தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துரோகி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் பாஜக கூட்டணி குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
டி.டி.வி.தினகரன் ஒரு கட்சி வைத்திருக்கிறார். அதிமுக உடன் கூட்டணியில் இணைந்துள்ளார் . எப்படி பார்க்கறீங்க?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/222-2026-01-24-14-40-29.jpg)
''பத்திரிக்கையாளர்கள் டிடிவியிடம் கேட்குறாங்க 'யாருங்க முதலமைச்சர் வேட்பாளர்' என்று அதற்கு உங்களுக்குதான் தெரியுமே என்கிறார். அப்போது என்ன நிர்பந்தம் தினகரனுக்கு பாஜக-அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க. மோடி, அமித்ஷாவின் ஆசை நிறைவேறுவதற்கு நீங்கள் வருகிறீர்கள். சில மாதங்களுக்கு முன்புதான் நாங்கள் என்டிஏ கூட்டணியை விட்டு வெளியேறுக்கிறோம் என்று சொன்னார் தினகரன். அப்போது அமமுக தொண்டர்கள் எல்லாம் வெடி போட்டு கொண்டாடினார்கள். சமூக வலைத்தளங்களில் அமமுகவுடைய தொண்டர்கள், இரண்டாம்கட்ட தலைவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இப்போது இப்படி திருப்பிப் பேசிறீங்க.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகமே எப்படி திமுக எதிர்ப்பில் அதிமுக ஆரம்பிக்கப்பட்டதோ அது மாதிரி அதிமுக, குறிப்பாக எடப்பாடியுடைய எதிர்ப்புக்காக ஆரம்பிக்கப்பட்டது தான் அமமுக. எடப்பாடியிடம் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கைதான். இப்போது அதே எடப்பாடியை முதலமைச்சர் வேட்பாளராக நீங்கள் ஒத்துக் கொண்டுதான் போறீங்கள். உங்கள் தொண்டர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி இருக்கிறது. எடப்பாடிக்கும், டிடிவிக்கும் மானம் ரோஷம் எல்லாம் கிடையாதுங்க. அரசியலில் எல்லாம் ஒன்னு என்று சொல்லுவீர்கள். உங்களுக்கு நெருக்கடி இருக்கும். பல்வேறு வழக்குகள் இரண்டு பேருக்கும் இருக்கிறது.
இதே தினகரன் சொன்னார் சசிகலா பெங்களூருக்கு சிறைக்கு போவதற்கு முன்பாக கூவத்தூரில் நடந்த நிகழ்வை பற்றி தினகரன் கொடுத்த பேட்டி இன்னைக்கு ஒளிபரப்புறாங்க. ''நான்தான் முதலமைச்சர் என்று தயவு செய்து இப்பொழுது யாரிடமும் சொல்ல வேண்டாம். எல்லார்கிட்டயும் கையெழுத்து வாங்கிய பின் சொல்லுங்க என்று எடப்பாடி சொன்னார். ஏனென்றால் என்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று சசிகலாவிடம் சொன்னார்'' என தினகரன் சொல்லியிருக்கிறார். எடப்பாடி காலில் விழுந்ததை எல்லாம் திருப்பி திருப்பி மக்கள் பார்த்துட்டாங்க. ஆனால் 'எடப்பாடி என்றால் துரோகம். எடப்பாடியோட கூட்டு சேருவதற்கு பதிலாக தூக்கில் தொங்கலாம்' என்று சொன்னவர் டி.டி.வி.
இப்போது தினகரன் தூக்கில் தொங்க போறாரா? இதையெல்லாம் சொன்னது ரொம்ப காலத்திற்கு முன்பு எல்லாம் கிடையாது. சில மாதங்களுக்கு முன்பு தான். நல்லாட்சி வர வேண்டும் அதற்கு எடப்பாடியை ஆதரிக்கிறோம். அம்மா ஆட்சி வர வேண்டும் அதற்காக எடப்பாடியை ஆதரிக்கிறோம் என ஒத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு எதுவும் இல்லை உங்கள் தொண்டர்களுக்கு இருக்கும் இல்ல. உங்க தொண்டர்கள் இதை எப்படி எதிர்கொள்வார்கள். நீங்க என்ன சொல்லி கட்சி ஆரம்பிச்சீங்க. அதெல்லாம் விடுங்க நேற்று கூட்டணியில் டி.டி.வி.தினகரன் சேர்ந்த பிறகு பேட்டி கொடுக்கும் போது பின்னாடி 'எடப்பாடிக்கு டெபாசிட் போயிடும்னு உங்க ஆளு கத்துறாரு அதையும் காதில் வாங்காமல் நிக்கிறீங்க. எவ்வளவுதான் நீங்க மான ரோஷம் இல்லாமல் இருப்பீங்க...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/224-2026-01-24-15-21-07.jpg)