தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இந்நிலையில் திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் கடலூர் இளபுகழேந்தி தன் அரசியல் பார்வையை நக்கீரன் யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/03/04/17-2026-03-04-19-07-05.jpg)
எப்போது தான் திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியாகும்? திமுக காங்கிரஸை கழட்டிவிட நினைப்பதாக தகவல்கள் வருகிறதே?
கூட்டணியில் இருப்பது அல்லது போவது காங்கிரஸ் விருப்பம். ஆனால் விருப்பம் எல்லாம் முடிவல்ல. முடிவு என்பது கூட்டணி உறுதியாக இருக்கிறது. இந்த கூட்டணியை பற்றி கூட்டணியிலே இருக்கக்கூடிய திருமாவளவன் அவர்கள் அழகாக இன்னைக்கு நேற்றுகூட பேட்டி கொடுத்தார்கள். திராவிட முன்னேற்ற கழக தலைமையில் இருக்கிற கூட்டணி உறுதியாக இருக்கிறது, சரியாக இருக்கிறது. அதில் எந்தவிதமான குழப்பமும் கிடையாது. திமுக கூட்டணியில் உள்ள அனைவரும் இப்படி பேசி வருகிறார்கள். தமிழக வெற்றிக் கழகம் இதுவரைக்கும் எந்த வெற்றியும் பார்க்கவில்லை. ஏனென்று கேட்டால் அந்த கட்சிக்கு தேர்தல் என்றால் என்னவென்றும் தெரியாது. விசிலை எடுத்துக்கொண்டு இப்போதுதான் விசில் அடிக்க வந்திருக்காங்க. இன்னைக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையில் இருக்கும் கூட்டணி என்பது வலிவோடும் பொலிவோடும் மிக சரியாக இருக்கிறது. எல்லாருமே அப்படித்தான் பார்க்கிறாங்க. இப்படி பார்த்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் திமுக கூட்டணி வலுவாகி கொண்டே இருக்கிறதே அதை எப்படியாவது உடைக்க வேண்டும் என அரசியல் ரீதியாக முயற்சி பண்ணலாம் என்று ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய ஆசையை வெளிப்படுத்தும் விதமாக ''காங்கிரஸ் வெளியே வந்துருச்சு. இவங்க இப்படி பேசிட்டாங்க அவங்க அப்படி பேசிட்டாங்க''என எதையாவது சொல்லிக் கொண்டு மகிழ்ச்சி அடையலாமே தவிர, தங்களுக்கு தாங்களே மாலை போட்டுக்கொண்டு கை தட்டுகிற மாதிரி உள்ளது. தவெக என்ன நினைச்சுட்டாங்க நடிகர் வந்துட்டாரு. இனிமே அவ்வளவுதான். எல்லாரும் நம்மகிட்ட வந்துருவாங்க என நினைச்சாங்க. யாரும் உண்மையான அரசியல் நிலைமையும், மக்களுடைய நிலையை புரிந்து கொள்ளவில்லை. இது ஏற்றுக்கொள்ள கூடியது இல்லை. நீங்கள்தான் ஏமாந்து போகப் போறீங்களே தவிர எங்க கூட்டணி என்பது மிகச் சரியாக தலைவர் தலைமையில் இருக்கிறது. இன்னும் கூட பெருமையாக சொல்ல வேண்டும் என்றால் வடமாநிலங்களில் இருக்கக்கூடிய தலைவர்களில் சிலர் இந்தியாவிற்கே இந்த இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க கூடியவராக தமிழக முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தான் இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அளவுக்கு நிலை இருக்கிறது.
கூட்டணி கலைகிறது என்று குரல்கள் வருகிறது. தகவல்கள் வருகிறது என்று செய்திகள் பரப்பப்படுகிறது. நான் ஏற்கனவே சொன்ன மாதிரி பல்வேறு நிலைகளில் பல வடிவங்களில் இந்த கூட்டணியை பற்றி எடுத்து சொல்வதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள். காங்கிரசை கழட்டி விடலாம் என்று யார் சொன்னார்கள். இவையெல்லாம் பேச்சுவார்த்தையில் சிக்கலை உண்டாக்க, குழப்பத்தை உண்டாக்க வெளியிலிருந்து செய்யக்கூடிய முயற்சிகள். அந்த முயற்சிகள் எல்லாம் எல்லாமே தோல்வியாக போய்க்கொண்டிருப்பது ஒவ்வொரு நாளும் தெளிவாகி கொண்டிருக்கிறது. கூட்டணி பேசும்போது நடக்கக்கூடிய வழக்கமான விஷயங்கள் தான்.
திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஒரு அணியில் இருக்கக்கூடிய செயலாளர் என்ற முறையில், திமுகவினுடைய ஒரு அடிமட்ட தொண்டன் என்ற முறையிலும் தலைவர் ஸ்டாலினின் ஆணை மற்றும் கருத்தை மட்டுமே கேட்கக் கூடியவர் என்ற நிலையில் ஒன்று சொல்றேன். திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி பேச்சுவார்த்தை குழு எடுக்கின்ற முடிவுகள் எதுவாக இருந்தாலும் சரி, இறுதியாக எங்களுடைய தலைவர் ஸ்டாலின் அறிவிக்கிறாரோ அதுதான் அறிவிப்பு. அவர் அறிவிக்கும் வரை வெளியாகும் மற்றவைகள் எல்லாம் வதந்திகள். மற்றவருடைய ஆசைகள், விருப்பங்கள். இந்த ஆசைகள், விருப்பங்களை வைத்துக்கொண்டு நாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் ஒன்று எங்களுடைய தலைவர் ஸ்டாலின் அனைவரையும் அரவணைக்க கூடியவர். அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் மதிக்க கூடியவர். திறமையோடு ஒவ்வொரு முடிவையும் தெளிவாக எடுத்து அறிவிப்பார் என்ற நம்பிக்கையில் தான் எல்லாருமே உள்ளோம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/04/26-2026-03-04-19-08-32.jpg)