Advertisment

'இந்தியாவிற்கு தான் இவை அனைத்தும்'-பாக் பிரதமருக்கு ஷாக் கொடுத்த டிரம்ப்

293

'Everything is for India' - Trump shocks Pak PM Photograph: (world)

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என சற்றும் கணிக்க முடியாத சூழலே தற்போது இந்த நொடி வரை உள்ளது. அப்படி ஒரு திடீர் அறிவிப்பை கொடுத்து பாகிஸ்தான் பிரதமருக்கு அதிரி புதிரியை ஏற்படுத்தியுள்ளார் டிரம்ப்.
Advertisment
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல்  இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்காவில்  25% வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார். ஆனால் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு இந்தியப் பொருட்கள் மீது மேலும் 25% வரி மேலும் உயர்ந்து மொத்தமாக வரி 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. இதனால் இந்தியாவில் இருந்து ஆடை, அணிகலன்கள், இறால் போன்றவை ஏற்றுமதி கடும் பாதிப்பை கண்டது.
Advertisment
இந்தியா மீதான வரி விதிப்பிற்கு காரணம் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது தான் என குறிப்பிட்டிருந்த டிரம்ப், இந்தியா ஒரு நல்ல வர்த்தக நண்பனாக இல்லை என்ற கருத்தையும் வெளிப்படையாக தெரிவித்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. 'அது போன மாசம்' என்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் டயலாக் போல இன்றைய நிலை தலைகீழாக உள்ளது. காரணம் அமெரிக்காவின் அதிரடி வரிக்குறைப்பும், இந்தியா மீதான சமீபத்திய கரிசனங்களும்தான்.
295
america Photograph: (world)

இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்து, வெனிசுலாவிடம் எண்ணெய் வாங்க பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளதாகவும், அமெரிக்க பொருட்களை $500 பில்லியன் டாலருக்கும் கூடுதலாக வாங்க அவர் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், இதனால் இந்திய பொருட்களின் மீதான இறக்குமதி வரியை 18% ஆக குறைக்க அமெரிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த வரிக்குறைப்பு முடிவுக்கு பிரதமர் மோடி வரவேற்று நன்றியும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்தியா - அமெரிக்கா இடையிலான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக இரு நாடுகளும் கூட்டாக அறிவித்துள்ளன. இந்த ஒப்பந்த நடவடிக்கையின் மூலமாக இந்தியா மீதான அமெரிக்காவின் வரி 18%மாக குறைந்துள்ளது. இதன் மூலமாக  ஜவுளி, தோல், ரசாயன பொருட்களின் மீதான வரி குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
294
america Photograph: (world)
இந்த ஒப்பந்தம் தொடர்பாக இரண்டு நாடுகளும் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வரைபடத்துடன் கூடிய அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு தான் சொந்தம். இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி தான் ஜம்மு காஷ்மீர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமானது என்னவென்றால் இதற்கு முன் பல்வேறு சமயங்களில் இந்தியாவுடன் அமெரிக்கா மேற்கொண்ட ஒப்பந்தங்களில் உள்ள இந்திய வரைபடங்கள் பாகிஸ்தானுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே இருந்தது. இந்தியா அதற்கு எதிர்வினை ஆற்றினாலும் அமெரிக்கா அதை கவனத்தில் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. ஆனால் திடீரென இந்திய வரைபடத்தில் அமெரிக்கா காட்டியிருக்கும் நிலைப்பாடு பாகிஸ்தானுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. குறிப்பாக பாக். பிரதமர் செஃபா ஷெரீப்பிற்கும் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீருக்கும் தூக்கத்தை கெடுத்துள்ளது.
 
 
 
map tariff Pakistan India America
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe