தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து கிட்டத்தட்ட 300 கி.மீ தொலைவில் உள்ள அஸ்வராவ்பேட்டா நகராட்சியில், சாலையில் குக்கர் உடன் பொதுமக்கள் நின்று போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்திற்கான காரணம் தான் ரொம்ப வித்தியாசமானது.
Advertisment
அஸ்வராவ்பேட்டா நகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியில் உள்ள 10வது வார்டில் உள்ள மக்கள் தேர்தலில் தனக்கு வாக்களிக்கத் தவறிவிட்டதாகக் கூறி, வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட பணம் மற்றும் பிரஷர் குக்கர்களை உள்ளிட்டவற்றை திருப்பித் தருமாறு ஒரு காங்கிரஸ் வேட்பாளர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள் தங்களுக்கு விநியோகிக்கப்பட்ட குக்கர்களை சாலையின் நடுவில் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்திய தேசிய காங்கிரஸின் வேட்பாளர் ஒருவர் வாக்குப்பதிவுக்கு முன்னதாக பணம் மற்றும் வீட்டுப் பொருட்களை விநியோகித்ததாகக் கூறப்படுகிறது. அதில் பிரஷர் குக்கர்களும் அடங்கும். ஆனால் தேர்தலில் காங்கிரஸ் பிரமுகர் தோற்றுவிட்டார். இதனால் அதிருப்தி அடைந்த அந்த வேட்பாளர் கொடுத்த பரிசுப் பொருட்களைத் திருப்பித் தர வேண்டும் என்று சொன்னதோடு அப்பகுதி மக்களை கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார்.
Advertisment
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி மக்கள் "நாங்கள் பணமோ அல்லது குக்கரோ ஒருபோதும் உன்னிடம்  கேட்கவில்லை. நீங்களே கொடுத்துவிட்டு இப்போது எங்களை ஏன் அவமானப்படுத்துகிறார்கள்?" என்று குக்கருடன் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
இந்த போராட்டம் பற்றிய செய்தி பரவியதும், கலவரத்தைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு பகுதிகளில் தேர்தல்களின் போது வாக்குகளுக்கு பணம் கொடுத்தல் மற்றும் பொருட்களை விநியோகித்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிமாக எழுவதாக அரசியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். 

வேட்பாளருக்கு எதிராக முறையான புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக உள்ளாட்சி தேர்தல் பிரச்சாரம் மற்றும் வாக்குப்பதிவு காலத்தில், தெலுங்கானா காவல்துறை, தேர்தல் நடத்தை விதிகளை (MCC) மீறியதற்காக  பறிமுதல்களை மேற்கொண்டது. பல வழக்குகலும் பதிவு செய்யப்பட்டது.

காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஷிவ்தர் ரெட்டியின் அறிவிப்பின்படி மொத்தம் ரூ.3.09 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதில் கணக்கில் வராத ரூ.1.29 கோடி ரொக்கம், ரூ.1.21 கோடி மதிப்புள்ள மதுபானம், ரூ.15.7 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள், ரூ.28.69 லட்சம் மதிப்புள்ள விலைமதிப்பற்ற உலோகங்கள் மற்றும் ரூ.13 லட்சம் மதிப்புள்ள இலவசப் பொருட்கள் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment