தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மருத்துவரும், அரசியல் விமர்சகருமான காந்தராஜ் நக்கீரன் டிவியில் தன்னுடைய அரசியல் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/06/269-2026-02-06-15-51-40.jpg)
'எம்ஜிஆர் அரசியலுக்கு வந்த போதும் அவருக்கு என்ன தெரியும் அவரும் ஒரு கவர்ச்சி நடிகர் தானே என்றார்கள். தேர்தல் வந்தது அரசியலில் பழம் தின்னு கொட்டை போட்டவங்க எல்லாம் கோட்டை பக்கமே போக முடியவில்லை. எம்ஜிஆர் ஜெயிச்சாரே? விஜய்யையும் அப்படிப் பார்க்க முடியாதா?
''அந்த விமர்சனம் ஒருவருக்கு தான் உண்டு என்.டி.ராமராவ். எம்ஜிஆரை பற்றி விஜய்க்கு ஒன்னுமே தெரியாது என்பதற்கு இது ஒரு உதாரணம். வேலைக்காரி படம் வந்து மிகப்பெரிய வெற்றியடைந்த உடனே காங்கிரஸ்காரராக இருந்த எம்ஜிஆர் உடனே கதர் சட்டை எல்லாம் தூக்கி எறிந்தார். உடனே கைத்தறி வேட்டியை கட்டினார். நெற்றியில் இருந்த பட்டை நாமம் எல்லாம் அழிச்சாரு. அண்ணா கிட்ட வந்து நான் திராவிட இயக்கத்தை சேர்ந்தவன் என்றார். அப்படி உள்ளே வந்தவர்தான் எம்ஜிஆர். அதன்பிறகு அண்ணாவுடன் படிப்படியாக இருந்து அண்ணாவுடைய நாடகங்களில் எல்லாம் நடிக்கிற அளவுக்கு திராவிட முன்னேற்ற கழக மாநாடுகளில் வந்து எம்ஜிஆர் உடைய நாடகங்கள் நடந்தது. அதெல்லாம் விஜய் தம்பிக்கு தெரியாது.
எம்ஜிஆர் கலைஞர் கிட்ட சண்டை போட்டு போகும்போது கணக்கு கேட்டதாக அன்னைக்கு இருந்த அச்சு ஊடகங்கள் ஒரு பிரச்சனையை உருவாக்கினாங்க. 3% ஊடகங்கள் எல்லாம் எம்ஜிஆர் கணக்கு கேட்டார். கணக்கு கொடுக்கறதுக்கு கலைஞருக்கு யோகிதை இல்லை, தைரியம் இல்லை அதனால் எம்ஜிஆர் நீக்கப்பட்டார் என்று அப்போதைய ஊடகங்கள் சொன்னது. அப்போதுதான் ஒரு கேள்வி எழுந்தது. கட்சியினுடைய பொருளாளர் எம்ஜிஆர். எனவே எம்ஜிஆர் கணக்கு கொடுக்கணுமா அல்லது கலைஞர் கொடுக்கணுமா என்று கேட்டாங்க. இன்னைக்கு வரை அந்த செய்தியை வெளியே விடவில்லை.
கணக்கு கொடுக்க வேண்டியவர் கணக்கு கேட்டார். இன்னைக்கு விஜய்க்கு எப்படி அரசியல் கட்சி ஆரம்பிக்க ஒரு பிராப்ளம் இருக்கோ அதே ப்ராப்ளம் தான் எம்ஜிஆருக்கு இருந்தது. ஹாங்காங்கில் ஹரிலீலா என்ற ஒரு தொழிலதிபர் கிட்ட உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்கு ஒரு 6,000 டாலர் எம்ஜிஆர் கடன் வாங்கினார். அந்த மாதிரி வாங்கின ஒரு 6000 டாலர் கடனுக்கு அன்னைக்கு இருந்த ஒரு சட்டத்தை காட்டி மிரட்டுனார்கள். ஃபெரா (ஃபாரின் எக்ஸ்சேஞ்ச் ரெகுலேஷன் ஆக்ட்) அப்படிங்கிற சட்டத்தின் கீழ் உங்களை ஏன் கைது செய்து ஆறு வருடம் சிறையில் தள்ளக்கூடாது அப்படிங்கறதுதான் எம்ஜிஆருக்கு வந்த மிரட்டல்.
அந்த ஃபெராவிலயும் சரி, மிசாவிலயும் நீங்க எதிர்த்து வாதாட முடியாது. காரணங்களே சொல்லாமல் உங்களை மூணு வருஷம், நாலு வருஷம் ஜெயிலில் வச்சிருக்கலாம். அதில் உள்ளே தள்ளிடுவேன் என்றார்கள். அப்போதுதான் நான் என்ன வேண்டும் என எம்ஜிஆர் கேட்டார். 'திமுகவை விட்டு வெளியே வா திமுகவை உடை' என்றார்கள். விஜய்க்கும் இப்போது அதேதான்.150 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக சொல்லி ஜம்பமா தேவையில்லாமல் கதை விட்ட. விஜய் எடுப்பார் கைப்பிள்ளை. பாவமாக இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/06/271-2026-02-06-15-54-51.jpg)