dmk Photograph: (congress)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.
'தவெக எனும் ஸ்ரீதேவி வந்துள்ளது. நல்ல காலம் வந்திருக்கு. அங்கே போனால் தட்டித் தூக்கலாம் காங்கிரசும் தவெகவும்' என காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் சொல்கிறாரே?
பீகாரில் தேஜஸ்விக்கும் காங்கிரஸுக்கும் இடையில் கூட்டணி ஜெல் ஆகவில்லை கடைசிவரை. இதனால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா போன்ற கட்சிகள் கூட்டணியை விட்டே வெளியே போனார்கள். அந்த மாதிரி நிலைமையை தான் இங்கும் காங்கிரஸ் கொண்டு வந்துட்டு இருக்காங்க நல்லா பாருங்க. அதெல்லாம் யாரால் நடந்துச்சு? பீகாரில் இருக்கின்ற காங்கிரஸ் தலைவர்களால் தான் நடந்துச்சு. அப்போது கூட ராகுல் வாய் மூடி தான் இருந்தார். ஏன் பேசவில்லை? கார்கே வாய் மூடி தான் இருந்தார். அப்போது தோல்விக்கான காரணம் யார்? அங்கு தேஜஸ்வி மட்டுமல்ல காங்கிரஸுமே படுதோல்வி அடைந்தது.
அந்த மாதிரி நிலைமைக்கு இங்கும் போயிட்டு இருக்கு. எல்லோரும் சொல்லலாம் காங்கிரஸை திமுக கழட்டி விட்டு போயிடலாமே என்று, ஆனால் இந்த சூழல் முத்தினால் பீகார் தேர்தல் போன்ற ஒரு சூழல் இங்கும் வந்துவிடும். தவெக ஸ்ரீதேவியா மூதேவியா என்று தேர்தல் முடிந்த பின்னர் தான் தெரியும். விஜய் வந்துவிட்டால் நாம் வெற்றி பெற்றலாம். விஜய்க்கு ஒரு 30 விழுக்காடு ஓட்டு இருக்கிறது. நமக்கு ஒரு 10 விழுக்காடு ஓட்டு இருக்கிறது. மொத்தம் 40 விழுக்காடு இருக்கிறது. தட்டி தூக்கிப் பாருங்கள். யார் உங்களை பிடிச்சுக்கிட்டா? ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டாரா?
தோல்வி அடைந்த இடங்களில் அடுத்தமுறை எந்த கட்சியும் வெற்றி பெறவில்லையா? நீங்கள் வெற்றி பெற்ற இடத்தில் தோற்றுப் போகவில்லையா? 2006-ல் மைனாரிட்டி கவர்மெண்ட் இருந்தது உண்மை. 96 இடங்களில்தான் திமுக வெற்றி பெற்றது. ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? பாட்டாளி மக்கள் கட்சியே அழுத்தம் கொடுக்கவில்லையே. அந்த காலகட்டத்தில் 2006-ல் 96 இடங்களில் திமுக, 34 இடங்களில் காங்கிரஸ், 18 இடங்களில் பாட்டாளி மக்கள் கட்சி என மூன்றும் சேர்ந்துதான் ஆட்சி அமைத்தார்கள்.
அன்னைக்கு சொல்லப்போனால் காங்கிரஸை விட பாட்டாளி மக்கள் கட்சி 18 இடங்களில் எம்எல்ஏ வச்சிருந்தாங்க அப்பொழுதே ஒரு பேச்சு எழுந்தது. கூட்டணியில் உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்துவிட கலைஞர் விரும்பினாராம். 2006-ல் திமுக மைனாரிட்டியாக இருக்கோம். இவர்கள் எப்போது வேண்டுமென்றாலும் ஆதரவு இல்லை என்று சொல்லிடுவாங்க. ஆட்சி போயிடும். அதற்குப் பதிலாக கூட்டணி மந்திரி சபை அமைக்கலாம் என்ற முடிவை கலைஞர் எடுத்தார் என்ற செய்தி வந்தது. அப்படி செய்ய வேண்டாம். எங்களுக்கு அப்படி அமைச்சர் பதவி கொடுத்தால் பல பேருக்கு கொடுக்க வேண்டும். அது இன்னும் எங்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும் என சோனியாகாந்தி சொன்னதாகவும் செய்தி வந்தது. சோனியா காந்திதான் எங்களுக்கு கூட்டணி ஆட்சி வேண்டாம் நாங்கள் வெளியே இருந்தே ஆதரவு கொடுக்கிறோம் என்ற முடிவை எடுத்தார் என வெளியே செய்தி வந்தது. அப்போது ஏன் காங்கிரஸ் அழுத்தம் கொடுக்கவில்லை. 2006-ல் மாணிக்கம் தாகூர் இல்லவே இல்லையா சீன்ல....
Follow Us