Advertisment

'ஆண்களுக்கும் இலவசம்; தனியாருக்கு தாரை வார்க்கும் சூழ்ச்சி'-உடைத்த இள புகழேந்தி

216

'Free for men too; a ploy to embarrass the private sector' - Photograph: (dmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரை வியூகங்களை தாண்டி தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. சமீபத்தில் அதிமுக தலைமை முதற்கட்ட தேர்தல் அறிக்கை வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

Advertisment

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். குலவிளக்கு திட்டத்தின் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒவ்வொரு மாதமும் உதவித் தொகையாக ரூபாய் 2000 வழங்கப்படும். ஆண்களுக்கும் மகளிருக்கும் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம். நகர பேருந்துகளில் பயணம் செய்யும் ஆண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயண திட்டம் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகள் கவனத்தை பெற்றுள்ளது.

Advertisment

இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இள புகழேந்தி அதிமுகவின் முதல்கட்ட தேர்தல் அறிக்கை குறித்து தன் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் முதல் கட்டமாக ஐந்து வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறார். அதில் ஆண்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் என்ற அறிவிப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

210
'Free for men too; a ploy to embarrass the private sector' -Ilapugalenzhi breaks down Photograph: (dmk)

ஆண்களுக்கு இலவச பயணம். இதன் பின்னணியில் இருக்கும்  ரகசியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எடப்பாடியை ஒன்னும் தெரியாதவர் என்று நான் சொல்லவில்லை. விவரம் இல்லாதவர் என்றும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிசாமி ஆபத்தானவர் என்பவர் என்பதை தமிழ்நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலமாக வெளியில் வெளிப்படையாக வந்துடுச்சு பாருங்க. ஆண்களுக்கும் நாங்கள்  இலவச பயணம் கொடுப்போம் என்றால் எப்படி பேருந்துகள் ஓடும். தமிழ்நாடு போக்குவரத்து துறை என்ன ஆகும்.

மகளிருக்கு இலவச பயணம் கொடுத்ததை ஆண்கள் இதுவரைக்கும் ஏத்துக்கிட்டு இருக்காங்க. எந்த இடத்திலும் ஏன் எங்களுக்கு கொடுக்கவில்லை என்ற குரல் வரவில்லை. அந்த இதை தூண்டி விடுற மாதிரி இன்னைக்கு இந்த அறிவிப்பு இருக்கும்போது ஒரு ரகசியம் உள்ளே இருக்கு. இதனால் டீசல் போட முடியாது, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாது. ஆக எதுவுமே இல்லையென்றால் என்ன செய்வார்கள்? தமிழ்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கையாக நாம் சொல்வது. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் 'தருகிறேன் தருகிறேன்' என்று சொல்லி ஓட்டுகளை வாங்கிக்கொண்டு 100 பஸ் போகும் இடத்தில் 50 பஸ்களை மட்டும் இயக்குவார்கள். 50 பாஸ் போகுற இடங்களில் 20 பஸ்களை இயக்குவார்கள்.

மத்தியில் இருப்பது ஆரோக்கியமான ஹெல்த்தி பார்ட்டி கிடையாது. அதனுடைய நோக்கம் என்பது ஆரியம், சனாதனம். அதனால் நம்ம ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழை அழித்துட்டு சமஸ்கிருதம் வர வேண்டும் என்று சொல்பவர்களை நம்ம ஒப்புக்கொள்ளவே முடியாது. அதனாலதான் முதல்வர் சொன்னார் 'பத்தாயிரம் கோடி நீ கொடுக்கறதா இருந்தா கூட உன்னுடைய மும்மொழி திட்டத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்' என ஓங்கி அடிச்சார். 

மக்கள் பயன்பெறுவதற்காக அரசுக்காக போக்குவரத்து துறையை கலைஞர் ஆரம்பிச்சார். அவர் ஆரம்பிச்சதுக்கு பிறகுதான் சின்ன சின்ன கிராமங்களின் வழியாக பஸ் போனது. தனியார் கிட்ட சொல்லும்போது 'அங்கெல்லாம் போனா ரெண்டு பேர் மூணு பேர் வரான் டீசல் போட முடியாது' அப்படின்னு அழுத நேரத்தில் 'நான் பஸ்ஸ விடுறேன்னு' சொல்லிட்டு அரசு பஸ் மக்கள் நன்மைக்காக விட்டது கலைஞர். இன்னைக்கு இந்த திட்டத்தை போட்டு பக்குவமா எல்லா இடத்துக்கும் தனியாருக்கு, குறிப்பா பிஜேபி சம்பந்தப்பட்ட ஆட்கள் எல்லாருக்கும் போக்குவரத்து டிரான்ஸ்போர்ட் பர்மிட் கொடுப்பாங்க.

பர்மிட் கொடுத்துட்டா தமிழ்நாடு முழுதும் அவன் பஸ் ஓடும். அதுல எல்லாருக்கும் டிக்கெட் உண்டு. எல்லாம் உண்டு. ஆக இதன் பின்னால ஒரு பெரிய சூழ்ச்சி, போக்குவரத்து துறையை தனியார் மயமாக்க தெளிவாக கார்ப்பரேட் கம்பெனிகளின் ஆலோசனை படி எடப்பாடி இதை சொல்லி இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.

dmk admk edappaadi palanisamy Election manifesto
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe