'Double-digit block system; a problem in Coimbatore' - Election Histories Photograph: (election)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் ஐ நா அதிகாரி கண்ணன் தமிழக அரசியல் களத்தில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை நக்கீரன் டிவியில் பகிர்ந்துகொண்டார்.
முன்பெல்லாம் வாக்குச்சாவடிகள் உள்ளே புகுந்து மொத்த பெட்டியையும் களவாடிக் கொண்டு சென்றதெல்லாம் ஒரு காலத்தில் நடந்தது உண்டு. பீகார் மாதிரி இடங்களில் நடந்துள்ளது. நம்ம தமிழகத்தில் இந்த மாதிரி எதுவும் நடந்தது கிடையாது எனக்கு தெரிஞ்சு. பல முறைகேடுகள் குறைந்து போயிடுச்சு. 20, 25 ஆண்டுகளாக கர்நாடகத்தில் தொடங்கிய அந்த பழக்கம் இப்போது நம்மிடம் ஒன்றிப் போய் இருக்கு. அது என்னவென்றால் வாக்குக்கு பணம் தருவது. அது முன்னாடியே இருந்தது 1952க்கு பிறகு வந்த தேர்தல்களில் 57 தேர்தலில் 62 தேர்தல்களில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் காங்கிரஸார் பணம் தருவதாக சொன்னார்கள். பணம் தந்து ஒரு சாமி படத்தின் முன்பாக உங்களை சத்தியம் செய்ய சொல்வார்கள். 1962 தேர்தலில் காஞ்சிபுரத்தில் அண்ணா தோற்று போனார். அப்போதெல்லாம் ஒரு வாக்குக்கு அதிகபட்ச விலை ஐ ரூபாய். ஓட்டுக்கு பணம் கொடுக்கும் முறை அன்றே இருந்தது. ஆனால் பரவலாக இல்லை. இன்னைக்கு கிட்டத்தட்ட ஐந்து வாக்குகளில் ஒரு வாக்கு விலைக்கு வாங்கப்படுகிறது என்று நான் நினைக்கிறேன். குறைஞ்சபட்சம் ஐந்து வாக்குகள் விழுகிறது என்றால் அதில் நான்கு தன்னிச்சையாக ஒருவேளை விழலாம். காசு கூட வாங்கி இருக்கலாம் சில பேர். ஆனால் அவர்களே முடிவு செய்து காசு வாங்கிய பிறகும் யாருக்கு போட வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் ஒரு வாக்காவது விலைக்கு வாங்கப்படும் வாக்காக மாறி இருக்கும் ஒரு நிலையை நாம் இங்கே தமிழகத்தில் பார்க்கிறோம்.
ஒவ்வொரு தேர்தலிலும் பல வித்தியாசமான புதுமையான சில வேடிக்கையான நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கிறது உண்டு. 1952 தேர்தலிலும் 57 தேர்தலிலும் இரட்டை இலக்கத் தொகுதிகள் இருந்தது. உதாரணத்திற்கு மயிலாப்பூர் தொகுதியில் நாம் இப்போது பேசிக்கொண்டு இருக்கிறோம். இந்த மயிலாப்பூரில் இரண்டு வேட்பாளர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வாக்காளருக்கும் இரண்டு வாக்கு இருக்கும். ஒன்று பொதுப்பட்டியல். மற்றொன்று தனிபட்டியல். அந்த தனிப்பட்டியலில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே போட்டி போட முடியும். அதுதான் 'புனே ஒப்பந்தம்'. அம்பேத்கருக்கும் காந்திக்கும் இடையே வந்த புனே ஒப்பந்தம். வாக்காளர் பட்டியலும் பட்டியல் இனத்தவராக இருக்க வேண்டும். வாக்காளர்களும் பட்டியல் இனத்தவராக இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு வேண்டியவர்களை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள். 'அப்படி வேண்டாம் அது மக்களை பிரிக்கக்கூடிய முயற்சி' என்று சொல்லி காந்தி உண்ணாவிரதம் இருந்தார். அம்பேத்கர் சொன்னார் 'உங்களுக்கு வேண்டிய பட்டியல் இனத்தவர்கள் தான் வென்று வருகிறார்கள். உண்மையிலேயே ரொம்ப தாழ்வு நிலையில் இருக்கும் பட்டியல் இனத்தவர்கள் வென்று வருவதில்லை. காங்கிரஸுக்கு வேண்டியவர்கள் தான் வென்று வருகிறார்கள்' என்று அம்பேத்கர் சொன்னார்.
இந்த மாதிரி இரட்டை முறை இரட்டை இலக்க தொகுதிகள் வந்து பல தொகுதிகளில் இங்கு இருந்தது. அதில் ஒரு சின்ன சிக்கல் 1957 தேர்தலில் வந்தது. கோயம்புத்தூரில் இரட்டை இலக்க தொகுதியில் தோற்ற பட்டியலினத்தை சேர்ந்த ஒருவர் அதேதொகுதியில் பொதுப்பட்டியலில் வென்றவரை காட்டிலும் அதிகமான வாக்குகளை பெற்றிருந்தார். இது ஒரு குழப்ப நிலையை உண்டாக்கிவிட்டது. இது ஒரு சிக்கலை கொண்டு வந்தது. அதன்பிறகு இரட்டை தொகுதிகள் முறையை 1962 தேர்தலில் இருந்து ஒழித்துவிட்டார்கள். அதற்கு பிறகு தனித்தொகுதிகள் கொண்டுவந்தார்கள். அங்கு ஒரே ஒரு வாக்குதான். பட்டியல் இனத்தவரை சேர்ந்தவர்கள் மட்டும் தான் நிற்க முடியும் அல்லது மலைவாழ் மலை ஜாதியினர் மட்டும் தான் நிற்க முடியும். அவர்களுக்கு பொதுவாக உள்ள எல்லோரும் வாக்களிப்பார்கள் என்ற முறை வந்தது. புனே ஒப்பந்தத்திற்கு முன்பாக அம்பேத்கர் நினைத்தது மலைவாழ் மக்கள் வேட்பாளரை மலைவாழ் மக்கள் மட்டும் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். பட்டியலின மக்களின் வேட்பாளரை பட்டியலின மக்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். அதுதான் அரசியலமைப்பு என இருக்க வேண்டும் என அம்பேத்கர் நினைத்தார். காந்தி அதை மாற்றி விட்டார். அதனால் இப்போது சட்டமன்றத்திலும் தனிப்பட்டியல் இருக்கிறது, நாடாளுமன்ற தேர்தல்களிலும் தனிபட்டியல் இருக்கிறது.
Advertisment
Follow Us