Advertisment

ஓபிஎஸ் நிலைமைக்கு காரணமே 'தர்மயுத்தம்'-விளக்கும் புதுமடம் ஹலீம்

237

'Dharma Yuddha' is the reason for the OPS situation - explains Pudumadam Haleem Photograph: (ops)

தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.  

Advertisment

இந்நிலையில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் மற்றும் எழுத்தாளருமான புதுமடம் ஹலீம் அரசியல் கூட்டணி சூழல்கள் குறித்து அவரது கருத்தை நக்கீரன் டிவி யூடியூப் சேனலில் பகிர்ந்துகொண்டார்.

Advertisment
236
politics Photograph: (interview)

எடப்பாடியுடன் கூட்டணி சேர முடியாது எனச் சொல்லிவந்த டி.டி.வி.தினகரனே அதிமுக-பாஜக கூட்டணியில் இணைந்துவிட்டார். ஓபிஎஸ் என்னதான் முடிவில் இருக்கிறார்? 

நாங்கள் (டி.டி.வி) மெயின் பங்காளியே போய் சேர்ந்து விட்டோம். சைடு பங்காளி வந்தா என்ன என்பதுதான் அவர்கள் கேள்வி. தினகரனே போய் சேர்ந்துட்டாரு. ஓபிஎஸ்க்கு என்ன குறைச்சல் சேர வேண்டியதுதானே என்பது தினகரனுடைய பார்வை. இபிஎஸ் உடன் சேர்வதற்கு பதில் நான் நாண்டுக்கு நின்றலாம்னு சொன்ன டிடிவியே போய் சேர்ந்துட்டார். அவர் (ஓபிஎஸ்) அப்படியெல்லாம் பேசலையேங்க.

எனக்கு தெரிந்து ஓபிஎஸ் தர்மயுத்தமே பண்ணிருக்க தேவையில்லை. எதுக்கு தர்மயுத்தம் பண்ணாரு? தினகரனையும் சசிலாவையும் கட்சியை விட்டு விலக்க சொல்லிதான் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தார். தர்மயுத்தம் செய்யாமல் இருந்தாலே இன்னைக்கு ஓபிஎஸ்தான் முதலமைச்சர். இபிஎஸ் வந்திருக்கவே மாட்டார் இந்த சீனுக்கு. தேவையில்லாமல் வந்து ஆளே இல்லாத இடத்தில் டீ ஆத்தி இன்னைக்கு இந்த நிலைமை ஓபிஎஸ்க்கு வந்துவிட்டது. 

திமுகவில் போய் ஓபிஎஸ் சேர்வாரா? சேரமாட்டார். ஏனென்றால் அடிப்படையில் ஒரு முன்னாள் முதல்வர், திமுகவை எதிர்த்து களம் கண்டவர் எனவே  சேர மாட்டார். ஆனால் திமுகவில் போய் சேர்வதை மாதிரி ஒரு சீன் எல்லாம் போட்டார். முதல்வரை போய் பார்த்தார். நடைபயணத்தில் பார்த்தார். அவருடைய ஆட்களை திமுகவிற்கு அனுப்பி பார்த்தார். வைத்திலிங்கத்தை அனுப்பினார், மனோஜ் பாண்டியன் போனார். பல்வேறு ஆட்கள், ஓபிஎஸ் ஆட்களும் இன்னைக்கு திமுக கீழதான் இருக்கிறார்கள். 

திமுகவில் ஓபிஎஸ் சேர்ந்து விடக்கூடாது என்று பாஜக முட்டுக்கடை போடுறாங்க. அடிப்படையில் பார்த்தால் ஓபிஎஸ் திமுகவோடு சேர்வதற்கு தான் விரும்பினார் என்று செய்தி வந்தது. என்ன காரணம் என்றால் இபிஎஸ் உடன் சேர்ந்து கொண்டு திரும்ப இபிஎஸ் தான் தலைவர், இபிஎஸ் தான் பொதுச்செயலாளர் என்று ஓபிஎஸ் அக்செப்ட் செய்தால் தான் அதிமுகவுக்கு ஓபிஎஸ் போக முடியும். உங்களுக்கும் அவருக்கும் ஆயிரம் பிரச்சனை இருக்கு.

சண்டையில், யுத்தத்தில எடப்பாடி வெற்றி பெற்றுவிட்டார் என்று ஓபிஎஸ் ஆமோதித்தால்தான் அதிமுகவில் போய் சேர முடியும். அது ஓபிஎஸக்கு இடம் கொடுக்கவில்லை. தினகரன் நிலைமை என்பது வேறு. தினகரனுக்கு ஏற்கனவே பாஜகவுடன் இருக்கும் உள்ள டீலிங் வேறு. தனி இயக்கம், தனி கட்சி, வைத்துள்ள டிடிவி அதிமுகவில் இணையவில்லை, இரண்டாவது பாஜக கூட்டணிக்கு தான் டிடிவி போயிருக்காரு. ஆனால் ஓபிஎஸ் விஷயம் அப்படி இல்லை. ஓபிஎஸ்-ன் எதிர்பார்ப்பு ஒன்று அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என்று அறிவிக்கப்பட வேண்டும் இல்லை என்றால் திமுகவில் போய் வேண்டும். அதற்குத்தான் இத்தனை பேரை அவர் அனுப்பினார்.

dmk admk amma TTV Dhinakaran edappaadi palanisamy O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe