தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பரப்புரை கூட்டம் நேற்று (23.01.2026) நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர். துரோகி என எடப்பாடிக்கு பட்டம் சூட்டிய டிடிவி தினகரன் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியில் இணைத்திருப்பது பேசு பொருளாகி உள்ளது.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் பாஜக கூட்டணி குறித்த அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
'பியூஸ் கோயலுக்கு விருந்து கொடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ரொம்ப நம்பிக்கையாக பேசுகிறார். தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக இருக்கிறது. 2026ல் இந்த என்டிஏ கூட்டணி வெற்றி பெறும். இதுவரைக்கும் இல்லாத வளர்ச்சியை தமிழகம் அடையும். இது மிகப்பெரிய பிரம்மாண்டமான கூட்டணி மோடி பங்கேற்ற கூட்டத்துக்கு அப்புறம் பெரிய மாற்றம் ஏற்படும் தமிழகத்தில்' என பாஜக கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றனர். உங்க கருத்து என்ன?
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/24/222-2026-01-24-14-40-29.jpg)
''பியூஸ் கோயலும் எடப்பாடியும் பேட்டி கொடுக்கறாங்க. இதுவரை அடையாத வளர்ச்சியை தமிழகம் அடையும் என்கிறார்கள். நான் என்ன கேட்கிறேன். இன்னைக்கு இந்தியாவில் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜிடிபில் நம்பர் ஒன் மாநிலம் தமிழ்நாடுதான். இது ஒன்றிய அரசு கொடுத்த தகவல். நிதி ஆயோக் கொடுத்த தகவல். கல்வியில் இன்னைக்கு மேலோங்கி இருக்கிறது.
உயர்கல்வியில் இன்னைக்கு இந்தியாவிலே உயர்ந்த அதிகப்படியான உயர்கல்விக்கு போகிறவர்கள் தமிழ்நாடுதான். தமிழ்நாட்டை விட எந்த மாநிலம் பெருசா வளந்துருச்சு. ஆனால் தமிழ்நாட்டில் என்னமோ பொருளாதார வீழ்ச்சி மாதிரியும், தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு அப்படியே சீர்குலைந்து பல்லிளித்த மாதிரியும், தமிழ்நாடு பல்வேறு வகையில் சிக்கி இருக்கிற மாதிரியும் கட்டமைக்கிறார்கள்.
ஊழலை விசாரிக்கும் இ.டி உங்கிட்டதான் இருக்கு. சிபிஐ உங்ககிட்ட தான் இருக்கு. விசாரிக்க வேண்டியது தானே. 4 லட்சம் கோடி ஊழல் என்றால் இ.டி, வருமான வரித்துறை அவங்கிட்ட இருக்கு. நீங்கள் போகிற போக்கில் ஒரு விஷயத்தை குற்றச்சாட்டு வைக்கிறீங்களா? அதற்கான ஆதாரங்களை கொடுங்க. நீங்கதான் ஒன்றிய அரசோடு நெருக்கமாக இருக்கீங்க. கூட்டணி வச்சிருக்காங்க.இரண்டாவது இப்போ தினகரனும் எடப்பாடியும் சொல்றாங்க ''இது என் பங்காளி சண்டை; நாங்க பங்காளிங்கதான்'' என்று சொல்கிறார்கள். ஆனால் சமீப காலமாக பேசின பேச்சுகளை நீங்கள் எடுத்து பாருங்கள். எடப்பாடி என்ன சொன்னார் தினகரன் என்ன சொன்னார் என்று பாருங்கள்.
'பச்சை துரோகி எடப்பாடி பழனிசாமி. அதற்காகதான் நான் கட்சியை ஆரம்பிச்சேன். எடப்பாடியை வீட்டுக்கு அனுப்புவதற்குதான் தான் என்னுடைய முதல் நோக்கம்' என்றார் டி.டி.வி. அதற்கு எடப்பாடி ''தினகரன் 420. கட்சியுடைய சின்னத்தை கைப்பற்றுவதற்கு லஞ்சம் கொடுத்தவர். தினகரன் மேல கட்சியை கைப்பற்றுவதற்காக லஞ்சம் கொடுத்தார் என்ற ஒரு கேஸ் இருக்கு. எடப்பாடி குரூப்தான் இந்த மாதிரி கொடுத்தார். அவர் மேல பல்வேறு வழக்குகள்.இப்பொது ரெண்டு பேரும் இணைந்து பங்காளிகள் ஆயிட்டீங்களா?.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/24/223-2026-01-24-14-43-29.jpg)