தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/13/313-2026-02-13-20-04-06.jpg)
2021 ஆம் ஆண்டுக்கு பிறகு தற்போது திமுக என்ன நிலையில் இருக்கிறது?
காங்கிரஸில் உள்ள சில திமுக எதிர்ப்பாளர்கள் கூட்டணி ஆட்சி பற்றி பேசுகிறார்கள். அது அவர்களுக்குத்தான் நஷ்டம். போன முறை 25 இடங்களில் காங்கிரஸ் நின்றார்கள். இப்போது நீங்கள் இருக்குங்கள் என்று காங்கிரஸிடம் திமுக சொல்லவில்லை போய்விடுங்கள் என்றும் திமுக சொல்லவில்லை. எனக்கு தெரிஞ்சு 2018, ஆகஸ்ட் 28 தேதி திமுக தலைவராக ஸ்டாலின் வந்ததற்கு பின் ஐடியாலஜி சார்ந்து திமுக கூட்டணியை உருவாக்கி வருகிறார். விஜயகாந்த் கட்சியை திமுக சேர்க்கவில்லை. பாமகவை சேர்க்கவில்லை. செல்வாக்கு பெற்ற கட்சிகள் தான் என்றாலும், மாறாக பாஜக எதிர்ப்பு உள்ள ஐடியாலஜி உள்ள கட்சிகளை சேர்த்துள்ளார். வேறு யாரையும் ஸ்டாலின் சேர்க்கவே இல்லை.
ஒன்றிய அரசின் ஆதரவு இல்லாமல், நிதி இல்லாத போதும் திமுக அரசு மக்களுக்காக திட்டங்களை செய்கிறது. அது திமுகவின் சாமர்த்தியம். அதனால் வாழ்க்கை தரம் உழைக்கும் மக்களுக்கு உயர்ந்துள்ளது. உழைக்கும் கூலித்தொழிலாளியாக இருக்கும் ஒரு ஆணுக்கும், கூலித்தொழிலாளி மனைவிக்கும் வாழ்க்கை தரம் முன்பை விட இப்போது தரம் உயர்ந்திருக்கிறது. பட்டினி சாவே தமிழ்நாட்டில கிடையாது. கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறது. அரசு பள்ளிக்கூடங்களில் கல்வியின் தரம் உயர்ந்திருக்கிறது. கல்லூரியின் தரம் உயர்ந்திருக்கிறது.
தமிழ்நாட்டில் இருந்து தான் இந்தியாவின் முகங்களாக கல்வியில் பல பேர் போகிறார்கள். விளையாட்டில் இந்தியாவின் முகமாக தமிழ்நாட்டில் இருந்து பல பேர் போறாங்க. செஸ் போட்டி, கேரம் போர்டு போட்டி என புகழை வாங்கி கொடுக்கிறார்கள், குவிக்கிறார்கள். தமிழ்நாட்டின் முகமும் உயர்ந்திருக்கிறது. மக்களோட வாழ்க்கை தரமும் உயர்ந்திருக்கிறது. இதோடு திமுகவும் உயர்ந்திருக்கிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அதிமுகவோட நிலைமை, பாமகவின் நிலைமை, தேமுதிக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இன்றைய நிலையை பாருங்கள். அதிமுக கடந்த 2021ல் இருந்ததை விடவும் மிக கீழ போயிருச்சு. கட்சி கட்டுமானம் உடைந்து போய்விட்டது.
செங்கோட்டையன் அந்த பக்கம் சென்றுவிட்டார். பிரதான கட்சியான அதிமுக பலவீனம் அடைந்து விட்டது. வட மாவட்டங்களில் பிரதானமான எதிர்க்கட்சியாக இருந்த பாமக அப்பா மகன் சண்டையால் டேமேஜ் ஆகிக் கிடக்கிறது. தேமுதிக விருப்ப மனு வாங்க ஆளே இல்லாமல் கிடக்கிறது. விஜயகாந்த் இருக்கும் போதே தேமுதிக செல்வாக்கு உள்ள 60 தொகுதியில் நின்று தொகுதிக்கு 3000 ஓட்டு தான் வாங்கினார்கள். டெபாசிட் காலி. ஆனால் திமுக 2021 ல் இருந்ததை விடவும் இந்த நான்கரை ஆண்டு ஆட்சியின் சாதனை என்பது பிரம்மாண்டமான வளர்ச்சியாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/13/346-2026-02-13-20-06-54.jpg)