'Early elections in Tamil Nadu... Why? Why?' - R.K. Radhakrishnan explains Photograph: (politics)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
தேர்தல் நெருங்கினாலும் இன்னும் தேர்தல் களத்தில் எல்லா கட்சிகளிலும் தொகுதிப் பங்கீடு முழுவடிவம் பெறாமல் இருக்கிறதே? உங்கள் பார்வை என்ன?
'தேர்தல் வந்துருச்சு தேர்தல் வந்துருச்சு' என சொல்லிக்கொண்டு தான் இருக்கிறோம். தேர்தல் வந்த வண்ணம் கிடையாது. பிப்ரவரி இறுதி வாரத்தில் அனௌன்ஸ்மென்ட் வரும் என நினைக்கிறேன். ஏப்ரல் முதல் வாரத்தில் இரண்டாவது வாரத்தில் தேர்தல் நடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே நேரம் இருக்கிறது. யாரும் பதட்டப்பட வேண்டிய அவசியம் கிடையாது. வழக்கமாக ஜனவரியில் இருந்து தான் தேர்தல் ஃபீவர் ஆரம்பிக்கும் டைமாக இருக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு வருடமாகவே தேர்தல் வண்டி ஓட்டிட்டு இருக்கோம். இது இந்த காலத்து ஊடகங்கள் உடைய ஒரு தன்மையாகதான் பார்க்க வேண்டியதாக இருக்கிறது. ஏனென்றால் 2026 தேர்தல் என்று பேசும்போது ஐபால்ஸ் அதிகமாக வருகிறது என்று நினைக்கிறேன். அதேபோல் விஜய்யின் தாக்கம். விஜய் அரசியலுக்கு வந்துள்ளதால் பல இளைஞர்களுக்கு எல்லாம் நிறைய இன்ட்ரஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதனால் அரசியல் என்பது இயற்கையாகவே தமிழ்நாட்டில் ஒரு பேசு பொருளாக மாறுகிறது.
சாதாரணமாக ஒரு தேர்தலை எடுத்து பார்த்தால், 2021, 2024, 2019, 2011 ஆகிய தேர்தல்களை எடுத்துப் பார்த்தால் ஏறத்தாழ டிசம்பர், ஜனவரி வரும்போதுதான் தேர்தல் பேச்சுக்கள் சூடுபிடிக்கும். இரண்டாவது எல்லா கூட்டணியிலும் எல்லா காலத்திலும் பிரச்சனை இருக்கத்தான் செய்யும். ஒன்று யாரை கூட்டணிக்குள் இழுத்து போட முடியும் என்ற பிரச்சனை. ஏறத்தாழ 2019-இருந்து திமுக கூட்டணியில் பெரிய மாற்றங்கள் எல்லாம் இல்லாமல் இருக்கிறது. மதிமுக, கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ் இவர்கள் எப்போதுமே திமுக கூட தான் இருக்காங்க. அதிமுக கூட்டணியில் தான் மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது. 2021ல் பாஜக கூட இருந்தாங்க 2024-ல் தனியாக போட்டியிட்டார்கள். இப்போது 2026-ல் மறுபடியும் பாஜக கூட போறாங்க. அங்குதான் மாற்றங்கள் வருகிறது, அங்கதான் பிரச்சனைகளும் வருகிறது. பாமக ஒரு பிளவுபட்ட ஒரு நிலையில் உள்ளதை பார்க்க முடிகிறது. இளைஞர்கள் ஏறத்தாழ 40 வயது வரை இருக்கும் நபர்கள் வந்து அன்புமணியோடும் அதற்கு மேல் இருக்கும் வயதான நபர்கள் வந்து ராம்தாஸ் உடனும் இருப்பதை பார்த்து கொண்டிருக்கிறோம். பாமகவில் பிரச்சனை இருக்கிறது.
பாக்கி எல்லாம் சிங்கிள் மெம்பர் கட்சிகள் தான். பரிவேந்தரின் ஐஜேகே, ஜான் பாண்டியன் கட்சி போன்றவைகள் உள்ளன. பாரிவேந்தர் ஒரு காலத்திலும் உலகத்தில் எங்கே நின்றாலும் ஜெயிக்க முடியாது. ஆனால் அவரை திமுக ஜெயிக்க வைக்கிறது. பெரம்பலூரில் ஜெயித்த பிறகுதான் பரிவேந்தருக்கு தெரிகிறது பாஜகவுடன் சேர்ந்தால் நமக்கு இன்னும் பெசிலிட்டீஸ் ஜாஸ்தியா இருக்கும், நம்ம கல்லூரியில் ரெய்டு வராது என்று நினைத்தார். அதேபோல் ரெய்டு வரவில்லை. ஏ.சி.சண்முகமு அதே மாதிரியான ஒரு நபர்தான் இருக்கிறார். சிங்கிள் மெம்பர் பார்ட்டி என்று எடுத்துக் கொண்டாலே அதற்கு காரணம் எதற்காக அவர்கள் இருக்கிறார்கள்? பூவை ஜெகன்மூர்த்தி எதற்காக இருக்கிறார் அதேமாதிரி கொங்கு மண்டலத்தில் இருக்கிற ஒருவர் கவுண்டர் கட்சி வைத்துள்ளார். இப்படி சாதி கட்சிகள் இரண்டு கூட்டணியிலும் இருக்கத்தான் செய்கிறது.
Follow Us