து கொண்ட விசிகவின் சங்கத்தமிழன் இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில்,'' இன்னமும் விஜய்  சினிமாக்காரராகத்தான் உள்ளார். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. விஜய்யை பற்றி பேச வேண்டிய சூழ்நிலைக்கு வந்து தள்ளப்படுகிறோம். திருமாவளவனும் தள்ளிவிட்டார். எனவே நாம் பேசிதான் ஆக வேண்டும். விஜய் ஈரோட்டு கடப்பாரை என்கிறார். இதுதான் இந்த நூற்றாண்டின் நகைச்சுவையாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். உங்களுக்கு முக்கியமான ஒரு செய்தி சொல்றேன். நேற்று நான் மதுரையில் எங்கள் கட்சி நடத்திய நிகழ்வில் கலந்துகொள்ள முடியவில்லை. நான் கோவா போயிருந்தேன்.

முக்கியமான விஷயம். சாதாரண விஷயம் இல்லை. விஜய் சங்கிகளிடம் எவ்வளவு லிங்க்கில் இருக்கிறார்கள் என்பதை பற்றி திருமாவளவன் சொன்னார். விஜய்க்கும் சரி சீமானுக்கும் சரி இரண்டு பேருக்கும் ஒரே முதலாளிதான். அதாவது முழுமையான சங்கி சீமான் இல்லை முழுமையான சங்கி நடிகர் விஜய்தான். நான் சும்மா சொல்லவில்லை ஆதாரம் இருக்கு. உங்களுக்கு தருகிறேன். ஈரோட்டு நிகழ்வுக்கு செல்வதற்கு முன்னால் விஜய் நேராக கோவா போயிருக்கிறார். தனியாக போகவில்லை ஒரு முக்கியமான பிரபலமான ஒரு நடிகையோட விஜய் போயிருக்கிறார். அந்த நடிகை பெயரை நான் சொல்லக்கூடாது. வழக்கு போட்டால் நான் பேசுவேன். அங்கு சென்று ஒரு பெரிய யாகம் நடத்தி இருக்காங்க. விஜய்யுடைய போட்டோவை எடுத்து போட்டுப் பாருங்க. அப்படியே ஒரு சங்கிக்கான அத்தனை முத்திரையும் விஜய் முகத்தில் இருக்கும் விஜய் கழுத்தில் இருக்கும்.

Advertisment

பெரிய யாகம் நடத்தி விட்டுதான் ஈரோட்டுக்கு வந்து மேடையில் விஜய் ஏறி இருக்கிறார். அதில் ஒரு முக்கியமான ஜோதிடர் விஜய்யிடம் சொல்லியிருக்கிறார் 'நீ இந்த யாகம் நடத்து. அதுவும்  குறிப்பாக ஒரு பிராமண பெண்மகளை, ஒரு நடிகையை வைத்து இந்த யாகம் நடத்து' எனக் சொல்லிருக்காரு. அதற்காகதான் கோவா போயிட்டு வந்தேன். கோவாவில் போய் எடுத்த போட்டோக்களை காட்டட்டுமா? வழக்கு போட்டா உடனே நாங்கள் அந்த போட்டோக்களை  கொடுப்போம். தமிழ்நாட்டில் நடிப்பு மூலமாக, திரைப்படத்தின் மூலமாக வந்த உன்னை பாராட்டுவோம். உன் நடிப்பை பாராட்டுவோம். அந்த நடிப்பை வச்சுக்கிட்டு நேர முதல்வர் போஸ்ட்டுக்கு தான் போவேன் வேற எங்கேயும் போக மாட்டேன் என்கிறார்.

கொள்கை ரீதியாக பாஜகவை எதிர்க்கிறேன் என விஜய் சொல்கிறார். திருப்பரங்குன்றத்தை நாங்கள் அயோத்தியை போல் ஆக்குவோம் என சனாதன கும்பல் சொல்லும்போது நீ வாயை மூடிட்டு இருக்கிற என்றால் நீ யாரு?