தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/02/236-2026-02-02-14-37-08.jpg)
அவ்வளவு விமர்சித்து பேசிய டி.டி.வி.தினகரனையே எடப்பாடி கூட்டணியில் சேர்த்துக் கொண்டார். ஆனால் ஓபிஎஸ்-ஐ கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் எடப்பாடிக்கு என்ன தயக்கம்?
ஓபிஎஸ் இன்று தனித்து விடப்பட்டிருக்கிறார். இன்னைக்கு ஓபிஎஸ் கூட யாருமே இல்லை. ஓபிஎஸ் கூட இருப்பது முன்னாள் எம்பியான அவருடைய மகன் மட்டும் தான். ஓபிஎஸ்க்கு என்ன சோர்ஸ் இருக்கிறது? என்ன வழி இருக்கிறது? ஒன்றுமே இல்லை. விஜய் உடன் சேர முடியாது. விஜய் உடன் சேரக்கூடிய இடத்திற்கெல்லாம் ஓபிஎஸ் நகர மாட்டார் என்று நினைக்கிறேன். ஓபிஎஸ்க்கு இருக்கிற வாய்ப்பு என்பது ஒன்று என்டிஏ கூட்டணிக்கு வரவேண்டும். இல்லையென்றால் திமுக கூட்டணிக்கு வர வேண்டும். என்டிஏ கூட்டணிக்கு வர வேண்டும் என்று தினகரன் வெளிப்படையாக சொல்லிவிட்டார்.
இப்போது ஒரு கேள்வி வரும் ஓபிஎஸை சேர்த்துக்கொள்ள எடப்பாடிக்கு சங்கடம் இருக்கா? தினகரனை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதில் சங்கடம் இல்லை. காரணம் தினகரனை அதிமுக சேர்க்கவில்லை. பாஜகதான் சேர்த்தது. ஆனால் ஓபிஎஸ் விஷயம் அப்படி இல்லை. எடப்பாடிக்கு ஒரு சங்கடம் இருக்கு. ஓபிஎஸ்-ஐ கொண்டு வந்து பக்கத்தில் உட்கார வச்சுட்டு பேசினால் அதிமுக தொண்டர்களுக்கு எப்படி தோணும்? தலைமை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்கிற மனோபாவம் வந்திடுமோ, அல்லது பழைய பிளாஷ்பேக் வருமா இல்லையா? ஏனென்றால் ஓபிஎஸ் முன்னாள் முதலமைச்சராக இருந்தவர்.
இன்னொரு பக்கம் என்ன சொல்கிறார்கள் என்றால் 'ஒபிஎஸ்க்குதான் ஒன்னுமே இல்லையே. தினகரன் மாதிரியே இருந்துட்டு போகட்டும். நம்ம கட்சியில் சேர்க்க வேண்டாம்' என்ற பேச்சு உள்ளது. தினகரனையோ, சசிகலாவையோ, ஓபிஎஸையோ நாங்கள் சேர்த்து கொள்ள மாட்டோம் என்று ஒரு தீர்மானத்தை போட்டு வச்சிருக்காங்க. அதனடிப்படையில் கட்சியில் இணைக்க வேண்டாம். ஆனால் என்டிஏ கூட்டணியில் வருவதில் என்ன பிரச்சனை இருக்கு? என இபிஎஸ் சொன்னதாக கேள்வி.
இதனால் பாஜக கூட்டணிக்குள் ஓபிஎஸ் வந்துவிடுவார் என்பதுதான் நமக்கு வருகின்ற செய்தி. பாஜகவுடைய திட்டம் என்பது ஒருங்கிணைந்த அதிமுக. அதிமுக கட்சிக்குள் சேர்ந்தாலும் சரி அல்லது கூட்டணிக்குள் சேர்த்தாலும் சரி. ஆனால் கட்சிக்குள் சேர்ப்பதைவிட கூட்டணிக்குள் சேர்ப்பதை தான் பாஜக விரும்பியது என்று சொல்கிறார்கள். கூட்டணிக்குள் அன்புமணி, தினகரன், வாசன் போன்றவர்கள் பாஜகவோடு தான் இருக்கிறார்கள். ஓபிஎஸ் வந்தாலும் பாஜாகவோடுதான் தான் இருப்பார். நீங்கள்(அதிமுக) எங்களுக்கு (பாஜகவிற்கு) 60 முதல் 70 இடத்தை கொடுத்துடுங்க. நீங்கள் நினைக்கிற இடத்தில் நில்லுங்கள். மற்றவர்கள் எல்லாம் பாஜக உடைய தாமரை சின்னத்தில் நிற்பார்கள் என்ற செய்தியும் வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/02/240-2026-02-02-16-27-52.jpg)