Advertisment

'அயோத்திதாச பண்டிதர்  பற்றி சீமான் சொல்லித்தான் தெரியணுமா?'-ஆவேசமான சங்கத்தமிழன்

408

'Does Seeman have to tell us about Ayothidasa Pandit?' - An angry Sangam Tamilian Photograph: (vck)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேமுதிக திமுக கூட்டணிக்குள் சென்றுள்ளது. தொடர்ந்து திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
Advertisment
இந்நிலையில் விசிகவின் சங்கத்தமிழன் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
Advertisment
405
vck Photograph: (sangatamilan)
தலித்துகளை தவெக பாதுகாக்கும் என்று விஜய் சொல்கிறாரே?
தமிழ்நாட்டில் பல பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு. தலித்துகளை எல்லாம் பாதுகாப்போம். புரட்சியாளர் அம்பேத்கரை கொள்கை தலைவர்களாக வைத்துள்ளோம் என்று சொல்கிறார்களே நீதிமன்றமே கவினுடைய படுகொலையில் ஏன் அந்த அம்மாவை ஏன் கைது செய்யவில்லை என்று கேட்டுள்ளது. ஆனால் சிபிசிஐடி இதுவரைக்கும் கைது பண்ணவில்லை. கூட்டணியில் இருந்தாலும் திருமாவளவன் அதுகுறித்து பதிவு போட்டிருக்கார். இன்னொன்று அதே தூத்துக்குடி ஏரியாவில் ஜீவானந்தம் என்ற பையனை அடிச்சிருக்காங்க. பயங்கரமான கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதையும் தலைவர் பதிவில் தட்டிக் கேட்டுள்ளார்.
காஞ்சிபுரத்தில் கிரி என்ற ஒரு தம்பி எதார்த்தமாக போய் ஒரு கட்சியின் விளம்பர அட்டைக்கு பக்கத்தில் சிறுநீர் கழித்துள்ளார். அதற்கு அவனை அடித்து கொலை வெறி தாக்குதல் நடத்தி வன்கொடுமை செய்துள்ளார்கள். வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு அந்த பையனை முட்டி போட வைத்து டார்ச்சர் பண்ணி இருக்காங்க. எங்க தலைவர் பதிவு போட்டுள்ளார். நாங்கள் கூட்டணியில் இருந்தாலும் அவன் ஒன்றும் எங்கள் கட்சிக்காரன் இல்லை. எங்கேயோ ஒரு நிகழ்வு நடந்திருக்கு. தமிழ்நாட்டில் நடந்திருக்கு என்று ஒரு பதிவு போடுகிறோம். நான் தான்டா அடுத்த முதல்வராக போறேன் என்று சொல்லும் விஜய் இது மாதிரியான நிகழ்வுகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும், களத்திற்கு போக வேண்டும். அவன்தான் களமாட கூடிய அரசியல்வாதி. அப்போது நீ யாரு? நீ வெறும் சினிமாக்காரன் என்று நாங்கள் சொல்வது என்ன மாற்று கருத்து இருக்கிறது.
விஜய்யிடம் இருக்கும் கும்பல் நம்ம சீமான் கும்பல் மாதிரியே தற்குறி கும்பல். அதற்கு இணையாக ஈடு கட்டுற மாதிரி இந்த கும்பலும் போய் இறங்கி இருக்கிறார்கள். அந்த தற்குறிகளை முழுமையாக நாங்கள் அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. ஏனென்று கேட்டால் சீமான் செய்ததை முக்கியமாக எல்லோரும் கேட்க வேண்டும். திருமாவளவன் ஒரு வாரத்துக்கு முன்னாடி சொன்னார் 'இன்னைக்கு தந்தை பெரியாரை இழிவாக பேசுறாங்க. போகட்டும் என்று விட்டு வைத்தால் நாளைக்கு அம்பேத்கரை ஒரு மராட்டியன் என்று பேசுவார்கள்' என்று திருமாவளவன் வருங்காலங்களை உணர்ந்து சொல்லியுள்ளார்.
சீமான் போட்ட மாநாட்டில் அதை அப்படியே சொல்கிறார். அயோத்திதாச பண்டிதர் எவ்வளவு பெரிய ஆள் என்று சீமான் சொல்லித்தான் தெரியணுமா? யாருக்கும் தெரியாதா இந்த உலகத்தில். அயோத்திதாச பண்டிதர் என்ற ஒரு மாபெரும் அறிஞர் திராவிடம் என்ற சொல்லாடலை இந்த மண்ணுக்கு கொடுத்த போராளி. அயோத்திதாச பண்டிதரை விட அம்பேத்கர் பெரிய ஆளா? என்பது போன்று சீமான் பேசுகிறார். அம்பேத்கரை கொச்சைப்படுத்துவது போல் சீமான் பேசுகிறார். அப்போது சீமான் தற்குறியா இல்லையா? அதற்கு ஈடு இணையாக தவெக தற்குறி கும்பலும் கூட்டிக்கொண்டு திரிகிறது. இந்த தற்குறிகளை எல்லாம் அரசியல்படுத்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் எங்க தலைவர் என்னை ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் போகச் சொல்லி இருக்கிறார்.
sangatamizhan vck seeman Naam Tamilar Katchi tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe