Advertisment

விஜய் போட்டியிடும் அதே தொகுதியில்...-உறுதி செய்த திமுக?

289

tvk Photograph: (dmk)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதேபோல் அதிமுக-பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன.

Advertisment

சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் தவெகவும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் அவரது உரையின் இறுதி சாராம்சமாக 'திமுகவுக்கும் தவெகவிற்கும் தான் போட்டியே' என்ற வரி இடம் பெற்று வருகிறது.

Advertisment

முன்னதாக அதிமுகவுடன் தவெக கூட்டணி வைக்கும் என எதிர்பார்ப்பில் இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு பிரம்மாண்ட கட்சி தங்கள் கூட்டணியில் இணைவதாகத் தெரிவித்தது பொய்யாக போன நிலையில் எடப்பாடி போட்ட பிள்ளையார் சுழியும் காணாமல் போனது.

ஆனால் அண்மையில் நடந்த கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில்  விஜய் திமுகவை தன்னுடைய போட்டி கட்சியாக வெளிப்படுத்தியதோடு பாஜகவுடன் கூட்டணியில் உள்ள சிலர் என அதிமுகவை சைலண்ட் கில்லிங் செய்தார். இதனால் மெல்லமாக விஜய் மீது விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளது அதிமுக.

இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் வேளச்சேரி, நாகப்பட்டினம், விக்கிரவாண்டி, விருகம்பாக்கம்  உள்ளிட்ட தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் போட்டியிட வாய்ப்புள்ளதாக ஒரு லிஸ்ட் வெளியாகி இருந்தது. அதேநேரம் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இறங்கியுள்ளது. இந்நிலையில் தவெக விஜய் போட்டியிடும் தொகுதியில் திமுகவே நிற்கும் என்ற முடிவை திமுக எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஒருவேளை நாகப்பட்டினத்தில் விஜய் போட்டியிட்டால் அங்கு ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற விசிகவிடம் பேசி வேறு தொகுதி விசிகவிற்கு ஒதுக்கப்படும் என்ற முடிவை திமுக எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனால் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்பதை முடிவு செய்யும் நேரம் வாந்தாலும், எந்த தொகுதிகள் என்பதை இறுதியாக திமுக தான் முடிவு செய்யும் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

velacherry Nagapattinam dmk. mk.stalin Election dmk tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe