தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
Advertisment
021
haleem Photograph: (politics)
அதிமுக ஏற்கனவே என்டிஏ கூட்டணியில் பாஜகவோடு உள்ளது. பிறகு ஏன் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து உடைஞ்சு வர வேண்டும் என விரும்புகிறீர்கள். அப்போது காங்கிரஸ் உடைந்தால் எங்கே போய் சேர வேண்டும் நினைக்கிறீர்கள். காங்கிரஸ் போய் விஜய் கட்சியில் சேர வேண்டும் என நினைக்கிறது அதிமுக. அப்படி சேர்ந்தால் திமுகவுக்கு விழுகின்ற வாக்குகள் இன்னும் பிளவுப்படும் என அதிமுக நினைக்கிறது, ஆசைப்படுகிறது. உங்க ஆசையில்தான் திருப்பி திருப்பி மண்ணு விழுந்துகொண்டே இருக்கிறது.  

திமுக கூட்டணி உடைய வேண்டும் என்று காங்கிரஸுக்குள் சிலர் பேசுவதை நாம் பார்த்தோம். விருதுநகர் எம்பியில் இருந்து, ராகுல் காந்தி நண்பர் ஒருவர் வரைக்கும் பேசுகிறார்கள். ஆனால் இன்னைக்கு செல்வப்பெருந்தகை சொன்ன விஷயம் முக்கியமானது. இதில் பாஜக சதி செய்கிறது. திமுகவுக்கு விழுகின்ற வாக்குகள் குறைய வேண்டும். சிறுபான்மை வாக்குகள் முழுமையாக விஜய் பக்கம் போக வேண்டும். இந்த சதியை பாஜக செய்கிறது. அப்படியென்றால் அந்த சதிக்கு உடன்பட்டுதான் எடப்பாடி பேசுகிறாரோ என்று நான் நினைக்கிறேன். காங்கிரஸுக்குள்ளே சிலர் பாஜகவுடைய கைக்கூலிகளாக இருப்பார்களோ என்ற எண்ணம் நமக்கு வருகிறது.
இந்த எண்ணத்தை விதைத்தது யார்? காங்கிரஸுக்குள்ளேயும் சிலர் திமுக கூட்டணியில் இருந்து விலக வேண்டும் என்று நினைக்கிறார்கள். எடப்பாடி உட்பட அதிமுக தலைவர்களும் பேசுகிறார்கள். ஆனால் அந்த சதி நடக்காது. கூட்டணி பலமாக இருக்கிறது. எங்கள் கூட்டணியும் உடையாது. எங்களுடைய எண்ணிக்கையும் குறையாது என்று செல்வப்பெருந்தகை சொல்கிறார்.
Advertisment
திராவிட கட்சிகள் வந்த பிறகுதான் ஊழல் அதிகமா இருக்கு என்றால் பாரிவேந்தர் எந்த கட்சியினால் எம்பி ஆகினார். இந்தியாவில் திராவிட கட்சிகளே ஆளாத பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஊழல் பெருகி இருக்கிறதே? எந்த திராவிட கட்சி போய் அங்கு கூட்டணி வச்சாங்களா? இதே பாரிவேந்தர் திமுகவுடன் கூட்டணி வச்சு எம்பி பதவிக்கு எப்படி நின்னார்? ஏன் அந்த பதவியை ராஜினாமா பண்ணவில்லை? இந்த கேள்வி இருக்கிறது. அவருக்கு ஒரு ஞான உதயம் லேட்டா வந்திருக்கு. ஊழல் கட்சியுடன் சேர்ந்து நான் எம்பி பதவிக்கு வந்திருக்க கூடாது என ராஜினாமா பண்ண வேண்டியதுதானே.
இன்னைக்கு பாஜகவுக்கு சொம்பு தூக்கும் இதே பாரிவேந்தர் எதற்கு அதிமுக கூட்டணியில் இருக்கிறார். இப்போ அதிமுக திராவிட கட்சி இல்லை என ஒத்துக்கொள்கிறாரா?  ஒன்னு திராவிட கட்சியான திமுகவுடன் சேர்ந்து எம்பி ஆனது தவறு என பாரிவேந்தர் ஒப்புக்கொள்ள வேண்டும். இரண்டாவது என்டிஏ கூட்டணியில் இருக்கும் பாரிவேந்தர் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தான் இருக்கிறார். அப்போது அதிமுக திராவிட கட்சி இல்லை என்று சொல்கிறாரா? இந்த இரண்டு முடிவில் எந்த முடிவுக்கு பாரிவேந்தர் வருகிறார். ஆக திராவிட கட்சிகளுக்கு வந்தபிறகுதான் ஊழல் என்றால் வட இந்தியாவில் இருக்கின்ற பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் ஊழலே இல்லை என்று ஏற்றுக்கொள்வாரா பாரிவேந்தர்.