Advertisment

'கூட்டணி ஆட்சி கோரிக்கையால் திமுகவிற்கு வரும் சிக்கல்'-விளக்கிய மதிமாறன்

338

'DMK faces problems due to coalition government demand' - Madhimaran explains Photograph: (dmk)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் திராவிட இயக்க எழுத்தாளரும், பேச்சாளருமான மதிமாறன் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்து கொண்டார்.

Advertisment

313
madhimaran Photograph: (politics)

திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருமா? 

கூட்டணி ஆட்சி என்பது திமுகவின் அடிப்படை கொள்கைக்கு எதிரானது. திமுக ஜனநாயக அமைப்பு தான். ஆனால் ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு கொடுப்போம் என எப்போது திமுக சொன்னார்கள்? திமுக கொள்கை திட்டமே அது கிடையாது. திமுக எதற்காக ஆரம்பிக்கப்பட்டது, ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு கிடையாது. மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி. இதற்குத்தான் தான் திமுக கட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்படி இருக்க திமுக கூட்டணியில் பங்கு கொடுப்பார்களா? 100 சீட்டு ஜெயிச்சபோது கூட கலைஞர் கூட்டணி ஆட்சி வைக்கவில்லை. திமுக கூட்டணி ஆட்சி இல்லை என்று சொல்லி அறிவிச்சுதானே மற்ற கட்சிகள் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள்.

ஒருவேளை ஆட்சியில் பங்கு கொடுத்தால் காங்கிரஸ் நாளை மாநில சுயாட்சிக்கு எதிரான கோரிக்கைகளை செய்ய அது நிர்பந்திக்கும் அதை திமுக பண்ண முடியாது. விடுதலை சிறுத்தைகள் தான் கூட்டணியில் திமுகவிடம் நெருக்கமாக இருக்கிறது. ஆனால் விசிக கூட கலைஞர் கொண்டு வந்த அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடுக்கு எதிராக ஒரு மேல்முறையீடு செய்தார்கள். அதை திமுக ஒத்துக்க முடியுமா? முடியாது. எனவே எந்த வகையிலும் கூட்டணி கட்சிகளின் ஐடியாலஜி உடன் நெருக்கமா போக முடியாது. இதில் ஆட்சி நடத்துவது திமுகவுக்கு சிக்கல் உண்டு. அதனால் என்ன ஆனாலும் சரி தோற்றாலும் சரி ஜெயிச்சாலும் சரி கூட்டணி ஆட்சி இல்லை என்பது திமுகவின் அடிப்படை கொள்கை. இதை புரிந்து கொண்டுதான் வலிமையாக பேசுகிறார்கள்.

காங்கிரஸில் உள்ள சில திமுக எதிர்ப்பாளர்கள் கூட்டணி ஆட்சி பற்றி பேசுகிறார்கள். அது அவர்களுக்குத்தான் நஷ்டம். போன முறை 25 இடங்களில் காங்கிரஸ் நின்றார்கள். இப்போது நீங்கள் கூட்டணியில் இருங்கள் என்று காங்கிரஸிடம் திமுக சொல்லவில்லை, போய்விடுங்கள் என்றும் திமுக சொல்லவில்லை. எனக்கு தெரிஞ்சு 2018, ஆகஸ்ட் 28 தேதி திமுக தலைவராக ஸ்டாலின் வந்ததற்கு பின் ஐடியாலஜி சார்ந்து திமுக கூட்டணியை உருவாக்கி வருகிறார். விஜயகாந்த் கட்சியை திமுக சேர்க்கவில்லை. பாமகவை சேர்க்கவில்லை. செல்வாக்கு பெற்ற கட்சிகள் தான் என்றாலும், மாறாக பாஜக எதிர்ப்பு உள்ள ஐடியாலஜி உள்ள கட்சிகளை சேர்த்துள்ளார். வேறு யாரையும் ஸ்டாலின் சேர்க்கவே இல்லை.

m.k.stalin congress vck dmk alliance parties dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe