தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராகவும், கர்நாடகா மாநில அதிமுக மாநிலச் செயலாளராகவும் பதவி வகித்து வந்த வா.புகழேந்தி  ‘புரட்சி அதிமுக’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். இன்று முன்னாள் முதல்வர்கள் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோர் நினைவிடங்களில் தனது கட்சியினருடன் மலர் தூவி மரியாதை செலுத்திய புகழேந்தி பின்னர் பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்னர் கட்சி தொடங்கியதற்கான காரணம் குறித்து நக்கீரனுக்கு பிரத்யேக பேட்டி அளித்தார்.
Advertisment
49
'Edappadi Palaniswami is the 'common enemy' - BJP alliance will lose deposit' - PADMK's Pugazhendi takes action Photograph: (PADMK)
''ஏப்ரல் மாதத்திலேயே நான் கட்சியை பதிவு செய்து வைத்திருந்தேன். எப்போது இந்த நான்கு பேர் நான்கு பிரிவுகளாக பிரிந்து பாஜகவிற்கு அடிமையாக மாறினார்களோ அப்பொழுதே இந்த சிந்தனை எனக்கு தோன்றியது. பெரியார் எப்படி சுயமரியாதை இயக்கம் கண்டரோ அதே சுயமரியாதை உணர்வுடன் ஒரு இயக்கத்தை ரிஜிஸ்டர் செய்தேன்.  தேர்தல் ஆணையம் அக்டோபரில்  சில குறைகளை கண்டுபிடித்து திரும்பவும் பெட்டிஷன் போட சொன்னார்கள். அதைப் போட்டு இப்போதுதான் அது முடிந்தது. ஆகவே இந்த நேரத்தில் இது தேவை. பாஜக உள்ளே வரத் துடிக்கிறது. கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தந்தை பெரியார் துவக்கிய இயக்கம். பேரறிஞர் அண்ணாவை ஆட்சிக் கட்டிலில் அமர்த்திய இயக்கம், எம்ஜிஆர், ஜெயலலிதா, கலைஞர் என இப்பொழுது தமிழகத்தை ஆளக்கூடிய ஸ்டாலின் என 50 வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
Advertisment
திமுக ஒன்னும் ஒபிஎஸ்க்கு அழைப்பு விடவில்லை. அவராக போய் சேர்ந்து கொண்டார். ஓபிஎஸ் சென்றுதான் திமுக ஜெயிக்க போகிறதா? திமுக ஏற்கனவே ஸ்ட்ராங்காக இருக்கிறது. கூட்டணி வலிமையாக இருப்பதால் திமுக வெற்றி பெறும். இது என்னுடைய சொந்த கருத்து. தனி கட்சிங்கறது ரிஜிஸ்டர் பண்ணனும். ஏதோ மன்னார் அன்ட் கோ கம்பெனி மாதிரி ஆரம்பிச்சுட்டு ரோட்ல சொல்லிட்டு போறது இல்லை. நான் தெளிவாகே இருக்கிறேன். டெல்லி தெருக்களில் இதற்காக  அலைந்து கட்சியை உண்டாக்கி இருக்கோம். எந்த காலத்திலும் பாஜக இங்கே எந்த விதத்திலும் வெற்றி பெறக் கூடாது என்பதுதான். என்னுடைய கருத்து. எங்க கட்சியின் பொது எதிரி எடப்பாடி பழனிசாமி ,பாஜக கூட்டணி 234 தொகுதியிலும் டெபாசிட் இழக்கப்பட வேண்டும் என்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். அதில் நான் வெற்றி பெற்று காண்பிப்பேன்.
இப்போது நான் அண்ணா அறிவாலயத்திற்கு போனால் கூட என்னை யார் வேண்டாம் என்று சொல்வார்கள். தவெக போனால் கூட என்னை யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இருந்தாலும் நாங்கள் ஒரு இலக்கை நோக்கி போகிறோம். எங்களால் தேர்தலில் போட்டியிட முடியாது ஷார்ட் பீரியட் இது. 234 தொகுதி கேண்டிடேட் போட முடியாது. பூத் கமிட்டி போட முடியாது. எங்களிடம் எல்லாம் ஸ்ட்ராங்காக இருக்கிறது என்று பொய் சொல்ல விரும்பவில்லை. புகழேந்திக்கு தமிழ்நாடு முழுக்க, குக்கிராமம் வரைக்கும் நல்ல பெயர் இருக்கிறது. யாரை ஆதரிக்க வேண்டும் என்பதை நாங்கள் பொதுக்குழு கூட்டி ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சேர்ந்து முடிவு செய்வோம். ஜெயலலிதா இருக்கும் பொழுது 69% இட ஒதுக்கீட்டை பெற்று தந்தபோது சமூகநீதி காத்த வீராங்கனை என்று ஆசிரியர் வீரமணி உரிமையோடு சொன்னார்கள். ஒரு காலத்தில்  போயஸ் தோட்டத்தில் சீட்டுக்கு கெஞ்சி பிச்சை எடுத்தவர்கள் பின்னால் டெல்லியிலே அலைகிற நிலை பழனிசாமிக்கு ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் போடுகிற பிச்சையை வாங்கி ஆட்சிக்கு வர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி ரொம்ப துடிக்கிறார். அது முடியாது. ஆகவே டெல்லி போய் இந்த திராவிட இயக்கம் தெருவில் நிற்கும் நிலையை ஏற்படுத்தினால்இதை வேடிக்கை பார்க்க முடியாது. திமுக இங்கு உட்கார்ந்து கொண்டே அரசியல் செய்து கொண்டு இருக்காங்க. அவர்களுடைய தனித்தன்மையை விட்டு கொடுக்கவில்லை. காங்கிரஸை இங்கே வரச்சொல்லி அரசியல் பண்றாங்க.  அண்ணா ஆகட்டும்,  எம்ஜிஆர் ஆகட்டும், ஜெயலலிதா ஆகட்டும் கலைஞர் ஆகட்டும் யாராகட்டும் திராவிட ஆட்சியில் பங்கு கொடுக்கவில்லை. காங்கிரஸ் உடைய சப்போர்ட்டில் தான் திமுக இருந்தது. அப்போது கூட 'தந்தை பெரியார் பேரனுக்கு நெஞ்சத்தில் இடம் இருக்கிறது ஆனால் ஆட்சியில் கொடுக்க முடியாது 'என்று கலைஞர். அப்படி தேசிய இயக்கத்தை உள்ளே விடாமல்  திராவிடன் ஐடியாலஜி ஆண்டு கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு இப்போது ஒரு பெரிய ஆபத்து வந்துவிட்டது.