dmk Photograph: (tvk)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.
தவெக ஒரு அசைக்க முடியாத சக்தியாக வளர்ந்து வருகிறது. தொண்டர்களுடைய ஆதரவு கூட்டம் எங்கே போனாலும் வருகிறது. ஜென்சியை நோக்கியை திமுக நகர காரணமே தவெக தான் என்ற பேச்சும் அடிபடுகிறதே?
தவெகவை பார்த்து திமுக பயப்படுகிறது என யார் சொல்கிறார்கள் என்றால் 'நாதஸ் திருந்திட்டான்' யார் சொன்னா நாதஸே சொன்னான் என்பதை மாதிரி தவெக கட்சியினரே சொல்லிட்டு இருக்காங்க. கடைசியாக நடந்த திமுக இளைஞரணி மாநாடு, அறிவு திருவிழா, அதற்கு முன்னால் இளைஞர் அணி சார்பாக நடந்த வடக்கு மண்டல மாநாடு, திமுக மகளிர் மாநாடு என பல்வேறு மாநாடுகள் நடத்திட்டு இருக்காங்க. விஜய் கட்சி ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிறது. விஜய்யின் பெயரையோ அந்த கட்சியின் பெயரையோ எந்த மாநாட்டிலயாவது எந்த தலைவராவது யாராவது ஒருத்தர் குறிப்பிட்டு பேசிட்டு இருக்காங்களா? யாராவது ஒருத்தர் சொல்லிருக்காங்களா?
ஆனால் விஜய் ஒரு மணி நேரம் பேசினாலும், 10 நிமிஷம், 5 நிமிஷம் பேசினாலும், தெருமுனையில் பேசினாலும், மாநாடு நடத்தி பேசினாலும் திமுகவை மட்டுமே விஜய் பேசுகிறார். திமுக மட்டும் தான் தமிழ்நாட்டில் இருக்கும் கட்சி மாதிரி திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை பற்றி மட்டும் தான் விஜய் பேசுகிறார். வேறு எந்த கட்சி குறித்தும் பேசுவது இல்லை. திமுக மட்டும் தான் விஜய்க்கு தெரிகிறது. மற்ற கட்சிகள் தெரியவில்லை. மாறாக விஜய் பேசுவதற்கு பதில் சொல்லிட்டு அவரை பொருட்டாகவே திமுக மதிக்கவில்லை. எனவே விஜய் கட்சியை பார்த்து திமுக பயப்படுகிறது என விஜய் கட்சியினரே சொல்லிக்கொள்வது தான்.
அதாவது ராத்திரியில் பயந்தவன் சுடுகாட்டு வழியாக போகும்போது அவன் ஒரு பாட்டு படிப்பான் அல்லவா? எனக்கு பயம் இல்லை என பெரிய வீரன் மாதிரி தெரிவதற்கு பாடுவதை மாதிரிதான் விஜய் கட்சியை சேர்ந்தவர்களின் பேச்சு இருக்கிறது. திமுககாரர்கள் குறிப்பாக திமுக தலைவரும், திமுகவின் இளைஞரணி செயலாளர் உதயநிதியும், முக்கிய தலைவர்கள் யாருமே விஜய் என்ற பெயரை சொல்வதில்லை. விஜய் கட்சி பெயரையும் அவர்கள் சொன்னதே இல்லை. விஜய்யை ஒரு பொருட்டாகக்கூட திமுக மதிக்கவே இல்லை என்பதுதான் எதார்த்தம்.
Follow Us